.

Thursday, March 8, 2007

கோவா குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆஸ்திரேலியருக்கு ஜெயில்

கோவாவில் சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்காக வார்னருக்கு (Warner Wulf Ingo) பத்தாண்டு சிறைவாசம் தீர்ப்பாகியுள்ளது. கோவாவில் 1991-இல் மாட்டிக் கொண்ட வார்னர், சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடினார். பின்னர் சிட்னியில் கைதாகி, 2005-இல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.

பத்தாயிரம் ரூபாய் (அமெரிக்க டாலர் 220) அபராதமும் விதிக்கப்பட்டது.

வீடற்ற குழந்தைகளை ஐரோப்பிய சுற்றுலாவாசிகளின் பாலியல் இச்சைகளுக்குத் தருவதற்காக செயல்பட்ட குழுவில் இன்னும் பலர் பிடிபடவில்லை.

BBC NEWS | South Asia | Child sex tourist jailed in Goa

1 comment:

Boston Bala said...

Dinamani.com - Headlines Page: சிறுவர்களுடன் தகாத உறவு ஆஸ்திரேலிய நாட்டவருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

பனாஜி, மார்ச் 8: 1991-ம் ஆண்டு வெளியான பாலியல் முறைகேட்டு வழக்கில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வார்னர் உல்ஃப் இங்கோ (43) என்பவருக்கு கோவா நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.

ஓரினச் சேர்க்கை, சிறார்களுடன் தகாத உறவு ஆகிய குற்றங்களுக்காக இங்கோவுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள படோர்தா-வில் சிறார்களை முறைகேடாக பாலியல் உறவுகளுக்குப் பயன்படுத்துவது 1991-ல் கண்டறியப்பட்டது. இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இங்கோ, ஆஸ்திரேலியாவில் சிட்னியில் 2005-ல் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார்.

மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஏ.டி.சால்கர், இங்கோவுக்கு, இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் (அபராதத்தை கட்டத் தவறினால் ஓராண்டு சிறைவாசம்), 363-வது பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் (அபராதம் கட்டத் தவறினால் 3 மாத சிறை), 367-வது பிரிவின் கீழ் 3 மாத கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார். குற்றவாளி இவற்றை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டுமென அவர் உத்தரவிட்டார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...