.

Thursday, March 8, 2007

உள்ளாட்சி அமைப்புகளில் 36.7% பெண் பிரதிநிதிகள் , பீகாரில் 54%

பொதுவாழ்க்கைக்கு பெண்கள் வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை விட அதிகமாகவே பெண் பிரதிநிதிகள் இடம்பெற்றது தெரிய வந்துள்ளது.

இதில், கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளில் 9.7 லட்சம் பெண் பிரதிநிதிகள் உள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டும் 36.7 சதவீதம்.

பெண் பிரதிநிதிகள் அதிகளவு இருக்கும் மாநிலம் பீகார். இங்கு உள்ளாட்சி பிரதிநிதிகளில் 54.1 சதவீதம் பேர் பெண்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 42.9 சதவீதம் பேர் பெண் பிரதிநிதிகளாகவே உள்ளனர்.
இடஒதுக்கீட்டு அளவை காட்டிலும் குறைவாக இருக்கும் மாநிலம் கோவா மட்டுமே. இங்கு உள்ளாட்சி பிரதிநிதிகளில் 30.2 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவது, புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

- தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...