மேற்கு இந்தியத்தீவுகளின் பாதுகாப்புத் தன்மையைக் கருதி உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு தேசிய கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் வல்லுனர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்திய வீரர்களுடன் இவர்களும் தற்போது மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்திய வீரர்களுக்கு போதிய பாதுக்காப்பு வழங்க இயலாத சூழ்நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு, தூதரகம் மூலம் மத்திய அரசிடம் தெரிவித்தது. இதையடுத்து இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் சிலருக்கு, பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகளால் ஆபத்து நிலவுகிறது.
இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு இதுபோன்ற சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
நன்றி: MSNதமிழ்
Friday, March 2, 2007
இந்திய வீரர்களுக்கு தேசிய கமாண்டோ படை பாதுகாப்பு
Labels:
இந்தியா,
தீவிரவாதம்,
விளையாட்டு
Posted by சிறில் அலெக்ஸ் at 10:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment