.

Wednesday, May 2, 2007

ச: டிவைன் தியான மையத்தில் 6 வருடங்களில் ஆயிரம் பேர் சாவு

6 வருடங்களில் ஆயிரம் பேர் சாவு
டிவைன் தியான மைய நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு
கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம், மே 2-
கேரளாவில் கிறிஸ்தவ அமைப்பு நடத்திய தியான மையத்தில் கடந்த 6 வருடங்களில் ஆயிரம் பேர் இறந்தது தொடர்பாக தியான மையத்தை நடத்தி வந்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் டாக்டர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் ‘டிவைன் தியான மையத்தை‘ கிறிஸ்தவ அமைப்பு ஒன்று நடத்தி வந்தது. இதில் தியானம், யோகா ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன. பின்னர் இவ்விடத்தில் எய்ட்ஸ், கேன்சர் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இங்கு தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானோர் சென்று வந்தனர்.
இந்நிலையில் ‘டிவைன் தியான மையத்தில்‘ கடந்த சில வருடங்களில் ஏராளமானோர் மர்மமான முறையில் இறந்து வருவதாகவும் எனவே அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டுக்கு கடந்த வருடம் கடிதம் வந்தது. எனவே கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை விசாரிக்குமாறு கேரள அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி பத்மனாபன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஜி., வில்சன், எஸ்.பி., முஜார் அடங்கிய தனிப்படை போலீசார் தியான மையத்தில் அதிரடியாக புகுந்து திடீர் சோதனை நடத்தினர். ‘ஏழைகளுக்காக கிறிஸ்தவ அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் தியான மையத்தில் போலீசார் எப்படி அத்துமீறி புகுந்து சோதனை நடத்தலாம் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் தியான மையத்தை நடத்தி வரும் இயக்குநர் பாதிரியார்கள் ஜார்ஜ், மேத்யூ, கன்னியாஸ்திரி தெரேசா ஜோஸ், தியான மையத்தின் ஹோமியோபதி டாக்டர் தங்கம்மா, ஊழியர்கள் கோபிகிருஷ்ணன், செலின், சுனோய், பினோய், பிந்து மற்றும் அம்பி ஆகிய 10 பேர் மீதும் சாலக்குடி அருகே உள்ள கொரட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘டிவைன் தியான மையம்‘ அரசின் அனுமதியில்லாமல் இயங்கி வந்துள்ளது. இம்மையத்தில் கடந்த 6 வருடங்களில் 974 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இவர்கள் எப்படி இறந்தனர் என்று தியான மைய குறிப்பேட்டில் குறிக்கப்படவில்லை. இறந்தவர்களின் உடல்கள் எங்கும் பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை. அவர்களின் உடல் தியான மைய வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தியான மையத்தில் டாக்டர் தகுதி இல்லாதவர்களும், இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும் நோயாளிகளுக்கு அனுமதியில்லாமல் மயக்கமருந்து கொடுத்துள்ளனர். மறுப்பு தெரிவிக்கும் நோயாளிகளுக்கு வலுக்கட்டாயமாக மயக்கமருந்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தியான மையத்தில் பிடிபட்ட 10 பேர் மீதும் குற்றங்களை மறைத்தல், ஆதாரங்களை அழித்தல், கிரிமினல் திட்டம் தீட்டியது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ‘டிவைன் தியான மையத்தில்‘ கடந்த சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் தனது காதலனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்த கேரள பெண் டாக்டர் ஓமனா தங்கியதாகவும், அவர் அமெரிக்கா தப்பி செல்ல தியான மைய நிர்வாகிகள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்கள் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

=தமிழ்முரசு

ச:தாய்ப்பால் வழங்கி உலகசாதனை

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை உக்குவிக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஒரே நேரத்தில் தாய்ப்பால் தந்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

Thousands breastfeed for change - வீடியோ செய்தி
In a bid to promote breastfeeding thousands of mothers gather in the Philippines to feed their babies.

