.

Monday, June 4, 2007

தி.மு.க.,வை அழித்தே தீருவேன்: ஜெ சபதம் - வீடியோ

தி.மு.க.,வை என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன். இந்த வீர சபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே? நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும்? தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

விரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா? ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது. அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.

மேலும் செய்திக்கு "தினமலர்"

6 comments:

VSK said...

"அதிகமா ஆசைப்பட்ட ஆம்பளையும், அதிகமா ஆத்திரப்பட்ட பொம்பளையும் ரொம்ப நாள் நம்பளையெல்லாம் வாட்டுவாங்க என்பதுதான் சரித்திரம்"

--விடையப்பா!

கோவி.கண்ணன் said...

ஒரு ப்ளாக் போர்டும், சாக் பீசும் இருந்தால் திமுகான்னு எழுதி ஜெ சுலபமாக அழிச்சுடுவார். யாராவது நிதி உதவி செய்யக்கூடாதா ?

Anonymous said...

தி.மு.க வை ஜெ அழிக்க வேண்டாம். ஸ்டாலினும் அழகிரியும் போதும்.

செந்தழல் ரவி said...

ஏன் டென்ஷனாகுறாங்க ? எப்படியும் அவுங்கதானே அடுத்த முதல்வர் !!

ஒருவேளை இப்படி இருக்குமோ ? நேத்து 84 ஆவது பிறந்த நாளுக்கு பரிசாக வந்த ஆட்டுக்குட்டி போயஸ் தோட்டத்துல மேஞ்சிருக்குமோ ? இது மே மாதம் கூட இல்லையே...ஜூன் ஆரம்பிச்சிருச்சே...

ஒன்னுமே விளங்கலை...கண்ணைக்கட்டுது...!!!

Anonymous said...

எனக்கென்னமோ அம்மா அநாவசியமா அல்டிக்கறாங்களோன்னு தோணுது.தி மு க வை அழிக்க அவதாரம் எடுத்து இருப்பவர் நம்ம மரம் வெட்டி அய்யா தான்.சந்தேகம் வேண்டாம்.

குமரன் said...

ஆட்சி மாற்றம் நடந்த போது..தானும்..அதெ மத்திய ஜெயில்.. அம்மையாரை அடைத்த அதெ அறையில்...தானும் இருந்ததை கலைஞர் மறந்து இருக்க மாட்டார்....

மற்றபடி....இந்த மிரட்டல் எல்லாம் சும்மா...A POLITICAL STUNT..

kUMARAN

-o❢o-

b r e a k i n g   n e w s...