வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான் கேள்வி.
மொத்தம் 360 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த கருத்துக் கணிப்பில் ரஜினிக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும், அமிதாப்புக்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர் சோ ராமசாமி, ஸ்கிரீன் பத்திரிக்கை ஆசிரியர் பாவனா செளம்யா, அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற பிரமுகர் சஞ்சய் படோடியா ஆகியோர் இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டனர்.
விவாதத்தில் கலந்து கொண்டு சோ பேசுகையில்,ரஜினி அற்புதமான நடிகர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. எந்த கேரக்டர் கொடுத்தாலும நடிக்கக் கூடியவர் ரஜினி.
அவரது படங்களுக்கு உலக அளவில் சந்தை மதிப்பு உள்ளது. அவரது செல்வாக்கும் உள்ளூரைத் தாண்டி வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. அதேசமயம், அமிதாப் பச்சனின் செல்வாக்கையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றார்
Wednesday, June 13, 2007
அமிதாப்பை மிஞ்சிய ரஜினி.
Posted by வாசகன் at 7:53 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
நம்ப முடியலியே. 'ராக்கம்மா கையத் தட்டு' உலகில் சிறந்த பாடல்னு சொன்ன கணிப்புமாதிரிதான் இதுவுமா?
கருத்துக்கணிப்பின் பின் விளைவுகளை இன்னுமா ஊடகம் புரிந்துகொள்ளல?
//கருத்துக்கணிப்பின் பின் விளைவுகளை இன்னுமா ஊடகம் புரிந்துகொள்ளல?//
பயமுறுத்துறீங்களே...ய்யா!
கலந்துக்கொள்ளாத/கண்டுக்கொள்ளாத/வாக்களிக்காத/ மவுனப்பெரும்பான்மை வழக்கம்போல் புறக்கணிக்கப்படுகிறது..
(க.க-ன்னா அப்படித்தானே..)
இங்கும்!
//நம்ப முடியலியே//
இது என்னங்க..இன்னொரு கருத்துக் கணிப்புல அப்துல் கலாமை விட அதிகமா ரஜினிக்கு ஓட்டு போட்டவங்க தான நம்மாளுங்க..
ஒரு கலாட்டா கூட நடக்கலே; ஒருத்தர கூட எரிக்கலே; ஒரு பாம் கூட இல்லே; இதெல்லாம் ஒரு கருத்துக்கணிப்பா...சே...:-)
//இன்னொரு கருத்துக் கணிப்புல அப்துல் கலாமை விட அதிகமா ரஜினிக்கு ஓட்டு போட்டவங்க தான நம்மாளுங்க.. //
அப்துல்கலாம் மீடியாக்களின் சூப்பர்ஸ்டார்.
ரஜினிகாந்த் சினிமாவின் சூப்பர்ஸ்டார்.
சினிமா, மீடியாவை மிகைப்பதை பொறுத்துக்கொள்ளாத மீடியா குரலாக இந்த வரிகள்.
ஏனெனில், எந்த கருத்துக்கணிப்பிலும் ஆதிக்கம் செலுத்துவது பாப்புலாரிட்டி தான்.
அப்துல் கலாமை விடுங்கள், சர்.சி.வி ராமனுக்கும் ரஜினிக்கும் வைத்தாலும் ரஜினி தான் வெல்வார்.:-))
Post a Comment