தமிழகம், கர்நாடகம், டெல்லியிலும் பரவி வருகிறது.
கேரளத்தைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகம் மற்றும் டெல்லிலும் சிக்குன்குனியா காய்ச்சல் பரவி வருகிறது. இந்க நோய்க்கு கேரளாவில் 70 பேர் வரை பலியாகிவிட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல இடங்களிலும் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்நோய் வேகமாக பரவி வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக கேரள எல்லைகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளத்தில் இருந்து வரும் பஸ்கள், ரயில் பெட்டிகள், வாகனங்கள் போன்றவற்றிலும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. இந் நிலையில் டெல்லியிலும் இக்காய்ச்சல் பரவி வருகிறது. அங்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்மணியின் இரத்தத்தை பரிசோதித்தபோது இது தெரிய வந்தது. மேலும் சிக்குன்குனியா பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடுத்திருப்பதாக சுகாத்தாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு சிக்குன்குனியாவால் 40 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. அதே போல கர்நாடகாவிலும் இந்நோய் பரவியுள்ளது. மாநிலம் முழுவதும் சிக்குன்குனியாவில் பாதிக்கப்பட்ட 1,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment