தென்கிழக்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு வங்கத்தின் கங்கைச் சமவெளியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தின் ْகொல்கத்தா நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் ரயில் மற்றும் விமானப்ْபோக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்டவாளங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததாலும், சிக்னல்கள் பழுதடைந்ததாலும் ரயில் போக்குவரத்து சுமார் மணி நேரம் பாதிக்கப்பட்டதாக ரயில்ْவே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த மழையினால் போதிய வெளிச்சமில்லாததால் சுபாஷ் சந்திர ْபோஸ் சர்வْதேச விமான நிலையத்தில் 1 மணி ْநேரம் விமானப்ْபோக்குவரத்து பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் இருப்பினும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தினமணி
Wednesday, June 13, 2007
மழை: மே.வங்கம் பாதிப்பு
Posted by வாசகன் at 10:18 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment