எழுபது வயதான ராமச்சந்திரா காந்தி காலமானார்.
டெல்லியின் கடும் வெயில்லில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த பத்தாம் தேதி இந்தியா இண்டெர்னேஷனல் செண்டர் விருந்தினர் அறைக்கு வந்தார். தன்னுடைய ஒற்றை அறை வீட்டில், குளிரூட்டல் வசதி இல்லாததால் சூரியன் சுட்டெரிக்கும் தருணங்களில் அவர் இங்கு வசித்தார்.
மகாத்மாவின் நான்காவது மகனான தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் மகளுக்கும் பிறந்தவர் ராமச்சந்திர காந்தி. மணமுறிவான மனைவி மகளுடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இவருக்கு வரலாற்று அறிஞர் ராஜ்மோகன் காந்தி என்னும் அண்ணனும், மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி என்னும் தம்பியும் இருக்கிறார்கள்.
Mahatma’s grandson found dead in IIC guest room
Thursday, June 14, 2007
மகாத்மா காந்தி & இராஜகோபாலச்சாரியின் பேரன் மரணம்
Posted by Boston Bala at 2:03 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்
இந்திய பன்னாட்டு மையத்தில் அறை எண் 15-ல் தங்கி இருந்தார் ராமச்சந்திரா. புதன்கிழமை காலையில் வீட்டு வேலைகளைச் செய்பவர் வந்து கதவைத் தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் அந்த மையத்தின் செயலாளரிடம் தெரிவித்தார். அதையடுத்து, அறை கதவு உடைக்கப்பட்டது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ராமச்சந்திரா அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக இருந்துள்ளார்.
தத்துவம் தொடர்பாக பல புத்தகங்களையும், கதைகளையும் எழுதியுள்ளார். தனது தாத்தா மகாத்மா காந்தி திரைப்படத்துக்கான கதையையும் இவர் எழுதினார்.
Post a Comment