.

Thursday, March 8, 2007

நதி நீரை தேச உணர்வுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் : பிரதமர்!

நமது நாட்டின் விவசாயத்திற்கும், செழுமைக்கும் ஆதாரமாகத் திகழும் நதிகளை தேச வளங்களாகக் கருத வேண்டும் என்றும், நதி நீரை அனைவரும் தேச உணர்வுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்!


வெப் உலகம்்

நாடாளு மன்றத்திற்கு திடீர் தேர்தல் - இல.கணேசன்

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடாளு மன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதாக தமிழக பிஜேபி தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.


மாலைச்சுடர்

AIIMS பதிவாளர் நீக்கம்

AIIMS நிர்வாகி வேணுகோபால் பதிவாளர் V.C.குப்தாவை நீக்கியுள்ளார்

The tussle for control of AIIMS intensified with institute Director P Venugopal sacking the controversial, health ministry-backed Registrar V P Gupta.

Gupta, who had been transferred to a rural health centre of AIIMS in Ballabhgarh in Haryana, was handed over an order signed by Venugopal stating that his appointment "has come to an end on February 25, 2007."

The Hindu

தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் விமான உதிரிபாக தொழிற்சாலை

சென்னைக்கு அருகிலுள்ள சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகத்தில் ரூ.300 கோடிக்கும் கூடுதலான முதலீட்டில், மோட்டார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றினை ஏற்கனவே இங்கி லாந்தை சேர்ந்த கெபாரோ நிறுவனம் அமைத்து வருகிறது.

முதலீடுக்கான சாதகமான சூழ்நிலை, தமிழ்நாடு அரசு அளித்த ஆதரவு ஆகியவை தந்த ஊக்கத்தினால், தற்போது ரூ.300 கோடிக்கு மேலான முதலீட்டில், கெபாரோ வாகனப் பொருட்கள் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் மூலமாக மோட்டார் வாகனம் மற்றும் ஏரோஸ்பேஸ் ஆகிய வற்றுக்குத் தேவையான ட்ïபுலர் பாகங்கள், மோட்டார் வாகன ப்ரேக்கிங் ஸிஸ்டம், பாசனர்ஸ், ஒருங்கிணைந்த பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கும், பரிசோதனைகள் செய்வதற்காகவும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் புதிய திட்டம் ஒன்றினை செயல்படுத்த கெபாரோ கருதியுள்ளது.

இதனால் 850 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு உள் ளிட்டு மொத்தம் சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இதற்கான புரிந்துணர் ஒப்பந் தம் கையெழுத்தானது.

- மாலை மலர்

தமிழகத்தில் ரூ.1500 கோடி ஜவுளி பூங்கா - மேலும் 10 பூங்காக்கள்


தமிழகத்தில் மேலும் 10 இடங்களில் உயர்தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா அமைய உள்ளதாக தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலாளர் விஸ்வநாத் ஷெகாங்கர் கூறினார்.

தமிழகம் முழுவதும் ரூ.1500 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் ரூ.300 கோடியில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே இருங்காட்டுகோட்டையில் ரூ.300 கோடியில் அமையும் பூங்காவின் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. பல்லடத்தில் ரூ.150 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இது தவிர குமாரபாளையம், வைகை, ஆண்டிப்பட்டி, கரூர், ஈரோடு, ஆகிய இடங்களிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடலூரில் ரூ.120 கோடி செலவில் ஜவுளி உற்பத்தி பூங்கா அமைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

இது தவிர மேலும் 10 உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

- மாலை முரசு

ஜிலானி சிகிட்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷ ஜிலானி புற்றுநோய் சிகிட்சைக்காக வெளிநாடு செல்ல மைய அரசு, அனுமதி அளித்து அவருக்கு கடவுச்சீட்டை வழங்க வியாழன்று முடிவு செய்துள்ளது.
ராய்டர்ஸ் செய்தி யாஹூ வழியே

காவிரி: கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் மனு

கர்நாடக அரசு காவிரி நதிநீர் ஆணையதீர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளது.

மேலும்..

9% பொருளாதார வளர்ச்சி: பிரதமர்

இந்திய பொருளாதாரம் இந்தவருடம் 9%மேல் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

Economy expected to grow by over 9 pc: Manmohan

"This year the growth rate will probably exceed nine per cent," Singh said replying to the marathon debate on the motion of thanks to the President's address in Lok Sabha.

Emphasising the need for growth, he said "we need to pursue a purposeful strategy so that the growth benefits every one."

The Prime Minister said investment rates have gone up by 34 per cent of GDP while the savings rate has risen to 32 per cent of GDP.

மகளிர்தின சிறப்பு ரிப்போர்ட்

மகளிர் தினத்தன்று இந்திய மகளிர்பற்றி வந்துள்ள செய்தி, ஆய்வுத் தொகுப்புக்களில் சிலவற்றின் சுட்டிகள் கீழே.

CHRONOLOGY - Famous legal cases and milestones for Indian women - Reuters

Women's status in India CNN

Status of women is changing: minister

Celebrating the spirit of brave Indian woman

International Women's Day: What Do Women Think?

Only 14% women in top management in India

International women’s day: Indian women face widening wealth gap

உலகின் மிகப்பெரிய கப்பல் QM2 கொச்சியில்

உலகின் மிகப் பெரியதும் விலை உயர்ந்ததுமான க்வீன் மேரி 2 பயணிகள் கப்பல் தன் முதல் பயணத்தில் இந்தியாவில்் தங்கும் ஒரே துறைமுகமாக கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2500 பேர் பயணிக்கும் இந்தக் கப்பல் இரண்டுநாட்கள் கொச்சியில் தங்கும்.
கப்பலின் வசதிகளை அறிய...

நாடாளுமன்றத்தில் பெண்ணாதிக்கம்

உலக மகளிர்தினத்தினை ஒட்டி நாடாளுமன்றத்தின் அனைத்து அங்கத்தினர்களும் தங்கள் கட்சிகளை மறந்து மகளிருடனும் அவர்தம் கருத்துக்களுடனும் உடன்பட்டனர்.கேள்விநேரங்கள் இரு அவைகளிலும் மகளிர் பிரச்சினைகளை விவாதிக்க ஒதுக்கப்பட்டது.

மேலும்...

தெலுங்குதேச சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம்

ஆந்திர சட்டமன்றத்தில் முதல்வரின் உறவினர் நிலம் வாங்குவதில் ் ஊழல் குறித்து நடந்த அமளியில் சட்டமன்ற இயங்குதலை தடைபடுத்தியதாக அவைத்தலைவர் கேஆர் சுரேஷ் ரெட்டி இருபதைந்து தெலுங்குதேச உறுப்பினர்களை இரண்டு நாட்களுக்கு விலக்கி வைத்துள்ளார்.

யாஹூ செய்தி..

புனேயில் 35,000 கோடி கருப்புப் பணம்

வருமானவரி அதிகாரிகள் ரூ.35,000 கோடி கணக்கில் காட்டாத சொத்துக்களை புனே வணிகர் ஹாசன் அலியின் வீட்டை சோதனையிட்டபோது அவரது கணினி தரவுகளிலிருந்து கண்டறிந்திருக்கின்றனர்.

மேலும் ....

காந்துரி உத்தரகாண்ட் முதல்வராக பொறுப்பேற்றார்


உத்தரகாண்ட் மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராக பி.ஜே.பி யின் திரு பி.சி.காந்துரிக்கு இன்று ஆளுநர் திரு சுதர்சன் அகர்வால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்். இவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி.
மேலும்..

'பொது இடத்தில் தூக்கிலிடுவதே லஞ்சத்தை ஒழிக்க வழி' - உச்ச நீதிமன்றம்

லஞ்ச வழக்கொன்றை விசாரிக்கையில் உச்ச நீதிமன்ற நீதிபதி 'உங்களைப் போன்றோரில் சிலரை (பொதுவில்) மின்சாரக் கம்பிகளில் தொங்கவிட்டால்தான் லஞ்சத்தை ஒழிக்க இயலும்' எனக் கூறியுள்ளார்.

Court: hanging in public only panacea for corruption
Observing that everyone wanted to loot this country, the Supreme Court on Wednesday said, "the only way to rid the country of corruption is to hang a few of you on the lamp post."

"The law does not permit us to do it but otherwise we would prefer to hang people like you to the lamp post,'' a Bench comprising Justices S.B. Sinha and Markandeya Katju said during arguments put forth by R. Singh, counsel for an accused.

As counsel tried to make a submission, Justice Katju said, "Everywhere, we have corruption. Nothing is free from corruption. Everybody wants to loot this country. The only solution for this menace is to hang some people in the public so that it acts as a deterrent on others.''

Corrupt persons should be hanged in public: SC
Will only public hanging erase corruption: Bench

இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்வி

இந்திய உச்ச நீதிமன்றம் இன்று மன்மோகன் சிங்கின் அரசுக்கு '1931ல் எடூக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் எப்படி OBCகளுக்கான 27% இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய இயலும்? ' எனும் முக்கிய கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளது.

'ஏன் அரசாங்கம் முதலில் சரியான, போதுமான தகவல்களை சேகரித்தபின்னர் இத்தகைய இடஒதுக்கீட்டை செய்யக்கூடடது?" எனக் கேட்டுள்ளது.


How can 1931 survey decide quota: SC
Decision on OBC policy?
SC questions basis for OBC quota in education

The judges wondered why the government could not set up an expert panel to sift the facts and determine the status of citizens on the basis of caste and class. The last caste-based census was carried out in 1931. At that time, only united India existed, and neither Pakistan nor Bangladesh had been created.

Subramanium, however, said the government’s decision was based on the Mandal Commission’s report, which had been upheld by a constitution bench of the court. But the judges noted that the Mandal order too is more than 25 years old.

இங்கிலாந்து விசா கட்டணம் அதிகரிப்பு

இங்கிலாந்து செல்ல விசா பெற கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

UK hikes visa fee for Indians, non-EU personnel
The UK on Wednesday steeply hiked the visa fee for those coming from India and other non-EU countries as tourists, to work, stay or study and settle down and announced a series of measures to curb illegal immigrants from operating in the country.

The joint announcement by the Home Office and Foreign and Commonwealth Office follows the biggest shake up of the UK's immigration system in its history last summer by the Home Secretary.

Under the new visa fee which will come into effect from April 1 this year, basic visitor visa fee would go up from 50 pounds (Rs 4,250 app.) to 63 pounds, student visa fee from 85 pounds to 99 pounds, Long-Term Visa (including Work Permit and Highly Skilled Migrant Programme Visa) from 85 to 200 pounds and settlement Visa from 260 to 500 pounds.

The transit visa fee would go up from 30 pounds to 44 pounds

திம்மக்கா என்ற பெண் நட்ட 284 ஆலமரங்கள் - வீடியோ

கர்நாடக மாநிலம் குளிகல் என்ற கிராமத்தில் சாலுமரதா திம்மக்கா என்ற 75 வயது
பெண் கடந்த 25 ஆண்டுகளாக சுமார் 284 ஆலமரங்களை நெடுஞ்சாலை ஓரமாக நட்டு வளர்த்து வந்துள்ளார். இப்பொழுது அதை அரசாங்கம் பெற்றுகொண்டது. எனினும் அந்த பெண்ணிற்கு உதவி தொகை எதுவும் வழங்கவில்லை.

கீழே வீடியோ உள்ளது..




நன்றி: CNN - IBN

உள்ளாட்சி அமைப்புகளில் 36.7% பெண் பிரதிநிதிகள் , பீகாரில் 54%

பொதுவாழ்க்கைக்கு பெண்கள் வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை விட அதிகமாகவே பெண் பிரதிநிதிகள் இடம்பெற்றது தெரிய வந்துள்ளது.

இதில், கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளில் 9.7 லட்சம் பெண் பிரதிநிதிகள் உள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டும் 36.7 சதவீதம்.

பெண் பிரதிநிதிகள் அதிகளவு இருக்கும் மாநிலம் பீகார். இங்கு உள்ளாட்சி பிரதிநிதிகளில் 54.1 சதவீதம் பேர் பெண்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 42.9 சதவீதம் பேர் பெண் பிரதிநிதிகளாகவே உள்ளனர்.
இடஒதுக்கீட்டு அளவை காட்டிலும் குறைவாக இருக்கும் மாநிலம் கோவா மட்டுமே. இங்கு உள்ளாட்சி பிரதிநிதிகளில் 30.2 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவது, புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

- தினகரன்

மெகா மில்லியன் லாட்டரியில் 390 மில்லியன் டாலர் வென்றவர்கள்

கடந்த இரு மாதங்களாக யாரும் வெற்றி பெறாததால் மெகா மில்லியன் லாட்டரியின் பரிசுத்தொகை 390 மில்லியனாக உயர்ந்தது. நேற்று நடைபெற்ற குலுக்கலில் 2 பேர் சரியான எண்களை தேர்வு செய்திருப்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் ஜியார்ஜியா மாகாணத்தை சேர்ந்த ட்ரக் ஓட்டுனர். அவர் இன்று தனது பரிசுத்தொகையை பெற்றுக்கொண்டார். மற்றொருவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இரண்டாவது பரிசுச்சீட்டு நியூஜெர்ஸி மாகாணத்தில் விற்கப்பட்டுள்ளது.

http://www.cnn.com/2007/US/03/07/mega.millions/index.html

இணையதள பயன்பாடு வளர்ச்சியில் இந்தியா முன்னிலை

இணைய தள பயன்படுத்வோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது என்றும், அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இணையதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலக அளவில் 10 சதவிகிதம் அதிகரித்து 747 மில்லியனாக உள்ளது என்றும், வளர்ச்சி விகிதத்தில் 33 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்றும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகளவு இணைய தளத்தை பயன்படுத்துவோரில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது என்றும் அது கூறியுள்ளது.


MSN - TAMIL

ஆறு மொழிகளில் பெரியார் படம்

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் பெரியார் திரைப்படம் தமிழ் தவிர ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தமாத இறுதியில் பெரியார் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



MSN - TAMIL

காவிரி விவகாரத்தில் அதிமுக நேரடி நடவடிக்கையில் இறங்கும்

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு விவகாரத்தில் அதிமுக நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலையில் உள்ளது என அக்கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


YAHOO - TAMIL

நவோமி - மேடையில் இருந்து தரைக்கு

நாகரிக ஆடைகளை முன்னிறுத்தும் 'ஃபேஷன் ஷோ'க்களின் மேடைகளில் தவறாமல் இடம் பிடிக்கும் நவோமி காம்பெல் (Naomi Campbell) நியு யார்க் நகர கிடங்குகளை சுத்தம் செய்யுமாறு தீர்ப்பாகி இருக்கிறது.

தனது அறையை சுத்தம் செய்யும் சிப்பந்தியின் மேல் செல்பேசியை வீசி அடித்த வழக்கின் விசாரணை முடிவில், ஐந்து நாள் சமூக சேவைப்பணியை நீதிபதி தீர்ப்பாக சொன்னார். கோபத்தை அடக்கி ஆளும் பய்ற்சிக்கும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

நான்காம் முறையாக நவோமி பணிப்பெண்களைத் தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து வழக்குத் தொடரப்பட்டது.

BBC NEWS | Americas | Supermodel Naomi 'to mop floors'

கோவா குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆஸ்திரேலியருக்கு ஜெயில்

கோவாவில் சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்காக வார்னருக்கு (Warner Wulf Ingo) பத்தாண்டு சிறைவாசம் தீர்ப்பாகியுள்ளது. கோவாவில் 1991-இல் மாட்டிக் கொண்ட வார்னர், சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடினார். பின்னர் சிட்னியில் கைதாகி, 2005-இல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.

பத்தாயிரம் ரூபாய் (அமெரிக்க டாலர் 220) அபராதமும் விதிக்கப்பட்டது.

வீடற்ற குழந்தைகளை ஐரோப்பிய சுற்றுலாவாசிகளின் பாலியல் இச்சைகளுக்குத் தருவதற்காக செயல்பட்ட குழுவில் இன்னும் பலர் பிடிபடவில்லை.

BBC NEWS | South Asia | Child sex tourist jailed in Goa

-o❢o-

b r e a k i n g   n e w s...