.

Friday, March 2, 2007

பண்டைய கால மனிதனின் துலக்காத பல்


்பண்டைய கால மனிதனின் துலக்காத பல்லில் இருந்து அவன் உட்கொண்ட உணவு வகைகளை கண்டறியும் சாத்தியம் உருவாகியுள்ளது.


Discovery Chennel - NEWS

இந்திய வீரர்களுக்கு தேசிய கமாண்டோ படை பாதுகாப்பு

மேற்கு இந்தியத்தீவுகளின் பாதுகாப்புத் தன்மையைக் கருதி உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு தேசிய கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் வல்லுனர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர்களுடன் இவர்களும் தற்போது மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்திய வீரர்களுக்கு போதிய பாதுக்காப்பு வழங்க இயலாத சூழ்நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு, தூதரகம் மூலம் மத்திய அரசிடம் தெரிவித்தது. இதையடுத்து இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் சிலருக்கு, பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகளால் ஆபத்து நிலவுகிறது.

இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு இதுபோன்ற சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

நன்றி: MSNதமிழ்

கேரள கம்யூ. தலைவர் மீது வழக்கு

துப்பாக்கியுடன் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பினராயி விஜயன் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரள கம்யூ. தலைவர் மீது வழக்கு

திருவாரூர் தேரோட்டம் - முதல்வருக்கு இல.கணேசன் கோரிக்கை

திருவாரூர் ஆழித்தேரோட்ட திருவிழாவை மரபு மீறாமல் பாரம்பரியத்தை பேணி காக்கும் வகையில் அதற்கென குறிப்பிட்ட நாளான பங்குனி ஆயில்யத்திலே நடத்த ஆணையிட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை தமிழக பிஜேபி தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


MSN-Tamil

உலக கோப்பை : ரெப்ரியாக SRINATH தேர்வு


மேற்கு இந்திய தீவுகளில் 13ம் தேதி துவங்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான ரெப்ரிகளில் ஒருவராக இந்தியாவின் ஸ்ரீநாத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது

Yahoo-Tamil

பணவீக்கம் குறைந்தது: 6.05%

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பின் எதிரொலியாய் மொத்த கொள்முதல் விலை குறைந்தது, இதனால் பணவீக்கமும் குறைந்துள்ளது.

Inflation cools to 6.05%
பணவீக்க விகிதம் 6.05 சதவிகிதமாக குறைந்தது

கிரிக்கட் மட்டை போல கார்

உலகக் கோப்பை மேனியா துவங்கிவிட்டது. ஹைதரபாத்ஹ்தில் ஒருவர் கிரிக்கட் மட்டை வடிவில் ஒரு காரை வடிவமைத்துள்ளார்.

இந்திய பணக்காரர்களில் கோக்கேன் உபயோகம் அதிகம் - UN ஆய்வறிக்கை

ஐக்கிய நாடுகளின், உலகளாவிய போதைப்பொருள் கட்டுப்பாடு துறை (International Narcotics Control Board, a UN-affiliated agency) தரும் அறிக்கையின்படி இந்திய மேட்டுக்குடி மக்களிடம் கோக்கேன் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது என தெரியவந்துள்ளது.

Cocaine use on rise among India's rich(HT)
Cocaine use, abuse of medicines on the rise in India:UN report(ZEE NEWS)
US praises India's counter-narcotics track record(Hindu)

India’s newly emerging wealthy class is behind an increase in the abuse and trafficking of cocaine, according to a report by the International Narcotics Control Board, a UN-affiliated agency.

Moreover, India continues to be a market and a conduit for heroin – produced domestically and imported from South West Asia – the report points out.

இந்திய வருமான வரியை கணக்கிட இணைய தளம்

வருமான வரியை கணக்கிடும் வசதி கொண்ட www.taxreach.net என்ற புதிய இணைய தளம் தொடங்கப் பட்டுள்ளது.

Taxreach.net என்ற முன்னணி வருமான வரி ஆலோசனை நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய இணைய தளத்தை, சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் வருமான வரித்துறை தலைமை ஆணையாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

மாலைச்சுடர்்

பாதல் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார்

சமீப தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற அகாலிதளத்தின் பிரகாஷ் சிங் பாதல் நான்காம் முறையாக இன்று பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார். அவருடன் அகாலி-பிஜேபி கூட்டணியைச் சேர்ந்த 17 மந்திரிகள் பதவியேற்றனர்.

