.

Wednesday, June 13, 2007

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஃபரூக் அப்துல்லா?

குடியரசுத்தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி அணியின் சார்பில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலேசனைகள் நடக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பாஜக கூட்டணி இந்த விஷயத்தில் நிலை தடுமாறி வருகிறது. துணை ஜனாதிபதி ஷெகாவத்தை போட்டியிட வைக்கவுள்ளது அந்தக் கட்சி. ஆனால், அவரை சுயேச்சையாக நிறுத்தினால் பாஜக எதிர்ப்பு அணியின் வாக்குகளும் விழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த கணக்கைக் குலைக்கும் வேலையில் மூன்றாவது அணி இறங்கியுள்ளது.

மூன்றாவது அணி சார்பில் ஃபரூக் அப்துல்லாவை நிறுத்தி காங்கிரஸையும் பாஜக அணியையயும் குழப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்துல்லா இப்ேபாது ஆஸ்திரேலியாவில் ஓய்வில் இருந்தபடி மூன்றாவது அணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் களத்தில் இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...