.

Thursday, March 8, 2007

தமிழகத்தில் ரூ.1500 கோடி ஜவுளி பூங்கா - மேலும் 10 பூங்காக்கள்


தமிழகத்தில் மேலும் 10 இடங்களில் உயர்தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா அமைய உள்ளதாக தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலாளர் விஸ்வநாத் ஷெகாங்கர் கூறினார்.

தமிழகம் முழுவதும் ரூ.1500 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் ரூ.300 கோடியில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே இருங்காட்டுகோட்டையில் ரூ.300 கோடியில் அமையும் பூங்காவின் பணி 70 சதவீதம் முடிந்துவிட்டது. பல்லடத்தில் ரூ.150 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இது தவிர குமாரபாளையம், வைகை, ஆண்டிப்பட்டி, கரூர், ஈரோடு, ஆகிய இடங்களிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடலூரில் ரூ.120 கோடி செலவில் ஜவுளி உற்பத்தி பூங்கா அமைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

இது தவிர மேலும் 10 உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

- மாலை முரசு

1 comment:

Anonymous said...

நெல்லை மற்றும் தெற்கு மாவட்டங்கள் இதில் இல்லாதது வருத்தமே!!

-o❢o-

b r e a k i n g   n e w s...