"இன்னும் இந்த பழைய போனையே வச்சுகிட்டிருக்கீங்களே. எப்ப மாத்தப்போறீங்க?"
"அடுத்த வருசம் ஐ.போன் வந்தவுடனே ஒரேயடியா மாத்திக்கலாம்பா. "
('சாகர அலை'யில் ஒரு டயலாக்)
அதென்ன ஐ-ஃபோன்?
ஐ-போட், கைப்பேசி, இணையம் மூன்றையும் உள்ளடக்கியதும் மின்னணுவியலின் மற்றொரு படியுமான ஐ-ஃபோன் என்கிற புதிய கண்டுபிடிப்பு ஜூன் 29முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இத்தகவலை ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சுமார் $500 - $600 விலையுள்ள இந்த ஐ-ஃபோன் 2008ல் 10 மில்லியன் சாதனங்கள் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கைப்பேசிகளின் வருடாந்திர மொத்த விற்பனையில் சுமார் 1 சதவீதமே ஆகும்.
ராய்ட்டர்
Monday, June 4, 2007
ச- கைப்பேசியை 29 ஜூனுக்குப் பிறகு மாற்றுங்கள்!
Labels:
தகவல் தொழில்நுட்பம்
Posted by வாசகன் at 2:08 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
6 comments:
ஆனால் இந்த ஐ.போன் சிங்குலர் நிறுவனத்துடன் இனைந்த க்ளோஸ்டு மார்க்கெட்டில் வருவதால் இரண்டு மாதங்கள் மந்த நிலையில் தான் இருக்கும்...
மேலும் 500 - 600 டாலர் கொடுத்து வாங்க இயலாதவர்கள் / விரும்பாதவர்கள் LG PRADA KE850 போன்றதொரு டிவைஸை பெற்றுவிடுவார்கள்..(இன்பினியான் ப்ளாட்பார்ம் மற்றும் டச் ஸ்க்ரீன்) - (சுமார் 200 - 300 டாலர் விலையில் விற்பனையில் உள்ளது)
மேலும் கைபேசி தயாரிப்புகளில் பழம் தின்று கொட்டை போட்ட நோக்கியா / மோட்டரோலா / சாம்ஸங் / எரிக்ஸன் / எல்.ஜி / பேனசோனிக் / பெங்குயூ - சீமன்ஸ் போன்ற நிறுவனங்கள் வாளாவிருப்பார்கள் என்று நினைத்தால் - அது தவறு...
நோக்கியா ஏற்க்கனவே தனது டச் ஸ்கீரின் போனுக்கான ப்ரடொக்ஷன் தேதி குறித்துவிட்டது ( மற்ற விஷயங்கள் நிறுவன ரகசியம்) வெளியே சொல்ல இயலாது...
ஐ.போன் நிறுவனம் முதல் மாதத்திலேயே கடுமையான போட்டியை எதிர்நோக்கியுள்ளது என்பது நிச்சய உண்மை...பரந்துபட்ட டீலர் நெட்வொர்க் / இந்த துறையில் பல ஆண்டுகள் அனுபவன் ஆகியவை இந்த நேரத்தில் இந்த நிறுவனங்களுக்கு கை-கொடுக்கும்...
மேலும், இந்த நிறுவனங்கள் ஏற்க்கனவே இணைந்து நடத்தும் 3GPP / OMA (ஓப்பன் மொபைல் அலையன்ஸ்) போன்ற அமைப்புகளில் இருந்தும் சரியான வகையில் ரெஸ்பான்ஸ் கிடைக்காது...
காரணம் இந்த நிறுவனங்களின் (நோக்கியா / எரிக்ஸன்) நெட்வொர்க்கைத்தான் உலகின் அனைத்து ஆப்பரேட்டர்களும் ( ஏர்டெல் / ஹட்ச் போன்ற) பயன்படுத்திவருகிறார்கள்...
ஐ.பாட் விற்பனை ஒரு கோடியை தொட்டபோது நோக்கியா / மோட்டரோலா விழித்துக்கொள்ளவில்லை...ஆனால் தன்னுடைய சீட்டை பிடிக்க வரும் ஐ.போனை கண்டிப்பாக த்ரட் (Threat) என்ற நோக்கிலேயே இந்த கைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும்...
கை பேசி மார்க்கெட் என்பது இந்த நிறுவனங்களுக்கு ப்ரட் & பட்டர் என்று கூட சொல்லலாம்..அதற்கே ஆப்பு என்னும்போது கண்டிப்பாக அதை முறியடிக்க எல்லா முயற்சிகளும் இந்த நிறுவனங்கள் மேற்க்கொள்ளும்..
மேலும் இந்த துறையில் (கைபேசி தயாரிப்பு) புதியதாக நுழைவதால் கடைசி நேரக்குழப்பங்களால் ஜூன் வரை ப்ரொடக்ஷன்/விற்பனை தள்ளி வைக்கப்பட்டது சரி, இனிமேல் வரும் Bugs (காரணம் சந்தைக்கும் வந்தபிறகு தான் ஐ.போனின் உண்மை முகம் தெரியவரும்) எப்படி பிக்ஸ் செய்யப்படுகிறது, சந்தையின் போட்டி எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்துத்தான் ஐ.போனின் எதிர்காலம் அமையும்...
ரவி,
அப்ப ஜூன் 29க்குப் பிறகும் அவசரப்பட்டு மாற்றிவிடவேண்டாமென்று சொல்றீங்க.. அப்படித்தானே..! (அதான், நாம் எந்த வருஷம்னு சொல்லலை :))
உங்களுடைய பின்னூட்டம் விரிவாக விளக்கமாக அமைந்துள்ளதால் 'வாசகன்' மகிழ்ச்சியடைய ஏதுவாக இருக்கிறது.
BYW, நீங்க 'நோக்கியா' லயா வேலை செய்யறீங்க?
LGPrada ஐபோனுடன் ஒப்பிடுகையில் மிகவும் சாதாரணமானதாகவே கருதப்படுகிறது. அடிப்படையில் Prada Adobe Flash Liteல் வேலைசெய்கிறது ஐபோன் OS X operating system பயன்படுத்துகிறது.
ரவி சொல்கிறதுபோல LG prada விலை குறைந்ததாக தெரியவில்லை.
iphone 499 for 4GB versionn 599 for 8GB version.
என் சோனி எரிக்சன் W600i ஓட்மீலில் விழுந்து பாலாபிஷேகம் பெற்றபின்னர் புதிய போன் வாங்க காத்திருக்கிறேன். வரும் அக்டோபரில் அதுக்கு முன்பாக என்னவெல்லாம் வரப்போகுதோ?
சிறில் அண்ணாச்சி,
எனக்கு அடிப்படை தொ.நு வி தெரியாவிட்டாலும், ஐஃபோன், LGயின் Pradaவை விட மேம்பட்டதாக இருக்கும் என்று அதற்கான எதிர்பார்ப்புகளை வைத்தே சொல்லிவிடலாம் போல.....
அப்ப, நீங்க ஒக்டோபர்ல தான் ஃபோன் மாத்துவீங்களா?
நான் இப்போ நோக்கியா...முன்னால எல்.ஜி..
ஆக ப்ராடா பற்றியும் நோக்கியாவின் இனிஷியேட்டிவ்ஸ் பற்றியும் சொல்லமுடிகிறது...
ஐ.போன்ல இருப்பதில் ஒப்பிட்டால் 30% Funcionality தான் எல்.ஜி prada வில்..
விலை கண்டிப்பாக குறைந்து காணப்படும் என்று தான் நினைக்கிறேன்...
காரணம் ப்ராடாவில் உள்ளே போட்டிருக்கும் இன்பினியான் சிப்.செட்டுக்கோ அல்லது ஸ்க்ரீன் / டிசைன் போன்றவற்றுக்கு எல்.ஜி அதிகமா செலவு செய்யலை...
ஆப்பிள் நிறுவனம் ஐ.போனின் கான்செப்டை உருவாக்கிய பிறகு, சீனாவில் பெரிய அளவில் மொபைல் ப்ரொடக்ஷன் யூனிட் வைத்துள்ள இரண்டு மூன்று நிறுவனங்களை அணுகியது..
ஒன்று நோக்கியா..இன்னோன்று எல்.ஜி..
நோக்கியா ஆப்பிள் நிறுவனத்துடன் கூட்டனி அமைக்க மறுத்துவிட்டது...
எல்.ஜி நிறுவனம், ஆகட்டும் ஒரு மாசம் பார்க்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கொடுத்த Specification களை வாங்கிக்கொண்டு இரண்டு மாதத்துக்கு பிறகு மறுத்துவிட்டது..
இப்போது புரிந்திருக்குமே...:)))
நான் இப்போது எல்.ஜி ப்ராடா போன் இரண்டு மூன்று வைத்துள்ளேன்...(பேக்டரியில் இருந்து கொண்டுவந்தது)
உபயோகிக்கவும் சிலருக்கு கொடுத்துள்ளேன்...
உபயோகிக்கும் அனைவரும் காமிரா க்வாலிட்டி, கால் க்வாலிட்டி, மற்றும் வேகமான மற்றும் எளிமையான தொடுதிரை ஆப்பரேஷன்களை பார்த்து எல்.ஜி ப்ராடா மீது காதல் கொண்டுவிட்டார்கள்...!!!!
:)))
ரவி,
மகிழ்ச்சி!
முன்னாடி நீங்க LGலதான் இருந்தீங்கன்னு பதிவுலகத்துல பதிவாகியிருந்ததுதெரியும். 'நோக்கியா'வான்னு உங்க பின்னூட்டப்பாசத்தை வெச்சுத்தான் கேட்டேன். அது உண்மையாயிட்டதுல மகிழ்ச்சி! (நல்லா Guess பண்றேடா, வாசகா!:))
'சற்றுமுன்'ல பதிவு போட்டு சக வாசகப்பெருங்குடி மக்களுக்கு விபரங்களை எத்திவெச்ச 'புண்ணியத்து'க்கு Pradaவோ, ஐ-ஃபோனோ ஒண்ணு வாங்கிடணும்!
Post a Comment