.

Wednesday, June 13, 2007

விமான நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

இந்தியன்' விமான நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. `இந்தியன்' விமான நிறுவன ஊழியர்கள் சம்பள நிலுவைத் தொகை, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக நிர்வாகத்துக்கும், பணியாளர்கள் சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

திடீர் வேலைநிறுத்தம்

ஆனால் இந்த பேச்சுவார்த்தை நேற்று முறிந்தது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளித்த உறுதிமொழியில் இருந்து நிர்வாகம் பின் வாங்குவதாக கூறி, இந்தியன் விமான நிறுவன ஊழியர்கள் நேற்று இரவில் நாடு தழுவிய அளவில் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
இதுபற்றி விமான கழக ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ஜே.கே.படோலா கூறுகையில்; நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், அனைத்து ஊழியர்களும் இரவு 9.30 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் சோதனை செய்யும் ஊழியர்கள் முதல் விமானங்களில் சரக்கு ஏற்றும் பணியாளர்கள் வரை பங்கேற்று உள்ளனர் என்று தெரிவித்தார்.
விமான சேவை பாதிப்பு`இந்தியன்' ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தத்தினால் நேற்று இரவில் சென்னை, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...