Thousands of mothers gathered in day care centers, hospitals and private venues in the Philippines as part of government and NGO efforts to promote breastfeeding and smash the Guinness World Record for simultaneous breastfeeding in multiple sites

ச:'வளரும் நாடுகள் க்ரீன்ஹவுஸ் வாயு உருவாக்கத்தை குறைத்துள்ளன'

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வின்படி வளரும் நாடுகள் க்ரீன்ஹவுஸ் வாயு உற்பத்தியை வளர்ச்சிபெற்ற நாடுகளுக்கான மேல் மட்டுக்கு அதிகமாகவே குறைத்துள்ளன.

ப்ரேசில், சைனா, இந்தியா, மெக்சிக்கோ உட்பட்ட வளரும் நாடுகளின் முயற்சியால் கடந்த 30 ஆண்டுகளில் வருடத்திற்கு தோராயமாய் 500மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

Poor nations brake greenhouse gas rise: U.N. draft

ச:பெண்கள், குழந்தைகளுக்கான நிதி - குறைவாக பயன்படுத்தப்படுகிறது

பாராளுமன்ற கமிட்டி ஒன்றின் ஆய்வின்படி மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிகிறது.

பெண்கள் முன்னேற்றத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து 50%க்கும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது.

Funds for women and children remain under-utilised
It said under the central schemes for women, utilisation figures were less than half of the approved outlay. Against an outlay of Rs 971.11 crore, the expenditure reported was only Rs 434.47 crore. Similarly, for centrally-sponsored schemes for women, only Rs 130.48 crore could be utilised by the end of the tenth plan against an allocation of Rs 275.01 crore.

Among the schemes in which funds were under-utilised were Integrated Child Development Services, Integrated Child Protection Scheme, Rashtriya Mahila Kosh, Swadhar, Comprehensive Scheme for Combating Trafficking of Women and Children and relief and rehabilitation of rape victims.

அரசு பங்களாக்களை ஆக்கிரமித்து குடியிருப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாடகை பாக்கி ரூ.50 கோடி

அரசு பங்களாக்களை அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துத் தங்கியுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 400 பேர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.50 கோடி என உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதில் பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.16.83 லட்சம் மற்றும் ரூ.18.97 லட்சமாகும்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மறைந்த காங்கிரஸ் எம்.பி. சுனில் தத் ஆகியோரின் குடும்பத்தினர், பிகார் முன்னாள் ஆளுநர் புட்டா சிங் வாடகை பாக்கியை செலுத்தத் தவறி விட்டனர். காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், தில்லியில் அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துள்ள பங்களாக்களுக்கு செலுத்த வேண்டிய வாடைகை பாக்கி முறையே ரூ.13.45 லட்சம், ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.13.19 லட்சத்தை செலுத்தவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்கள் 3 பேர், உரிமக் கட்டணம் / சேதங்களுக்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.1.10 கோடி. காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் தில்லி மாநில பிரிவுகள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.50.15 லட்சம் மற்றும் ரூ.19.31 லட்சம்.

Rs 50 crore rental arrears for unauthorised occupation of government bungalows-India-The Times of India

ச:புத்த மத அவமதிப்பு: நடிகை ராகி சாவன்ட் கொடும்பாவி எரிப்பு

நடிகை இராக்கி சாவன்ட் அணமையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புத்தர் சிலையின் பின்னணியில் ஒரு குளியல் தொட்டியில் குளிப்பதாக தோன்றியதை எதிர்த்து நாக்பூரில் புத்தமதத்தினர் அவரது கொடும்பாவியை கொளுத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியை ஒட்டி அமராவதி நகரில் இ.பி.கோ 295 பிரிவின் படி ஒரு வழக்கும் பதியப் பட்டுள்ளது.



DNA - Mumbai - Rakhi Sawant's effigy burnt in Nagpur - Daily News & Analysis

ச:கிரிக்கெட்:தினேஷ் கார்த்திக் திருமணம்

தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணியில் பங்குபெற்றுள்ள விக்கெட் கீப்பர் பாட்ஸ்மன் தினேஷ் கார்த்திக் மும்பையைச் சேர்ந்த நிகிடா வஞ்சாராவை இன்று திருமணம் புரிந்தார். மிக எளிய முறையில் நடந்த இந்த திருமணத்திற்கு அவரது சக கிரிக்கெட் குழுவினர் கொல்கொத்தாவில் நடந்துவரும் பயிற்சி காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை. கார்த்திக்கும் ஞாயிறு அன்று இந்த பயிற்சியில் கலந்து கொள்கிறார்.

