.

Thursday, June 14, 2007

பாலஸ்தீன அரசு கலைப்பு - எமர்ஜன்சி

தொடர்ந்து காசா பகுதியில் நடந்துவரும் வன்முறையின் விளைவாக பாலஸ்தீனிய அரசு கலைக்கப்பட்டு எமர்ஜென்சி அறிவிக்கப்படவுள்ளது. ஹமாஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த அப்பாசின் ஆதரவாளர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு கொன்றுவிட்டதாகவும் மேலும் சில முக்கிய ஆதரவாளர்களுக்கு குறிவைத்துள்ளதாகவும் தெரிகிறது.

காசா பகுதியில் கடந்த 10 நாளாக நடந்துவரும் வன்முறையில் 110 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆட்சி கலைப்பை ஹமாஸ் வெற்றியாகக் கொண்டாடிவருகிறது.

Abbas declares emergency Reuters

ரஜினிகாந்தின் அடுத்த படம்

சிவாஜிக்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தபடம் தயாராகிறது. 'சுல்தான்'.

ஆக்கர் ஸ்டூடியோஸ் எனும் அனிமேஷன் படம் தயாரிக்கும் நிறுவனத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா நடத்தி வருகிறார். இவரது இயக்கத்தில் ஆட்லப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் சுல்தான். இசை ஏ. ஆர் ரஹ்மான். இதில் சுல்தான் பாத்திரத்திற்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்கிறார்.

http://www.sultanthefilm.com/
தமிழ் சினிமா

பிரதீபா பாட்டீல் - சில குறிப்புகள்


ஜூலை 19ல் நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும் வாய்ப்புள்ள ஐ.மு.கூ வேட்பாளர் பிரதிபா பாட்டீல் பற்றிய சில குறிப்புகள்:


71 வயதாகும் பிரதீபா பாட்டீல், மகாராஷ்டிர மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். ஐந்து முறை மகாராஷ்டிர மாநில சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லோக்சபா, ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்துள்ளார். ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.

வழக்கறிஞரான பிரதீபா பாட்டீல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக தற்போது உள்ளார். அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் பிரதீபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, ராஜஸ்தான் மாநில அரசு, சட்டசபையில் இயற்றிய கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத் திருத்த மசோதாவில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரதீபா பாட்டீல்.

சமூக சேவகியான பிரதீபா பாட்டீல், ஏழைகள், உடல் ஊனமுற்றோருக்காக பல்வேறு பயிற்சி நிலையங்களையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தட்ஸ்தமிழ்

இதோ இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர்

பிரதீபா படீல் - 72 வயதாகும் மூத்த காங்கிரஸ் தலைவர் 60 வயதுடைய இந்தியக்குடியரசின் முதல் பெண் தலைவராகிறார். ஜூலை 19ல் நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் ஐ.மு.கூ அணி சார்பான வேட்பாளராக, தற்போது இராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ள பிரதீபா படேல் நிறுத்தப்படுவதாக கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.
"இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்" என்றார் அவர்.

இதன்மூலம் சிவராஜ் பட்டீல், கரண்சிங், மொஹ்சினா கித்வாய், பிரணாப் முகர்ஜி, அன்பழகன் என்ற யூகங்கள் முடிவுக்கு வந்தன

மேலும் விபரங்களுக்கு..TOI..

முந்தைய செய்தி

ச: விண்வெளி நிலையத்தில் கணினி பிரச்சினை

விண்வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் உருசிய பகுதியில் கணினிகள் வேலை செய்யவில்லை. அவற்றை முதலிலிருந்து தொடங்கினாலும் தாமே இயக்கத்தை ஆரம்பித்துக்(reboot) கொள்ள முடியவில்லை. புதிய சூரியபட்டைகள் பொருத்தியபிறகு இந்த பிரச்சினை வந்துள்ளது. இந்தக் கணினிகளை நேரத்தில் பழுது பார்க்க முடியவில்லை என்றால் இந்த நிலையத்தில் யாரும் தங்குவது இயலாது, அனைத்து விண்வெளியாளர்களும் கீழிறங்க வேண்டியதுதான். மேலே சென்றுள்ள அட்லாந்திஸ் விண்கலத்திலிருந்து 15 நாட்கள் வரை தாக்குபிடிக்க முடியும். அதற்குள் இந்தக் கோளாறை சரிசெய்ய வேண்டும். இதனால் முன்னதாக அட்லாண்டிஸின் வெப்பகேடயத்தை பழுதுபார்க்க இருந்தது இன்று முடியவில்லை. சுனிதா வில்லியம்ஸின் தரயிறங்கல் இன்னும் சற்று தாமதமாகலாம்.

DNA - Evolutions - Major computer problem pops up for Sunita - Daily News & Analysis

ச: இந்தியாவில் 2009இல் F1 கார் பந்தயம்

இந்திய ஒலிம்பிக் கழக அறிக்கையின்படி இந்தியாவின் முதல் F1 கார் பந்தயம் தில்லியில் 2009இல் நடக்கும். இதற்கான உடன்பாடு ஒன்று ஐஒஏ F1 நிறுவன தலைமை ஆணையர்( CEO) பெர்னி எக்கல்ஸ்டோனுடன் ஒப்பம் இட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாடி கூறினார்.
DNA - Sport - India to host F1 Grand Prix in 2009 - Daily News & Analysis

குடியரசுத்தலைவர் : பெண் வேட்பாளர் ?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளரை நிறுத்தலாம் என்ற முடிவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடது சாரிக் கட்சிகளும் வந்துள்ளதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை முக்கிய அரசியல் கூட்டணிகள் வேட்பாளரை இறுதி செய்யாமல் உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், அதற்கு ஆதரவாக உள்ள இடது சாரிக் கூட்டணிக்கும் இடையே வேட்பாளரை இறுதி செய்வதில் பெரும் குழப்பமும், பூசலும் நிலவுகிறது. மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலை காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்தது. ஆனால் அதை இடதுசாரிகள் ஏற்கவில்லை. தேசியவாத காங்கிரஸும் அதை ஏற்கவில்லை. தற்போது முக்கிய கூட்டணிக் கட்சியான திமுகவும் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
அதேபோல கரண் சிங், பிரணாப் முகர்ஜி, சுசில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்களையும் இடதுசாரிகள் நிராகரித்துவிட்டன. இந்த நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், இடதுசாரித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். முதல்வர் கருணாநிதியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் சிவராஜ் பாட்டீலை நிறுத்தும் முடிவைக் கைவிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இன்னொரு மத்திய அமைச்சரான சுஷில் குமார் ஷிண்டேவையும் நிறுத்துவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவர்களை விட்டு விட்டு பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரித் தலைவர்களும் கூட்டாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல், பிரபல காந்தியலாளரும், சமூக சேவகியுமான நிர்மலா தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இடது சாரித் தலைவர் ஒருவர் கூறுகையில், பெண் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். இன்று இரவு 7 மணிக்கு பிரமதர் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள், இடது சாரித் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பின்னர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும். அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையிலான பெயர் இந்தக் கூட்டத்தின் இறுதியில் வெளிப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

'இந்தியன்' விமான ஊழியர் போராட்டம் விலக்கம்!

கடந்த செவ்வாய் இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியன் விமான நிறுவனத்தின் 13000 ஊழியர்கள், நிர்வாகத்துடன் உடன்பாடு எட்டியதால் இன்று பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டனர். விமானப்போக்குவரத்து அமைச்சகமும், விமான நிறுவன நிர்வாகமும் இணைந்து ஊழியர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் இம்முடிவு எட்டப்பட்டது.

இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் சமீபத்தில் இணைக்கப்பட்டு இந்தியன் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது.

இப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், ஏர் இந்தியா ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு கோரி, 10 ஆண்டு சம்பள பாக்கி கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று சம்பள பாக்கி வழங்கினால் ரூ.800 கோடி செலவாகும் என்பதால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனினும் விமானப்போக்குவரத்து அமைச்சகம், விமான ஊழியர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 267 கோடி ரூபாய் சம்பளபாக்கி 18 மாதங்களில் தீர்க்கப்பட ஒப்புக்கொண்டுள்ளது

நேற்று முன் தினம் இரவு தொடங்கிய வேலை நிறுத்தத்தால் விமான சேவைகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தன. சுகாதார பணியாளர்கள் கூட போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் விமான நிலையங்கள் நாற ஆரம்பித்தன.

வேலை நிறுத்தத்தால் இந்தியா வரும் வெளிநாட்டு விமானங்களும் பாதிக்கப்பட்டன. விமானங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமானங்கள் குறித்து தகவல் தெரியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேருக்கு தற்கால பணி நீக்கம் உத்தரவு அனுப்பப்பட்டது. உடனே பணிக்கு திரும்பாவிட்டால் லாக் அவுட் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துறை எச்சரித்திருந்தது. இவர்களை தற்போது மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளவும் சம்மதிக்கப்பட்டது.