The Hindu News Update Service

அட்லான்ட்டாவில் பேருந்து ் கவிழ்ந்தது


கல்லூரி பேஸ்பால் விளையாட்டு வீரர்களை ஏற்றிச் சென்ற வாடகை பேருந்து ஒன்று நெடுஞ்சாலையிலிருந்து தடம் புரண்டு கீழே விழுந்ததில் குறைந்தது ஆறு பேர் மரணம் என்கிறது இந்த FOX news

எதியோப்பாவில் சுற்றுலா பயணிகள் கடத்தல்

இன்று எதியோப்பாவில் சுற்றுலா வந்த 14 ஐரோப்பிய பயணிகள் கடத்தப் பட்டிருப்பதாக இந்த செய்தி கூறுகிறது.

வண்ண சிகிச்சை

மாற்று மருத்துவ முறைகளில் தற்போது "கலர் தெரபி" எனப்படும் "வண்ண சிகிச்சை" மிகவும் பரவலாகி வருகிறது. நிறங்களில் இருக்கும் ஒளி ஆற்றலுக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உள்ளது என்பதன் அடிப்படையில் வண்ண சிகிச்சை நடைபெறுகின்றது.

பச்சை, சிவப்பு, நீலம் ஆகியன மூன்றும் முதன்மை நிறங்களாகும். இவற்றைக் கலந்து எந்த வகை நிறத்தையும் பெறலாம். சிவப்பு நிறம் வெப்பமானது. இது நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. சிவப்பு நிற வெளிச்சத்தில் சிவப்பு நிற அணுக்கள் பெருகுகின்றன். பசலைக்கீரை, சிவப்பு நிற தோல் உள்ள பழங்கள், சிவப்பு முட்டைகோஸ், சீமை இலைந்தப்பழம், சிவப்பு நிறம் உள்ள திராட்சை ஆகியன சிவப்பு நிற ஒளிக்கதிர்களை பரப்புகின்றது.

தொழுநோயில் பல நிலைகள் உள்ளன. எந்த வகை நிலைக்கும் மஞ்சள் நிற சிகிச்சை மிகவும் நல்லது என கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம், எலுமிச்சைபழம், பைன் ஆப்பிள் மற்றும் மஞ்சள் நிற கதிர்களைப் பரப்புகின்றன.

மனித உணர்வுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் நிறங்களுக்கு உள்ளதென வண்ண சிகிச்சை நம்புகின்றது. முதன்மை நிறமான நீலநிறதிற்கு நோய் தீர்க்கும் ஆற்றல் உள்ளது. மற்றொரு முதன்மை நிறமான பச்சை நிறம் கிருமிநாசினியாகச் செயல்படுகின்றது. வெள்ளை நைறம் மன அமைதிக்குப் பயன்படுகின்றது. சில சமயம் சிவப்பு நிற கதிர்கள் கோபத்தை தூண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.

நன்றி:-தினமலர்.

குட்ரோச்சியை இந்தியா கொண்டுவர வாய்ப்புகள் குறைவு

போபர்ஸ் ஆயுத பேர ஊழலில் முக்கிய குற்றவாளியான குட்ரோச்சி சமீபத்தில் அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவர சி.பி.ஐ குழு அர்ஜென்டினா சென்றுள்ளது. சிபிஐ, இருய அறிக்கை தாக்கல் செய்தாலும், குட்ராச்சியை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவே என லண்டன் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்.

கேரள சிபிஎம்தலைவர் பினராயி விஜயன் மீது வழக்கு

கடந்த மாதம் 16ஆம் தேதி சென்னை வந்தபோது விமானதளத்தில் துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்ததாக நிறுத்தப் பட்ட பினராயி விஜயன் மீது உண்மை யான உரிமத்தைக் காண்பித்து கைப்பற்றப் பட்ட பொருட்களை மீட்காத தால் சென்னைகாவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. The Hindu : Tamil Nadu / Chennai News :

முக்கிய தாலிபான் தலைவர் பாகிஸ்தானில் கைது

தாலிபான் தலைவர் முல்லா மொஹம்மது ஓமரின் உதவியாளர் முல்லா ஒபைதுல்லா அகுன் ட், க்வெத்தா நகரில் இன்று பாகிஸ்தானிய படையினரால் பிடிக்கப் பட்டதாக இந்த செய்தி பாகிஸ்தானின் டான் செய்தித்தாளை ஆதாரம் காட்டி கூறுகிறது. பிடிபட்ட ஒபைதுல்லா மீது அமெரிக்க அரசு ஒரு மிலியன் டாலர்கள் பரிசு அறிவித்திருந்தது.

தளபதி பிறந்தநாளை சன் டிவி இருட்டடிப்பு ?

இன்று பிறந்தநாளைக் காணும் ஸ்டாலினுக்கு பெரும் கட் அவுட்கள் சாலையின் இருமருங்கும் வைத்து தி.மு.க தொண்டர்கள் கொண்டாடுவதை தேசிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவர சன்குழும நிகழ்ச்சிகளில் அடிப்பட்டையில் கூட காண முடியவில்லை என்கிறது இந்தச் செய்தி.

15-ம் தேதி முதல் ஸ்டிரைக் -எண்ணெய் நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) தலைவராக ஆர்.எஸ்.சர்மா நியமிக்கபட்டதை பிரதமரின் அலுவலகம் நிராகரித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 15-ம் தேதி முதல் 2 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக 13 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் 45 ஆயிரம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும்....

ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு

இருபதாயிரம் கோடி ரூபாய் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.

நன்றி :தினமணி

அனுபவ் குரூப் நிறுவன மோசடி

ரூ.320 கோடி சுருட்டிய அனுபவ குரூப் நிறுவனத்திடம் பணத்தை இழந்தது 1.20 லட்சம் பேர் புகார் கொடுத்தது 30 ஆயிரம் பேர் என போலிசார் தெரிவித்துள்ளனர். நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்து தங்களது பணத்தை இழந்த பலர் அது குறித்து போலீசாரிடம் இதுவரை புகார் செய்யாமல் உள்ளனர்.

இது தொடர்பான கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், ஐஜி விஜயகுமார், எஸ்.பி.எம். சத்தியப்பிரியா, உதவி கமிஷனர் வசந்தகுமார் மற்றும் போலிசார் பங்கேற்றனர்.

இது குறித்து மேலும்..........

'பருத்திவீரன்' பார்த்தார் ரஜினி

பருத்திவீரன்' படத்தை பார்த்த ரஜினி, நடிகர் கார்த்தியை பாராட்டினார்.


அமீர் இயக்கியுள்ள இந்த படம் கடந்தவாரம் வெளியாகி வசூலை குவித்துகொண்டிருக்கிறது.


இந்த படம் நடிகர் ரஜினிக்காக ஒரு பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் படம் பார்த்தனர்.

YAHOO - தமிழ்

அமெரிக்க சுழற்புயல்: 14 பேர் பலி

அமெரிக்காவின் தெற்குப் பகுதீயில் வீசிய சுழற்புயலில்(Tornado)குறைந்தபட்சம் 14பேராவது பலியாயிருப்பர் என கணிக்கப்பட்டுள்ள்ளது.

At least 14 killed in U.S. tornadoes

தமிழில் செல்போன் பில்: ஹட்ச் அறிமுகம்

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் பில்கள் அச்சிட்டு வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் 111 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, கடன் அட்டை மூலம் செல்போன் கட்டணம் செலுத்தும் முறையையும் ஹட்ச் அறிமுகப்படுத்தியுள்ளது. இதே 111 எண்ணை தொடர்பு கொண்டு எந்த மொழியில் பில் வேண்டுமென தெரிவித்தால், அவரவர் தாய் மொழியில் பில் அனுப்ப இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சினிமா பிரமுகர்கள் வீட்டில் சோதனை?

சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் இயக்குநர் சரணின் வீடு, மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்துவதாக பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து டிவி, பத்திரிகை செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் விடியோ கேமிரா குழுவினர் இவர்களது வீடுகளுக்குப் படையெடுத்தனர்.

ஆனால், இவர்களது வீடு, அலுவலகங்களில் வருமான வரி கணக்குகள் பற்றிய விவரங்கள் வழக்கமான முறையில் ஆய்வு செய்யப்பட்டன. எவ்விதமான சோதனையும் நடத்தப்படவில்லை என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இயக்குனர் மணிரத்னத்தின் மாஸ்டர் ப்ளான்




நடிகர் கார்த்திக்கின் மகன் - ஹீரோ

நடிகை ராதாவின் மகள் - ஹீரோயின்

விரைவில் கலர்ஃபுல் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்!


மேல் விபரங்களுக்கு YAHOO - தமிழ்

பஞ்சாப் - பா.ஜ. க. துணை முதல்வர்

்பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சிரோமணி அகாலி தள - பா.ஜனதா கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் , துணை முதல்வர் பதவி தங்களுக்கு தரப்பட வேண்டும் என பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது

YAHOO - தமிழ்

-o❢o-

b r e a k i n g   n e w s...