.

Friday, March 2, 2007

வண்ண சிகிச்சை

மாற்று மருத்துவ முறைகளில் தற்போது "கலர் தெரபி" எனப்படும் "வண்ண சிகிச்சை" மிகவும் பரவலாகி வருகிறது. நிறங்களில் இருக்கும் ஒளி ஆற்றலுக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உள்ளது என்பதன் அடிப்படையில் வண்ண சிகிச்சை நடைபெறுகின்றது.

பச்சை, சிவப்பு, நீலம் ஆகியன மூன்றும் முதன்மை நிறங்களாகும். இவற்றைக் கலந்து எந்த வகை நிறத்தையும் பெறலாம். சிவப்பு நிறம் வெப்பமானது. இது நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. சிவப்பு நிற வெளிச்சத்தில் சிவப்பு நிற அணுக்கள் பெருகுகின்றன். பசலைக்கீரை, சிவப்பு நிற தோல் உள்ள பழங்கள், சிவப்பு முட்டைகோஸ், சீமை இலைந்தப்பழம், சிவப்பு நிறம் உள்ள திராட்சை ஆகியன சிவப்பு நிற ஒளிக்கதிர்களை பரப்புகின்றது.

தொழுநோயில் பல நிலைகள் உள்ளன. எந்த வகை நிலைக்கும் மஞ்சள் நிற சிகிச்சை மிகவும் நல்லது என கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம், எலுமிச்சைபழம், பைன் ஆப்பிள் மற்றும் மஞ்சள் நிற கதிர்களைப் பரப்புகின்றன.

மனித உணர்வுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் நிறங்களுக்கு உள்ளதென வண்ண சிகிச்சை நம்புகின்றது. முதன்மை நிறமான நீலநிறதிற்கு நோய் தீர்க்கும் ஆற்றல் உள்ளது. மற்றொரு முதன்மை நிறமான பச்சை நிறம் கிருமிநாசினியாகச் செயல்படுகின்றது. வெள்ளை நைறம் மன அமைதிக்குப் பயன்படுகின்றது. சில சமயம் சிவப்பு நிற கதிர்கள் கோபத்தை தூண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.

நன்றி:-தினமலர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...