இந் நிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் யூனியனும், இந்திய விமான நிறுவன நிர்வாகமும் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

சென்னையில் இந்த போராட்டத்தால் இரண்டாவது நாளாக இன்று 12 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மொத்தம் 28 விமானங்களில் 16 மட்டுமே இயக்கப்பட்டன. 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை-டெல்லி, சென்னை-மும்பை, சென்னை-ஹைதராபாத் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாட்டு விமானங்களில் சென்னை-சிங்கப்பூர் மற்றும் சென்னை- கொழும்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

ஒரே மேடையில் இருபெண்களை மணந்தவர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு வாலிபர் தான் காதலித்து வந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கல்யாணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (32). இவர் ஒரு விவசாயி. இவருக்கும், பக்கத்து வயலைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகள் சகுந்தலாவுக்கும் (24) காதல் மலர்ந்தது. நெருங்கிப் பழகிய இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்னொரு காதலில் வீழ்ந்தார் ஏழுமலை. ஏழுமலையின் வீட்டுக்கு அருகில் உள்ள அண்ணாமலையின் மகள் நாகம்மாள் (23) என்பவரையும் 'சைட் பை சைடாக' காதலிக்க ஆரம்பித்தார் ஏழுமலை.

ஏழுமலையின் இரட்டைக் காதல் அவரது இரு காதலிகளுக்கும் தெரிய வந்தது. ஏழுமலையை நேரில் சந்தித்த இருவரும் எங்களில் யாரைத் திருமணம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு படு தெளிவாக, இரண்டு பேரையும்தான் என்று கூறியுள்ளார் ஏழுமலை. இதையடுத்து இரு பெண்களும் சமாதானமடைந்தனர், சம்மதமும் கொடுத்தனர்.

ஆனால் இரு பெண்களின் வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படி ஒருவரே இரு பெண்களையும் மணப்பது என அவர்கள் ெகாதித்தனர். ஆனால் ஏழுமலையின் குடும்பத்தினர் இரு பெண்களின் வீட்டாரையும் சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து கடந்த 3ம் தேதி மூன்று வீட்டாரும் கூடி பேசி திருமண தேதியை முடிவு செய்தனர். ஒரே நாளில், ஒரே முகூர்த்தத்தில், ஒரே மேடையில் கல்யாணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 3ம் தேதி இடப்புறம் அமர்ந்திருந்த சகுந்தலாவுக்கும், வலப்புறம் அமர்ந்திருந்த நாகம்மாளுக்கும் மாறி மாறி தாலி கட்டி அசத்தினார்.

இந்த வித்தியாச திருமணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏழுமலை ரஜினி ரசிகராம். இதனால் அவரது நண்பர்கள் வைத்த கல்யாண விளம்பர டிஜிட்டல் போர்டில் ரஜினிகாந்த் ஏழுமலை மற்றும் இரு மணமகள்களையும் ஆசிர்வாதம் செய்வது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

தட்ஸ்தமிழ்

தயாநிதிக்குப் பதிலாக வரவில்லை - கனிமொழி.

'திமுகவிலிருந்து தயாநிதி மாறன் வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வெளியேற்றப்பட்டதால் தான் நான் அரசியலில் ஈடுபட்டேன் என்று கூறுவது தவறு. கட்சியில் பல்வேறு தலைவர்கள் என்னை அரசியலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்ததால் இப்போது வந்துள்ளேன்.' என்று புதிய. தி.மு.க எம்.பி கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டதால் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை. திமுகவில் நம்பிக்கையும், பலமும், அரசியலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தயாநிதியால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப அவர்களால் முடியும்.

அவருடைய வெற்றிடத்தை நிரப்ப என்னை மத்திய அரசியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை. தயாநிதி மாறனால் என் தந்தை கருணாநிதி வருத்தப்பட்டது உண்மைதான். இதுபோன்று நடந்திருக்க கூடாது. எனக்கும் இதில் வருத்தம் உண்டு.

கலைஞருக்கு எந்த பிரச்சனையும் ஒரு பொருட்டல்ல. அவர் பொது வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்களை கடந்து வந்துள்ளார்.

திமுகவில் பல்வேறு அதிகார மையங்கள் இருப்பதாக கூறுகின்றனர். தயாநிதி மாறனை நீக்கியதன் மூலம் கட்சியில் ஒரே அதிகார மையம் தான் உள்ளது, அந்த அதிகார மையம் அண்ணா அறிவாலயம் மட்டும் தான் என்பது அனைவருக்கும் விளக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் தயாநிதிக்கு ஏற்பட்ட முடிவு தான் ஏற்படும். இந்த நடவடிக்கைக்கு காரணமும் அதுதான்.

திமுகவில் தயாநிதி போன்றவர்கள் வந்துள்ளனர், சென்றுள்ளனர். அவர்களால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது, தொடர்ந்து செயல்படும்.

எங்கள் குடும்பத்துடனும், கட்சி தலைமையிலும் நெருக்கமாக இருந்தவர்கள் எத்தனையோ பேர் மன வருத்தம் ஏற்படுத்தி வெளியேறியுள்ளனர். தயாநிதி பிரச்சனையும் அது போலத்தான். தயாநிதியால் ஏற்பட்ட மனவருத்தம் என் தந்தைக்கு இன்னும் நீங்கவில்லை.

எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.

கலைஞர் டிவி பற்றி பெரியதாக எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதில் வழக்கமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விட புதுமையான நிகழ்ச்சிகள் இடம் பெறும் என நம்புகிறேன் என்றார் கனிமொழி.

ஜெத்தா: தந்தை வன்புணர்ந்ததாகப் பொய்ப்புகார். மகள் காதலனுடன் கைது!

ஜெத்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது ஸர்னீ என்னும் இளம்பெண் கடந்த ஆண்டு ஜூனில் தனது தந்தை மீதே வன்புணர்வு குற்றம் சுமத்தியிருந்தார். பரபரப்பான இந்தக் குற்றச்சாட்டு உள்ளூர் நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இருதரப்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின், தன்னுடைய ஆண்நண்பர் காஷிஃப் என்பவரை மணக்க தந்தை தடை விதித்த காரணத்தால், இப்படியொரு அபாண்டக் குற்றச்சாட்டை வீசியதாக இளம்பெண் ஸர்னீ ஒத்துக்கொண்டுள்ளார். தன் 32 வயது ஆண்நண்பரின் தூண்டுதலே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.காஷிஃப் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அவர் கூறினார்.

முன்னதாக, காஷிஃப் என்கிற அந்த ஆண்நண்பர், சமீபத்தில் தன் மகளை தன் வீட்டிலிருந்து கடத்திச்சென்றதாக 40 வயது தந்தை தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்குப்பின், இளம்பெண் ஸர்னீக்கு எட்டுமாதங்களூம், அவருடைய ஆண்நண்பர் காஷிஃப்புக்கு ஒரு வருடமும் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐ.நா: காந்திஜி பிறந்தநாள் சர்வதேச அஹிம்சை தினம்.

உலகளவில் அஹிம்சை; சமாதானத்தைப் பரப்பியதில் தேசப்பிதா மஹாத்மா காந்தி ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் விதமாக, அவர் பிறந்த அக்டோபர் 2ம் நாளை அகில உலக அஹிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் அவை அறிவிக்க உள்ளது.

இந்தியாவின் இம்முயற்சிக்கு ஐ,நாவின் 191 உறுப்பு நாடுகளில் 120 நாடுகள் ஆதரவளித்துள்ளன.

மேலும் படிக்க....

குடியரசுத் தலைவர் 'கோதா'வில் கரண்சிங்!

தில்லியில் இன்று தனது 'பழைய நண்பர்' திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக தாம் ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். கருணாநிதியுடனான அவருடைய சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

தாம் ஐ.மு.கூவின் கு.த வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டால், அது தமக்களிக்கப்படும் பெரும் கவுரவமாக அமையும் என்றார் அவர்.

இந்திராகாந்தியின் அமைச்சரவையில் பணியாற்றியிருந்த கரண்சிங், பொதுவாழ்வில் 56 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்.

VHPயில் உறுப்பினராக இருந்ததில்லை என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அவர், வீரத் ஹிந்து சம்மேளனம் என்கிற நம்பிக்கைச் சார்ந்த அமைப்பில் மட்டுமே அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஐ.மு.கூ வேட்பாளர் பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார் மு.கருணாநிதி.

தமிழக சிறுமியருக்கு தேசிய பட்டம்

சப்-ஜூனியருக்கான டேராடூனில் நடந்த தேசிய பூப்பந்துப் போட்டியில் தமிழக சிறுமியர் குழு 29-13, 29-01 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிர அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழக அணியில் அக்ஷயா, ஐஸ்வர்யா ஆகியோர் 'ஸ்டார் ஆஃப் இந்தியா' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறுவர் பிரிவில் தமிழக அணி 3-ம் இடத்தைப் பிடித்தது. அதற்கான ஆட்டத்தில் ஆந்திர அணியை 29-19, 26-29, 29-26 என்ற செட் கணக்கில் தமிழகக் குழுவினர் போராடி வீழ்த்தினர்.

தினமணி

சித்ராலயா சண்முகம் காலமானார்

திரைப்படத்துறையில் மூத்த தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய சித்ராலயா கே.ஆர்.சண்முகம் (73) புதன்கிழமை காலமானார்.

தேவகோட்டையைச் சேர்ந்த சண்முகம் சிவாஜிகணேசன் நடித்த 'உத்தமபுத்திரன்' படத்திலிருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர். சுமார் 50 ஆண்டு காலம் நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். கமல்ஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படம்தான் இவர் கடைசியாகப் பணியாற்றிய படம்.

தினமணி

சீன மொழியில் தயாராகும் 'சிவாஜி'

சிவாஜி திரைப்படத்தை சீன மொழிக்கு மாற்றி ஹாங்காங்கிலும் சீனாவிலும் வெளியிட இருக்கிறார்கள். 'சிவாஜி'க்கான மலேசிய உரிமையை 'பிரமிட்' நடராஜன் வாங்கியுள்ளார்.

மலேசியாவில் முதல் இரு மாதங்கள் 'தமிழ்' சிவாஜி மட்டுமே திரையிடப்படும். தற்போது மலேசியாவின் அறுபது தியேட்டர்களில் சிவாஜி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து 'சிவாஜி'யின் மலாய் டப்பிங் வெள்ளித்திரையை சென்றடைய உள்ளது.

இந்தோனேஷியாவிலும் மலேசியாவிலும் இருநூறு அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Sivaji prepares to conquer Chinese hearts - Newindpress.com

ஷாரூக்கானுக்கு செவாலியர் விருது

பிரான்சு நாட்டின் உயரிய விருதான Ordre des Arts et des Lettres (கலையிலும் இலக்கியத்திலும் சாதனையாளர்) இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இதற்கு முன்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் மிருனாள் சென், பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஹாலிவுட் நடிகர்கள் ப்ரூஸ் வில்லிஸ் (டை ஹார்ட்), லியோனார்டொ டிகப்ரியோ (டைடானிக்) ஷரன் ஸ்டோன் (பேசிக் இன்ஸ்டின்க்ட்), உமா தர்மன் (கில் பில்), மெரில் ஸ்ட்ரீப் போன்ற பல் குறிப்பிடத்தக்கவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

SRK gets France's top culture award-India Buzz-Entertainment-The Times of India

அரங்கதிலிருந்து விளையாட்டை வலைப்பதிந்தவருக்கு கல்தா கொடுத்தார்கள்

அரங்கில் நடக்கும் பேஸ்பால் ஆட்டத்தை நேரடியாக வலைப்பதிவது சட்டப்படி குற்றம் என்று கூறி விளையாட்டை கண்டுகளித்துக் கொண்டிருந்த நிருபர் வெளியேற்றப்பட்டார். அமெரிக்கக் கல்லூரிகளுக்கு இடையே NCAA மண்டல சுற்றுப் போட்டியில் இது நடந்தது.

கென்டக்கி மாகாணத்தின் லூயிவில்லில் இருந்து வெளிவரும் கொரியர்-ஜர்னல் (Courier-Journal) பத்திரிகை நிருபர் இதற்கு முன்னரும் பல முக்கிய ஆட்டங்களுக்கு நேரடி வர்ணனை வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chicago Tribune | Hypertext | Newspaper blogger ejected from NCAA game

மகாத்மா காந்தி & இராஜகோபாலச்சாரியின் பேரன் மரணம்

எழுபது வயதான ராமச்சந்திரா காந்தி காலமானார்.

டெல்லியின் கடும் வெயில்லில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த பத்தாம் தேதி இந்தியா இண்டெர்னேஷனல் செண்டர் விருந்தினர் அறைக்கு வந்தார். தன்னுடைய ஒற்றை அறை வீட்டில், குளிரூட்டல் வசதி இல்லாததால் சூரியன் சுட்டெரிக்கும் தருணங்களில் அவர் இங்கு வசித்தார்.

மகாத்மாவின் நான்காவது மகனான தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் மகளுக்கும் பிறந்தவர் ராமச்சந்திர காந்தி. மணமுறிவான மனைவி மகளுடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இவருக்கு வரலாற்று அறிஞர் ராஜ்மோகன் காந்தி என்னும் அண்ணனும், மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி என்னும் தம்பியும் இருக்கிறார்கள்.

Mahatma’s grandson found dead in IIC guest room

-o❢o-

b r e a k i n g   n e w s...