DNA - Sport - Dinesh Kaarthick weds Nikita - Daily News & Analysis

ச: 27%இட ஒதுக்கீடு: மற்றுமொரு வழக்கு

சமத்துவத்திற்கான குடிமக்கள் ( Citizens for Equality) என்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்களைக் கொண்ட நலஅமைப்பு இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாக புதிய ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கொன்றை பதிந்துள்ளது.

நீதியரசர் பி.என் அகர்வால் தலைமையிலான பென்ச் அதனை மே 8 அன்று வரவிருக்கும் மற்ற வழக்குகளுடன் இணைத்து விசாரிக்க உத்திரவிட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டோரில் அதிகம் படித்தவர்களுக்கே சாதகமானது என்றும் கீழுள்ளவர்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

Zee News - Fresh PIL against OBC quota filed in SC

ச: 'SEZக்காக நிலங்களை வாங்கப்போவதில்லை' - தமிழக அரசு

'சிறப்பு பொருளாதார மண்டலங்களை(Special Economic Zone) உருவாக்குவதற்காக நிலங்களை கைப்படுத்தப்போவதில்லை' என தமிழக அரசு அறிவித்துள்ளது. 'நிலம் வாங்குவது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பு' என அந்த அறிவிப்பு சொல்கிறது. நந்திகிராம் நிகழ்வுகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

T. Nadu Govt. not to acquire lands for SEZs

ச:கோவை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு நாள் மே 31 அறிவிப்பு

52 பலியான 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு நாள் மே 31ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும்.

மொத்தம் 166பேர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

பயிற்சியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கருக்கு காயம்

பங்களாதேஷ் செல்லும் இந்திய அணியைத் தயார் செய்யும் பயிற்சியின் முதல் நாளன்று சச்சினுக்கு கணுக்காலில் அடிபட்டது. ஸ்ரீசாந்த் இட்ட பவுன்சரை சமாளிக்கும்போது வலது கால் முறுக்கிக் கொண்டதால், களத்தை விட்டு விந்திக்கொண்டே வெளியேறினார்.

NDTV.com - Tendulkar injured during practice

ச:'ஆஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதி திரட்டப்படுகிறது'

விடுதலைப்புலிகளுக்கு ஆஸ்திரேலியாவில் நிதி திரட்டப்படுகிறது என்பதை ஆஸ்திரேலிய அரசு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்காவின் வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கையில் சுமார் 10மில்லியன் அமெரிக்க டாலர்கள் (மொத்தத்தில் 20% முதல் 30%) ஆஸ்திரேலியாவிலிருந்து திரட்டப்படுகிறது எனக் கூறப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆஸ்திரேலியா 30% அளவில் இல்லையென்றும் 'சிறிய அளவு' ஆஸ்திரேலியாவிலிருந்து திரட்டப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது.

Australia accepts existence of fund-raising for LTTE
Some of it comes from Australia, probably nothing like 30 per cent, but small amounts do come from Australia. I don't think there's any doubt about that," Australian Foreign Minister Alexander Downer said.

"It's been very hard to collect evidence, though, about money in Australia and paid directly to the Tamil Tigers, which is, an offense, he added.

"Often the money is being raised for so-called Tamil welfare causes and what happens to that money once it's been raised and goes to those so called welfare causes, that's been a concern for us," he was quoted as saying by a local radio.

ச: காந்திநகரில் செய்தியாளர்கள் போராட்டம்

பத்திரிகையாளர்களுக்கு அகமதாபாஅத், காந்திநகர் போலீஸ் பவனுக்குள் நுழைய இரண்டாவது நாளாக அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

போலி என்கவுண்டர் குறித்த செய்திகளை சேகரிக்க அவர்கள் போலிஸ் பவனில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போலீஸ் தரப்பில் பத்திரிகையாளர்களுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Scribes protest police ban on entry of media
"Freedom of Speech is immortal", cried a banner carried by reporters of television channels, print media and news agencies who shouted slogans against Chief Minister Narendra Modi and DGP P C Pande.

Senior police officers refused to clarify why the police has banned the media from entering the Police Bhavan.

திருவண்ணாமலை கோவில் கலசங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இரு தொழிலதிபர்கள் காணிக்கையாக கொடுத்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளிக் கலசங்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறங்காவலர் குழுவினரும், துணை ஆணையர் வாசுநாதனும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சரியாக இருக்கிறதா என்று சோதனையிட்டனர். அப்போது, சிவாச்சாரியார்கள் பொறுப்பில் இருந்த, தொழிலதிபர்கள் கொடுத்த தங்க, வெள்ளிக் கவசங்கள் கணக்கில் வராதது தெரிய வந்தது. கோவிலுக்குச் சொந்தமான பொருட்களின் பட்டியலிலும் அவை இடம் பெறவில்லை.

இதுகுறித்து சிவாச்சாரியார்களிடம் விசாரித்தபோது, கோவில் மூலமாக அவை தரப்படவில்லை என்றும் நேரடியாக சிவாச்சாரியார்களிடம் வழங்கப்பட்டது தெரிய வந்தது. கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகையை சிவாச்சாரியார்கள் எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம், அவை தற்போது எந்த நிலையில் உள்ளன, எங்கே உள்ளன, இப்படி எடுத்துச் செல்லப்பட்டது அந்த தொழிலதிபர்களுக்குத் தெரியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Missing of Rs 5 lakh worth golden kalasams create flutter in Tiruvannamali temple

கருணாநிதி பேரனுக்கு தேர்வு எழுத தடை

போதிய அளவு அட்டென்டன்ஸ் இல்லாததால் இல்லாததால் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் அமைச்சர்களின் பேரன்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குறைந்தபட்ச வருகை பதிவு 75 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், முதல்வர் கருணாநிதி மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோரின் பேரன்களுக்காக தான் இந்த திருத்தம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

CM's grandson barred from writing exam

ச: அரசியலிலிருந்து விலகுகிறார் வாஜ்பாய்?

ஆர்.எஸ்.எஸ்'ன் வாராந்தரி பத்திரிகையில் வாஜ்பாய் முழுநேர அரசியலிலிருந்து விலகப் போவதாகக் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. உ.பி யில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுகளுக்கு முன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாஜ்பாய் இதைச் சொன்னதாக 'பஞ்சன்ய' தெரிவிக்கிறது.

மேலும் வாஜ்பாய் ஒரு சிறந்த அறிவாளி(man of high intellect) எனப் புகழ்ந்துள்ளது.

Vajpayee wants to quit active politics: RSS organ
"Relieve me of active politics. It's enough, let me go," the editorial in the latest issue of the weekly journal has quoted him as saying before joining the BJP's campaign in UP.

குடித்ததனால் மணமகன் மாற்றம்

பிகாரின் அர்வால் மாவட்டத்தில், குடிபோதையில் மணமகன் மணமேடை ஏறினார். இதனால் மணப்பெண், மணமகனின் தம்பியை கைப்பிடித்தார்.

தன்னுடைய நடத்தைக்காகத் தற்போது வருந்தும் அண்ணன், தனக்கு இனிமேல் எப்படி திருமணமாகும் என்று கவலைப்படுவதாக பேட்டி தந்திருக்கிறார்.

Drunk groom chased away :: CHICAGO SUN-TIMES :: Nation | Financial Express

11 வருடங்களாக ஓடும் இந்தி திரைப்படம்

முபையின் மரத மந்திர் திரை அரங்கில் ஒரு இந்தி திரைப்படம் 11 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஷா ருக் கான் கஜோல் நடிப்பில் வெளிவந்த 'தில்வாலே துல்ஹனியா லேஜாயங்கே' எனும் படம்தான் அது.

இதில் இன்னும் வியப்பென்னவென்றால் இன்றும் வார இறுதிகளில் அரங்கு நிறைந்து காட்சிகள் ஓடுகின்றனவாம்.

DDLJ completes 600 weeks

-o❢o-

b r e a k i n g   n e w s...