ஆசியாவின் மிகப்பெரிய சிறையான தில்லி திஹார் சிறையில் தொடரும் சாவுகள், கடந்த ஏழுநாட்களில் ஏழு சாவுகள், மாநில அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்று அங்குள்ள வார்டர் ஒருவர் காசநோயால் இறந்துள்ளார். கடந்த ஆறு நாட்களாக மரணித்தவரின் பாதிப்பால் சிறை நிர்வாகம் தினசரி மருத்துவ பரிசோதனைகளை நடத்திவருகிறது. தவிர கடுமையான கோடைவெயிலை சமாளிக்க குளிர்காற்று சாதனங்களையும் வெளியேற்று விசிறிகளையும் அமைத்து வருகிறது.
இந்த வழமைக்கு மாறான மரணங்கள் தில்லி அரசை நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ள தூண்டியிருக்கிறது. தேசிய மனித உரிமைக் கழகமும் ஆய்விற்கு உத்திரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் சிறைநிர்வாகத்தையும் மாநகராட்சியையும் விளக்கம் கேட்டுள்ளது.
DNA - India - Death continues to haunt Tihar, govt orders probe - Daily News & Analysis
Wednesday, June 13, 2007
ச: திஹார் சிறை: ஏழுநாளில் ஏழுபேர் மரணம்
Labels:
இந்தியா,
மரணம்,
வித்தியாசமானவை
Posted by மணியன் at 7:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment