.

Friday, August 31, 2007

துபாயில் பிட்ஸ் பிலானி (BITS PILANI ) பட்டமளிப்பு விழா

துபாயில் பிட்ஸ் பிலானி (BITS PILANI ) பட்டமளிப்பு விழா

துபாயில் பிரபல இந்திய பொறியியல் கல்லூரியான பிட்ஸ் பிலானியின் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் அமீரக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலி பின் அப்துல்லாஹ் அல் காபி கலந்து கொண்டு நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு பட்டங்களை வழங்கினார்.

டாக்டர் அப்துல்லாஹ் அல் கரம், அய்யூப் காசிம், இந்திய துணைத்தூதர் வேணு ராஜாமணி, ETA ஸ்டார் குரூப் இயக்குநர் ஈஸா அல்குரைர், மேலாண்மை இயக்குநர் சையத் எம் ஸலாஹ¤தீன், நிதிதுறை இயக்குநர் ஆரிப் ரஹ்மான், பிட்ஸ் பிலானி இயக்குநர் டாக்டர் எம்.எம். ராமச்சந்திரன், டாக்டர் எஸ். வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August850.xml§ion=theuae&col=
150 students get degrees at BITS-Pilani convocation

இலங்கையில் இன்று --- ஆகஸ்ட் 31, 2007

கடந்த சில வருடங்களில் 5700 க்கு மேலானோர் காணாமல் போயுள்ளனர்


இலங்கையில் கடந்த சில வருடங்களில் காணமல் போன 5700 க்கு மேற்பட்டோர் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆராய்ந்து வருகிறது.


2007ல் மட்டும் நூற்றுக்கணக்கானோர் நாடு பூராவும் காணமல் போயுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை [Amnesty International (AI)] தெரிவித்துள்ளது.


அதிகமான ஆட்கடத்தல்கள் இலங்கை இராணுவத்தினராலும் அதனுடன் இணைந்து செயற்படும் துணைக் குழுக்களாலுமே நடாத்தப்படுகிறது எனவும் இதில் காணாமல் போனோர் தமிழர்களும் முஸ்லிம்களுமே ஆவர் எனவும் பல மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.ஆதாரம் : BBC சிங்கள சேவை.


இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி


இலங்கை நாணயத்தின் பெறுமதி வரலாறு காணாத [all time low] வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 113.36 இலங்கை ரூபாய்களாக நாணய மதிப்பு குறைந்துள்ளது.


இலங்கை நாணயத்தின் பெறுமதி வரும் வாரங்களில் ஒரு அமெரிக்க டொலர் 118 இலங்கை ரூபாய்கள் எனும் வகையில் வீழ்ச்சியடையலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் [economic analysts ]தெரிவித்துள்ளார்கள்.ஆதாரம் : Daily Mirror
கொழுப்பில் உள்ள பிரிட்டிஸ் தூதுவரலாயத்தின் சில சேவைகள் சென்னைக்கு இடமாற்றம்


கொழுப்பில் உள்ள பிரிட்டிஷ் தூதுவராலயத்தின் விசா வழங்கும் சேவை மற்றும் விசா விண்ணப்பங்கள் ஏற்கும் சேவை போன்றன சென்னைக்கு மாற்றப்படவுள்ளதாக கொழுப்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது பற்றி இன்னும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இறுதி முடிவு எடுக்கவில்லையெனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது இவ்வாறிருக்க, பிரிட்டிஷ் தூதரகம் இச் சேவைகளை கொழுப்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக டெய்லி மிரர் தெரிவிக்கிறது.


கொழும்பில் உள்ள Visa Facilitation Service (VFS) எனும் தனியார் நிறுவனம் வேறு பல நாட்டு தூதரகங்களுக்காக இச் சேவையை ஏற்கனவே செய்து வருவது குறிப்பிடத்தக்கது.ஆதாரம் : டெய்லி மிரர்


அரசு அனுசரணையுடன் ஆட்கடத்தல், ஆசியாவில் இலங்கை முதலிடத்தில்!


பலவந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது.


அரசாங்கத்துக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் எதிரானவர்களே கடத்தப்பட்டு காணாமற் போகச் செய்யப்படுகிறார்கள். இவற்றில் ஈடுபடுவோருக்கு தண்டனை விலக்கு அளிக்கப்படுகிறது.


இவ்வாறு அறிவித்துள்ளது, ஹொங்ஹொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு.ஆதாரம் : உதயன்
"இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது பிரிட்டன்" - இலங்கை அரச உயர் அதிகாரி


இலங்கையில் மகிந்த ராஜபக்சாவின் ஆட்சியைவிட ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியையே பிரிட்டன் விரும்புவதாக இலங்கை அரசின் சமாதனச் செயலகத்தின் செயலர் இரஜீவ விஜேசிங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக மனித உரிமை என்ற போர்வையில் இலங்கை மீது அழுத்தங்களைத் திணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


ஆதாரம்: IANSஇலங்கை விமானப்படைத் தாக்குதலில் காலை இழந்த 6 வயதுச் சிறுவனுக்கு பிரபாகரன் நிதியம் உதவிதை 2007 ல் மன்னார் மாவட்டத்தில் இலங்கை விமானப் படைகள் தாக்கியதில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 34 பேர் காயமடைந்தும் இருந்தனர். இத் தாக்குதலில் ஒரு 6 வயதிச் சிறுவன் ஒரு காலை இழந்தான். அவனின் தந்தையும் இத் தாக்குதலில் காலை இழந்திருந்தார். இச் சிறுவனின் 4 வ்யதுச் சகோதரன் இத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தான்.
இச் சிறுவனுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிரபாகரன் நிதியத்திலிருந்து [Pirapaharan’s Trust Fund] 100,000 ரூபாய்களை வழங்கியுள்ளார்.


ஆதாரம் : Tamilnetமன்னாரில் 3 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.


இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மன்னார் நகரில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் இருவர் முஸ்லிம்கள், மற்றையவர் தமிழர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆதாரம் : Tamilnetமட்டக்களப்பிலிருந்து தமிழ்மக்களை விரட்டிய பின் சனத்தொகைக் கணிப்பீடு : தமிழ் நா.உ க்கள் குற்றச்சாட்டு


அண்மையில் இலங்கை இராணுவம் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றினர்.


இந்த இராணுவ நடவடிக்கையால் ஏப்பிரல் 2007 ல் இருந்து இன்று வரை 250,000 தமிழர்கள் மட்டக்களப்பில் அகதிகளாக்கப்பட்டனர். இவர்களில் ஆக 75,000 பேரே இதுவரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.கிட்டத்தட்ட 25,000 பேர் தமிழகத்திற்குச் சென்றுள்ளனர்.


இந்த நிலையில் இலங்கை அரசு சனத்தொகைக் கணிப்பீட்டை நடத்தி அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்மக்களின் வாக்குரிமையை பறிக்கத் திட்டமிடுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆதாரம் : Tamilnet
தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு பிரிட்டன் புத்துயிர் அளிக்கிறது -ஜே.வி.பி சாடுகிறதுஅரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு பிரிட்டன் புத்துயிர் அளிக்கிறது என சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான ஜே.வி.பியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா பிரிட்டனைச் சாடியுள்ளார்.


ஜக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புக்கள் பல சாட்டுக்கள் சொல்லி இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் ஏற்கனவே தலையிட்டு வந்தாலும், பிரிட்டனின் இத் தலையீடு மிகவும் ஆபத்தானது என்கிறார் சில்வா.


மேற்குலக நாடுகள் எப்போதும், சமாதனத்திற்கான உதவி, மனித மேம்பாட்டுக்கான உதவி, மனித உரிமை எனும் வார்த்தை ஜாலங்களோடு வந்து உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆதாரம் : டெய்லி மிரர்


ஜனாதிபதி ராஜபக்சாவின் எதிர்ப்பாளர்களுடன் சந்திரிகா சந்திப்புஜனாதிபதி ராஜபக்சாவின் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவு எனும் அமைப்பை ஆரம்பித்திருக்கும் அணியினரை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இன்று சந்தித்துக் கருத்துப் பரிமாறினார்.


சிறீலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் சார்பில் மங்கள சமரவீர , ஸ்ரீபதி சூரியாராச்சி, ரிரான் அலஸ், விபுலாங்கனி மலாகமுவ, சிசில் பண்டார செனவிரத்ன ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


ஆதாரம் : Lanka Dissent
யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சிறப்பு அடையாள அட்டை பெற வேண்டும் : இலங்கை இராணுவம்


10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் யாழ்ப்பாணத்தில் விசேட அடையாள அட்டைகள் வழங்க இராணுவம் முயன்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கு முன்னர் 15 வயதுக்கு அதிகமான அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தது, தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நடவடிக்கையின் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வேறு நபர்களின் வருகையைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசேட அடையாள அட்டை நடைமுறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் இவை வழங்கப்படவுள்ளன எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆதாரம் : Lanka Dissent

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமார்


சென்னை : நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று சென்னையில் உதயமானது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று புதிய கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்சியின் கொடியை இன்று சரத்குமார் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவிற்கு சரத்குமார் தலைமை வகித்தார். கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார். நடிகர் சரத்குமார் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அவைத் தலைவராக முருகன், துணைத்தலைவராக எர்ணாவூர் நாராயணன், பொருளாளராக கரு.நாகராஜன், துணை பொதுச் செயலர்களாக ஏ.எல்.சுந்தரேசன், சீனியம்மாள், ரவீந்திரன் துரைசாமி, கொள்கை பரப்பு செயலராக மருது.அழகுராஜ், தலைமை நிலைய செயலராக ஜெயபிரகாஷ், நிதிநிலைச் செயலராக ரகுபதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நன்றி: தினமலர்

டையனா - 10ஆம் ஆண்டு நினைவு

மறைந்த இங்கிலாந்து இளவரசி டையனாவின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இங்கிலாந்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

அவர் குடும்பத்தினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் 'உலகின் தலைசிறந்த அன்னை' என டையனாவின் மகன் இளவரசர் ஹாரி பேசினார். டையனாவின் வீட்டின் முன் பொதுமக்கள் பலரும் மலர்கொத்துக்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் இளவரசர் சார்லசின் மனைவி கமில்லா கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Diana Remembered at Memorial Service Forbes, NY - 1 hour ago
UK Remembers Diana on 10th Anniversary of Death NPR (படங்கள்)
Princes lead Princess Diana memorial service NEWS.com.au
Diana Memorial: Camilla's Empty Chair ABC News

25 ரன் அதிகம் பெற்றிருந்தால் வெற்றி - திராவிட்

மான்செஸ்டர், ஆக. 31:

மான் செஸ்டரில் நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படு தோல்வி அடைந்தது.

கண்ணுக்குத் தெரிந்த வெற்றி கை நழுவிப்போனது வருத்தம் அளிப்ப தாகவும், இந்திய அணி இன்னும் 25 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப் போம் என்றும் திராவிட் கருத்து தெரிவித்து உள்ளார். ஏழு போட்டிகள் கொண்ட இத் தொடரில் 31 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.


மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.

விஜயகாந்த் 2 நாள் கெடு

சென்னை, ஆக. 31:

சென்னை நகரில் மலை போல குப்பைகள் குவிந்துகிடப்பதால் முடைநாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, உடனடியாக குப் பைகளை எடுக்காவிட்டால் எனது தலைமையில் 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) முதல் குப்பைகள் அகற்றப் படும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.

துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது

சென்னை, ஆக. 31:

மூன்றாவது மண்டலத்தில் துப்புரவு பணி செய்ய தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதேபோல மற்ற 3 மண்டலங்களில் இருந்தும் அந்த நிறுவனத்தை வெளியேற்ற மாநகராட்சி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேயர் கூறினார்.

மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.

கற்பழிப்பு வழக்குகளை பெண் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்

புதுடெல்லி, ஆக. 31-
கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்ற வழக்குக ளை கூடிய மட்டும் பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என உள்விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை கோட்பாடுகள் திருத்த மசோதா, உள்விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி பல்வேறு பரிந்துரைகளை தற்போது இந்தக்குழு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.குழு செய்த பரிந்துரைகள் வருமாறு:

கற்பழிப்பு வழக்குகளை கூடிய மட்டும் பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் மருத்துவர் ஒருவரது மேற்பார்வையில் தான் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். புகார் கொ டுத்த பெண்ணை காவல்நிலையத் துக்கு அழைத்து வராமல் அவரது வீட்டில் வைத்தே விசார ணை நடத்த வேண்டும். விசாரணையை பெண் போலீஸ் அதிகாரி மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைந்தவராக இருந்தால் விசாரணையின் போது அவரது பெற்றோர் அல்லது சமுக பணியாளர் ஒருவர் உடன் இருக்க வேண்டும். சிறுமிகள் கற்பழிப்பு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற போர்வையில் ஒருவரை காவல் நிலையத்தில் அடைத்து வைக்கக்கூடாது. தனிநபர் சுதந்திரம் மிக முக்கியம். சாட்சிகள் பல்டி அடிக்காமல் இருக்க அவர்களது வாக்குமூலத் தை எழுத்துபூர்வமாக கையப்பத்துடன் எழுதி வாங்க வேண்டும். மேலும் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களில் மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் வாங்க வேண்டும்.

இவ்வாறு பல பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ளது. இவற்றில் பலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக நிலைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

இளையராஜாவுக்கு என்.டி.ஆர். விருது - ஆந்திர அரசு அறிவிப்பு

சித்தூர், ஆக.31-
நடிகர்கள் கிருஷ்ணா, அம்பரிஷ், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு ஆந்திர அரசு சார்பில் என்.டி.ஆர். விருது வழங்கப்படுகிறது.

ஆந்திரா மாநில அரசு சிறந்த கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.ராமராவ் பெயரில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. 2002க்கு பின்னர் விருது வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

ராஜசேகர ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த விருது வழங்குதல் தகவல் துறையில் இருந்து தெலுங்கு சினிமா துறை வளர்ச்சி கழகத்துக்கு மாற்றப்பட்டது.

விருது பெறும் நபர்களை தேர்வு செய்து, அரசுக்கு சிபாரிசு செய்ய 3 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இதில் டி.எல். காந்தாராவ், எம். பாலையா, எம். மோகன்பாபு ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த கமிட்டி 2003 முதல் 2005 வரை 3 ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பெயரை சிபாரிசு செய்து, மாநில தகவல் துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயணரெட்டியிடம் அனுப்பியது.
இதையடுத்து என்டிஆர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஐதராபாத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நேற்று அறிவித்தார்.

அதன்படி 2003ம் ஆண்டுக்கான விருது தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்கும், 2004ம் ஆண்டுக்கான விருது இசைஞானி இளையராஜா வுக்கும், 2005ம் ஆண்டுக்கான விருது பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ§க்கும வழங்கப்படுகிறது, இதற்கான விழா விரைவில் நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு" செல்லவும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ படம் வெளியீடு

அரசு அலுவலகங்களிலும் தூதரகக் கட்டிடங்களிலும் இடம் பெற குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களின் அதிகாரபூர்வ நிழற்படம் இரு வார காலமாக தீர்மானமாகாமல் கடைசியாக வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை புடைவையில் நீல பார்டரோடு தங்க கோடிட்ட படத்தை குடியரசுத்தலைவரின் நிழற்பட பிரிவு குடியரசுத்தலைவரின் செயலகத்திலிருந்து அனுமதி பெற்று வெளியிட்டது. இந்தப் படத்தில் புடைவையின் பல்லு பகுதி அவரது தலையை மறைக்குமாறு உள்ளது. முன்னர் வெளியான படத்தை குடியரசுத்தலைவரின் செயலகம் ஆட்சேபித்ததால் திரும்பப் பெறப்பட்டது.

The Hindu News Update Service

அதிகாரமிக்க முதல் பத்து பெண்களில் சோனியா

பிரபல வணிக இதழ் ஃபோர்பஸ் வெளியிடும் உலகின் நூறு அதிகாரமிக்க பெண்கள் வரிசையில் ஐந்தாவதாக இந்திய அமெரிக்கரும் பெப்சி நிறுவன தலைவர்மற்றும் முதல் நிர்வாகியுமான இந்திரா நூயி இடம்பெற்றிருக்கிறார். இவரை அடுத்து ஆறாவது இடத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி இடம் பெற்றுள்ளார்.

ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக பதவியேற்றுள்ள அஞ்செலா மெர்க்கில் இரண்டாவது வருடமாக முதலிடத்தைப் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் சீன துணை பிரதமர் உ யி யும் சிங்கப்பூரின் டெமெஸ்க் நிறுவன முதல் நிர்வாகி ஹோ சிங் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டெலெஸ்சா ரைஸ் நான்காம் இடத்தில் உள்ளார்.

சோனியா காந்தியைப் பற்றி இவ்விதழ் இத்தாலியில் பிறந்த இந்தியாவின் மிகுந்த அதிகாரமிக்க இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தான் அரசியலில் 1990இல் இறங்கியபின்னர் வெகுதூரம் வந்துள்ளார் எனக் கூறுகிறது. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டில் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு இவரது பங்கை சிறப்பாக கருதுகிறது.

முழு கட்டுரைக்கு Sonia Gandhi, Indra Nooyi among world's 10 most powerful women-Politics/Nation-News-The Economic Times

சேதுசமுத்திரம் திட்டத்திற்கு இடைக்கால தடை

உச்சநீதிமன்றத்தில் இன்று சேது சமுத்திரம் திட்டத்தில் ராம் சேது எனப்படும் மணற்பரப்பை பாதிக்காமல்
அகழ்வுப் பணி தொடரலாம் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தடை செப்.14வரை இருக்கும். முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறது இந்த ரீடிஃப் செய்தி

அணுசக்தி பயன்பாட்டில் இந்தியா பின்தங்க முடியாது: பிரதமர்

இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்ட அமைதிக்குப் பிறகு தாராபூர் அணுசக்தி நிலையத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா அணுசக்தி பயன்பாட்டினால் கிடைக்கும் வளங்களை இழக்கலாகாது எனக் கூறினார். Fast reactor நுட்பங்கள் விரைவாக மேம்படுத்தப்படவேண்டும் என்றும் உள்நாட்டிலேயே யுரேனியம் கிடைக்கச் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார். மகாராட்டிரத்தின் தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த அணுசக்தி நிலையத்தில் புதிய இரு அணுசக்தி ஆலைகளை நாட்டிற்கு அர்ப்பணித்து பேசுகையில் இவ்வாறு கூறினார்.

We can't afford to miss nuclear bus: PM

மான் வேட்டை:சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது

சிங்காரா மான் வேட்டை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டை விசாரித்த இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு இலக்கம் ரூபாய் ஈட்டுப்பணமும் ரூ50,000க்கு கடன்பத்திரமும் பெற்று ஜாமீனில் விட உத்திரவிட்டது. வழக்கின் விசாரணை 24 அக்டோபருக்கு தள்ளிப் போடப்பட்டது.

முழு விவரங்களுக்கு Rajasthan HC grants bail to Salman

அறிவியல்/தொழில்நுட்ப செய்திகள்

உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டி
------------------------------------------------------------
உலகிலேயே மெல்லிசான தொலைக்காட்சிப்பெட்டியை ஜப்பானின் ஷார்ப் (Sharp) நிறுவனம் பார்வையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது. இந்த தொலைக்காட்சிப்பெட்டியின் தடிமன் வெறும் 20mm-கல் தான். இதை சுவற்றில் ஒரு படம் போல மாட்டிவைக்க முடியும்.
இந்த தொலைக்காட்சிப்பெட்டி எப்பொழுது சந்தையில் விற்கப்படும் என்று தெரிவிக்கபடவில்லை.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இதோ


புற்றுநோய்க்கு ஒரு புது மருந்து
-----------------------------------------
எய்ட்ஸ் நோய்க்காக உபயோகப்படுத்தப்பட்ட ஒரு மருந்து புற்று நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய திரன் கொண்டது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த செய்தியை பற்றி அறிய இந்த இணைப்பை சொடுக்குங்கள்


ஆதாரம் :
http://www.reuters.com/article/technologyNews/idUSL3050290720070830
http://www.reuters.com/article/scienceNews/idUSN3045790520070831

துபாய் லாட்டரியில் பங்களாதேஷைச் சேர்ந்த மெக்கானிக்கிற்கு பரிசு


துபாய் லாட்டரியில் பங்களாதேஷைச் சேர்ந்த மெக்கானிக்கிற்கு பரிசு


துபாயில் போஸ்ட்கார்ட் மில்லியனர் எனப்படும் வாராந்திர குலுக்கல் நடைபெற்றுவருகிறது. இதன் பரிசுத் தொகை திர்ஹம் ஒரு இலட்சம். கடந்த வாரம் நடைபெற்ற குலுக்கலில் பங்களாதேஷைச் சேர்ந்த முஹம்மது சலீமிற்கு பரிசு கிடைத்துள்ளது. இத்தகவல் கிடைத்ததும் சலீம் பெருமகிழ்ச்சியடைந்தார்.

இப்பரிசுத்தொகை சுமார் இரண்டு மில்லியன் பங்களாதேஷ் தாகாவாகும். இப்பணத்தைக் கொண்டு தனது சிறுநீரக கோளாறு சிகிச்சையை செய்திடவும், தனது மனைவிக்கு நகை வாங்கவும், தனது இரண்டு பெண்களது திருமணம் செய்திடவும் மேலும் தனது ஊரில் ஒரு பள்ளிக்கூடம் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார் சலீம்.

http://www.gulfnews.com/nation/Society/10150429.html
Plans galore as luck favours auto mechanic

லண்டனில் நெல்சன் மண்டேலாவுக்கு சிலை : உற்சாக வரவேற்பு

லண்டனில் நெல்சன் மண்டேலாவுக்கு சிலை : உற்சாக வரவேற்பு


லண்டனில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் சிலை பார்லிமெண்ட் வளாகத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. லண்டன் வருகை புரிந்த அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் பிரதமர் பிரெளன், லண்டன் நகர மேயர் கென் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Here's welcome for Mandela
www.gulfnews.com

செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை

செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை

செளதி அரேபியாவில் வெளியாகிவரும் அரபி நாளிதழ் அல் ஹயாத். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் இந்நாளிதழ் செளதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் பதிப்புகளைக் கொண்டுள்ளது. செளதி அரேபியாவில் அதிக பட்ச விற்பனையை இந்நாளிதழ் கொண்டுள்ளது.

சமீபகாலமாக இந்நாளிதழ் செளதி அரேபிய அரசின் கொள்கைகள் மற்றும் நாட்டின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதமாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் இயாத் மதானி பலமுறை இதுகுறித்து எச்சரித்தும் இந்நாளிதழ் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் சமிப்பத்தில் வெளியான ஈராக் குண்டுவெடிப்பு குறித்த செய்தியில் செளதி அரேபியாவில் உள்ள குழுவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அல் ஹயாத் நாளிதழுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடை விதிக்கப்பட்ட காரணம் எதனால் என்பது முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.http://archive.gulfnews.com/articles/07/08/30/10150147.html
Saudis ban distribution of Al Hayat indefinitely

அறிவியல் இன்று - 31/08/2007

வலைப்பூக்கள் மூலமாக பரப்பப்படும் கணிணி வைரஸ்
--------------------------------------------------------------

வலைப்பூக்கள் மூலமாக இணைய தள சுட்டிகளை இடுகைகளாக இட்டு,அதை சொடுக்கும் பயனர்களின் கணிணிகளில் வைரஸ்களை பரப்பும் ஒரு கும்பல் பற்றிய செய்தி இதோ இந்த பக்கத்தில்

ஒரு ஐபாட் (Ipod) அளவே உள்ள கருவியில் 30,000 திரைப்படங்களை சேமிக்கலாம்
----------------------------------------------------------------------------------------------


அணுக்களின் அளவுகளில் பொருட்களை கையாளுவது குறித்த ஆராய்ச்சியை நானோ டெக்னாலஜி (Nanotechnology) என்று ஆங்கிலத்தில் வழங்குவார்கள் . இந்தத்துறையில் ஐ.பி.எம் நிறுவனத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் மூலம் ஒரு ஆப்பிள் ஐபாட் அளவே உள்ள கருவியில் 30000 திரைப்படங்களை உள்ளடக்கும் தொழில்நுட்பம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன.இந்த செய்தியை உள்ளடக்கிய இணையப்பக்கம் இங்கே

இன்னும் சில மாதங்களில் காரில் உண்மையாகவே பறக்கலாம்
------------------------------------------------------------------


தரையில் இருந்து 10 அடி உயரத்தில் பறக்கக்கூடிய கார் ஒன்றை மொலர் இண்டர்நேஷனல் (Moller International) எனும் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் வெளியிட உள்ளது.
வருடத்திற்கு 250 கார்கள் எனும் அளவில் தயாரிப்பை தொடங்க உள்ள இந்த நிறுவனம் ,இந்த கார் ஓட்டுவதற்கு சுலபமாகவும் பயணிகளுக்கு நிறைய இடம் கொடுக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறி உள்ளது.
M 200G என்று அழைக்கப்பட உள்ள இந்த காரின் விலை 90,000 அமெரிக்க டாலர்களாக நிற்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயில் குத்து மதிப்பாக 90,000 X 40 = 36,00,000 ரூபாய்கள்.

கம்மியாதான் இருக்குல்ல??
காரை பற்றி மேலும் விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.
பி.கு:படத்தில் இருப்பது அவர்கள் விற்கப்போகும் காரின் மேம்பட்ட வெளியீடு (advanced version).

ஆதாரம் :
http://news.bbc.co.uk/2/hi/technology/6970368.stm
http://www.reuters.com/article/technologyNews/idUSN3046298520070830
http://news.bbc.co.uk/2/hi/business/6970031.stm

படம்:
http://www.21stcentury.co.uk/images/technology/moller_m400_skycar.jpg

கட்டுரைக்கு கிடைத்த காசை பொதுநிவாரணநிதிக்கு அளித்த தமிழக முதல்வர்

கட்டுரைக்கு கிடைத்த காசை பொதுநிவாரணநிதிக்கு அளித்த தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய ‘’மாநிலங்களில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ எனும் சிறப்புத் தலைப்பில் எழுதிய கட்டுரை இந்திய சுதந்திர நாளன்று
ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியிருந்தது. அதற்கு மதிப்பூதியமாக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை அதன் தலைமைப் பதிப்பாசிரியர் என்.ராம் முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தார். இக்காசோலையை உடனடியாக முதலைமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு வழங்க உத்தரவிட்டார்.

http://www.tn.gov.in/pressrelease/pr290807/pr290807_560.pdf

கேரளாவில் ஓணம் பண்டிகை : மது விற்பனையில் சாதனை

கேரளாவில் ஓணம் பண்டிகை : மது விற்பனையில் சாதனை
திருவனந்தபுரம் : ஓணம் பண்டிகையையொட்டி மதுபான விற்பனையில் கேரளா சாதனை படைத்துள்ளது. ஓணம் பண்டிகை விடுமுறை நாட்களில் அங்குள்ள மதுபான கடைகளில் குடி மன்னர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் அன்றைய தினம் மட்டும் ரூ.52.79 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது என்று கேரள மாநில மதுபானக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 41.2 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

www.dinamalar.com

ஜெய்ப்பூரில் பிராமணர் பந்த்

தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பிராமணர்கள் சில நாள்களுக்கு முன்னால் ஜெய்ப்பூரில் ஊர்வலம் சென்றனர். அப்போது தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பிராமணர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதில் பலர் காயம் அடைந்தனர்.

அதைக் கண்டிக்கவும், தங்களுக்குள்ள ஆதரவை அரசுக்குக் காட்டவும் பிராமணர்கள் புதன்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களுக்கு ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.

ஜெய்ப்பூரில் பல தொழில், வர்த்தக நிறுவனங்களும் இந்த அழைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தங்கள் நிறுவனங்களை மூடின. ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் விடுமுறை அறிவித்திருந்தன.

ஜெய்ப்பூர் பழைய நகரப்பகுதியில் கடைகளை மூடுமாறு பந்த் ஆதரவாளர்கள் கடைக்காரர்களை கேட்டுக்கொண்டபடியே வீதிவீதியாகச் சென்றனர்.

நகரில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வீதிகளில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தனர்.

வரலாற்றில் இருந்திராத வகையில் தங்கள் சங்கம் பந்த் நடத்தியிருப்பதாக சர்வ பிராமண சபா தலைவர் சுரேஷ் மிஸ்ரா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முழு அடைப்புக்கு மக்கள் தாங்களாகவே முன்வந்து ஆதரவு அளித்தனர் என்று ஸ்ரீராஜ்புத் கர்ணி சேனாவின் மாநில அமைப்பாளர் லோகேந்திர கால்வி குறிப்பிட்டார்.

தினமணி

Spotlight | Jaipur strike nearly total, business affected | Indiainteracts.com
The Hindu News :: Brahmins' body calls for Jaipur bandh today
Brahmins call bandh for reservation

Thursday, August 30, 2007

சவால் தோழமை கட்சிகளுக்கில்லை - கருணாநிதி.

முதல்- அமைச்சர் கருணாநிதி அளித்துள்ள கேள்வி-பதில் ஒன்று மாலைமலரிலிருந்து..

கேள்வி:- சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 30 ஆம் நாள் நடைபெற்ற தங்களின் மைத்துனர் வீட்டுத் திருமணத்தில் தாங்கள் பேசும்போது, "கழக ஆட்சிக்கு சிலர் அறைகூவல் விடுக்கும் போதெல்லாம் உறுதியான வீர உள்ளம் படைத்த கழகத்தினர் இருக்க பயமேன்'' என்று குறிப்பிட்டதை தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளுக்கு விடுத்த மிரட்டல் என்பது போல சில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?

பதில்:- தோழமை கொண்டோருக்கு யாரும் "சவால்'' அல்லது "மிரட்டல்'' விட மாட்டார்கள்-துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் தான் அறை கூவலோ, சவாலோ விடுவார்கள். வேடிக்கை என்ன வென்றால் தி.மு.க. அணியை உடைக்க வேண்டுமெனப் "பகீரத'' முயற்சி செய்து வருகிற சில ஏடுகள், திருமணத் தில் நான் பொதுவாகப் பேசியதை, கழகத்தின் உறுதியை எடுத்துக் கூறியதை, திரித்து வெளி யிட்டுக்கலகம் செய்திடத் துடியாய்த் துடிக்கின்றனவே அது தான் பெரிய வேடிக்கை. இத்தகைய எத்தர்களின் விஷமப் பிரச்சாரத்தில் எல்லோரும் ஏமாந்து விடமாட்டார்கள்.

சென்னையில் எலிகாய்ச்சல் பரவல்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் எலிகாய்ச்சல் நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். `லெப்டோ ஸ்பைரோசஸ்'' என்று சொல்லக்கூடிய இந்த வகை காய்ச்சல் எலி, பூனை, நாய், ஆடு, மாடு ஆகியவற்றின் சிறுநீர், மலம் போன்றவற்றில் இருந்து நோய் கிருமி உருவாகிறது.

சிறுகாயங்கள், சிரங்கு, புண், கீறல்கள் உடலில் இருந்தால் கூட அதன் வழியாக பாதிக்க கூடும். அதனால் வீட்டு விலங்குகள் வளர்ப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சிரங்கு, புண் இருந்தால் அவற்றை சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் கிருமி தாக்கக்கூடும். இதனால் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி ஏற்படும். சிலருக்கு தோளில் தழும்பு கூட உண்டாகும்.

`எலி' காய்ச்சல் தொற்றக்கூடியது அல்ல. நாம் பாதுகாப்பாக இருந்தால் இந்நோய் வராமல் தடுக்கலாம். வீட்டு விலங்குகளின் சிறுநீரோ, மழை நீரோ, கழிவு நீரோ காயம் ஏற்பட்ட பகுதியில் பட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும் என்று மாநகராட்சி மருத்துவர் ஒருவர் கூறினார்.

மேலும் விபரங்களுக்கு மாலைமலர்

மூப்பனார் இருந்திருந்தால் என் அரசியல் மாறுபட்டு இருக்கும்: விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஆக. 30-

மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல முக்கிய பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மூப்பனார் சமாதியில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவதுë:-

மூப்பனார் என்னால் மறக்க முடியாத தலைவர். அவர் எனக்கு பல யோசனைகளைச் கூறினார். "தம்பி இப்போது சினிமாவில் இருக்கட்டும், தேவைப்படும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அவரது குடும்பத்தில் ஒருவனாகவே இருந்தேன். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தவறாமல் வாழ்த்துச் சொல்வேன்.

இன்னும் அவர் உயிரோடு இருப்பது போலவே உணருகி றேன். மரியாதை, நல்ல பண்புகளை மூப்பனாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அடிக்கடி அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாசல்படி வரை வந்து வழியனுப்பி வைப்பார். அவரது பண்பை இன்று ஜி.கே.வாசனும் பின்பற்றி வருகிறார். நான் தற்போது வேறு அரசி யலில் இருக்கிறேன்.

மூப்பனார் இப்போது இருந்திருந்தால் என் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கும். எளிமைக்கு மூப்பனார்தான் உதாரணம். மூப்பனார் காமராஜரை பின்பற்றினார். நான் அவரை பின்பற்றிதான் கதர் ஆடை அணிகிறேன்.

மேலும் செய்திக்கு மாலை மலர்

சென்னை: பிரிக்கப்படும் பேருந்து நிலையம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூன்றாகப் பிரித்து தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூரில் வெளியூர் பேருந்துகளுக்கான நிலையத்தை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில்குமார் மாநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் யோசனை தெரிவித்திருந்தார்.

இதுபற்றி மாநகர வளர்ச்சிக் குழுமத்தலைவரும் அமைச்சருமான பரிதி இளம்வழுதியிடம் கேட்டபோது,

கோயம்பேடு பஸ் நிலையத்தை பிரித்து சென்னை நகரின் எல்லையில் பேருந்து நிலையங்களை உருவாக்கினால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என்பது உண்மைதான்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கண்டிப்பாக மாற்று ஏற்பாடு செய்துதான் ஆக வேண்டும்.எனவே இதுகுறித்து கலந்தாய்வு கூட்டத்தில் எல்லோரும் சொன்ன யோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

என்று பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.

இறந்த பின்னும் 16 ஆண்டுகளாகச் சம்பளம்.

மணிப்பூர் மாநில மின்துறையில் மின்தடப்பணியாளர் (Lineman) ஒருவருக்கு அவர் இறந்த பின்னும் 16 ஆண்டுகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

L.நிங்தேம்ஜாவ் என்பது அந்தப் பணியாளரின் பெயர். 1985 ல் இறந்த அவருடைய பணி உரிமைகள் குறித்து வினவ அவரின் மகன் ரிஷிகாந்தாவுக்கு அப்போது போதிய வயதோ, மனைவிக்கு படிப்பறிவோ இருக்கவில்லை.

படிப்பறிவற்ற குடும்பத்தினரருக்கு நண்பர் ஒருவர் வழங்கிய அறிவுரையின் பேரில், ஓய்வூதியம் முதலிய பெறுமதிகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வினவிய போது, இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Man draws salary for 16 years after death.

நான்காவது ஒருநாள்: டென்டுல்கர் அரை சதம் அடித்தார்


மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், பூவா/தலையா-வை வென்ற இந்தியா, பந்தை இங்கிலாந்திடம் ஒப்படைத்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் அங்கம் வகித்த முன்னாஃப் படேலுக்கு பதில் அஜித் அகர்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

துவக்க ஆட்டக்காரர் கங்குலி, அணித்தலைவர் டிராவிட், கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மூன்று விக்கெட் இழப்புக்கு 32 ஓட்டங்களே எடுத்த நிலையில் டென்டுல்கரின் அரை சதம், இந்தியாவின் சரிவை தடுத்து நிறுத்தியது.

34 ஓவர் முடிவில் மூன்றரை ஓட்டம் வீதம் நான்கு பேரை இழந்து 123 ஓட்டங்களை இந்தியா எடுத்துள்ளது

நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் வானிலையால் போட்டியில் மழை குறுக்கிடுமோ என்ற சந்தேகமும் உள்ளது.

BBC SPORT | Cricket Scorecard
4th ODI: England v India at Manchester, Aug 30, 2007 - Cricinfo

ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் தற்கொலை

ஷார்ஜாவில் இந்தியர் தற்கொலை

ஷார்ஜாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அப்துல் ரஷீத் முஹம்மது கெளஸ் ( வயது 41 ) செவ்வாய்கிழமை இரவு தான் தங்கியிருந்த மூன்றாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஐந்தாயிரம் திர்ஹம் மாதச் சம்பளம் கொடுப்பதாக வாக்களிப்பட்டு குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இதனை அவர் பணியாற்றின நிறுவனத்தினர் மறுத்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட முஹம்மது கெளஸிற்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இருபது வருடங்களாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அவர் கடந்த ஜுலை 29 ஆம் தேதி ஷார்ஜா வருகை புரிந்தார்.

சம்பளப் பிரச்சனை இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருந்த போதிலும் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ( Consulate ) வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி 2002ல் 54 பேரும், 2003ல் 63 பேரும், 2004ல் 67 பேரும், 2005ல் 82 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று நிகழும் தற்கொலைகளைத் தடுக்க இந்திய துணைத்தூதரகம் மனதளவில் பாதிக்கப்படுவோருக்கு ஆலோசனை வழங்க கடந்த மே மாதம் 18ம் தேதி முதல் ஆலோசகர்களை நியமித்துள்ளது. இவர்களை 050 9433111 எனும் அலைபேசி எண்ணில் வாரந்தோறும் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் அமீரகத்திற்கு வருவதால் அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் வழியுறுத்துகின்றனர்.

http://www.godubai.com/gulftoday/article.asp?AID=31&Section=Home
Indian jumps to death in Sharjah

நாளிதழ் வாசிக்கும் மூன்றே வயது குழந்தை.

2004 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி பிறந்தா அர்ஜயா நிஸ்காம் என்ற மூன்று வயது குழந்தை நாளிதழ்களையும், பாடபுத்தகங்களையும் தெளிவான உச்சரிப்புடன் சரளமாக வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

இச்சிறுவன் இன்னமும் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்பது இதில் இன்னும் வியப்பு. மாவட்ட கூடுதல் நடுவர் நிதின் பானுதாஸ் ஜாவலே என்பார் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

எஃகு நகரமான ரூர்கேலாவில் வசிக்கும் இந்த பிறவி மேதையின் தந்தை அம்ரேந்திர பெஹரா, அங்குள்ள எஃகாலையின் ஊழியர்களுள் ஒருவராவார்.

மேலும் படிக்க... பி/டி/ஐ செய்தி..

Three-year-old reads newspapers and text books

அணுசக்தி ஒப்பந்தம்: 6 வினாக்கள் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இதுபற்றி ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவை இப்போது வாபஸ் பெறுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.

இருந்தாலும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசிடம் 6 விளக்கங்களை கேட்க இந்திய கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளது.

1. அணுசக்தி 123 ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு என்ன பயன்கள் ஏற்படும் இதன் விளைவு என்ன?

2. அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?

3. ஒப்பந்தத்தில் இந்தியாவில் சொந்த அணுசக்தி திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? குறிப்பாக அணு ஆயுதம் தொடர்பாக என்ன விளைவு ஏற்படும்?

4. இதனால் இந்தியா- மேற்கு ஆசியா, 3-ம் உலக நாடுகள் இடையே பாதிப்பு ஏற்படுமாப அணி சேரா கொள்கை என்ன ஆகும்?

5. இந்த ஒப்பந்தத்தால் நமது மின்சார தேவை எந்த அளவுக்கு பூர்த்தியாகும். இது பொருளாதார ரீதியில் லாபம் தரக்கூடியதா?

6. இது பாதுகாப்பான ஒப்பந்தம்தானா?

மாலைமலர்

Cong likely to freeze nuke deal temporarily - Newindpress.com
Govt bows to Left, will go slow on nuclear deal

நரேந்திர மோடி காரின் குறுக்கே பாய்ந்ததால் கால்சென்டர் ஊழியரை நடுரோட்டில் உதைத்த போலீசார்

அகமதாபாத் நகரில் நரேந்திரமோடி ஒரு விழாவில் கலந்து கொண்டு ஆஸ்ரம் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று ரோட்டை கடந்தார். இதனால் நரேந்திரமோடியின் பாதுகாப்புக்கு சென்ற காரும் மற்ற கார்களும் வரிசையாக திடீர் என்று நின்றன.

உடனே போலீசார் இறங்கி அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் தனது பெயர் உசேன், தாகிர் மார்க்கெட் வாலா என்றும் கால்சென்டரில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். அவர் அகமதாபாத்தில் பொற்றோருடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நரேந்திரமோடி கார் சென்ற பின்பு பின்னால் வந்த காரில் இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, முதல்-மந்திரி காரின் குறுக்கே பாய்பவர்களை எச்சரிக்கவே இது போன்ற விசாரணையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

போலீசாரால் தாக்கப்பட்ட வாலிபர் உசேன் கூறுகையில் "ஆஸ்ரம் ரோட்டில் முதல்-மந்திரி கார் வருவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. போக்குவரத்து மூடப்படவில்லை. இதனால் சாலையை கடந்தேன்'' என்றார். அவரது பெற்றோர் கூறுகையில் "நாங்கள் நரேந்திரமோடியை நேசிப்பவர்கள் அவரது அபிமாணிகள்'' என்றனர்.

மாலைமலர்

வெளிநாடு போகாதீர்கள்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள்

சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரி வணிகவியல் விழா நேற்று நடைபெற்றது. கல்லூரிகளுக்கு இடையேயான இந்த விழாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை அமைத்து வருகின்றன. நம் நாட்டில் உள்ள தங்கம், நிலக்கரி, வெள்ளி உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுத்துச் செல்லவா வருகின்றன? இல்லை இந்தியாவில் இருக்கிற திறமைசாலிகளை, கடினமாக உழைக்கக்கூடிய இளைஞர்களை நம்பிதான் அவரை வந்த வண்ணம் உள்ளன.

25 லட்சம் பேருக்கு வேலை
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வருடத்திற்கு 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நாஸ்காம் அறிக்கை கூறுகிறது. அதோடு படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களில் 50 சதவீதம்பேர் வேலைகொடுப்பதற்கான தகுதி இல்லாமல் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது. இந்த நிலை இருந்தால் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உள்ள நாடு சீனாதான். ஆனால் சீனர்களுக்கு நம் அளவுக்கு ஆங்கிலப்புலமை இல்லை. எனவே, இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று பெண்கள் அதிகளவு படிக்கிறார்கள். பெண் கல்விக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் 45 சதவீதம்பேர் பெண்கள். பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டியது மாணவிகளின் கடமை. படிக்கிற மாணவ-மாணவிகளுக்கு செல்போன் தேவையில்லை. செல்போன் இருப்பதால் படிப்புக்கு பலவகையிலும் இடைïறுகள் ஏற்படுகின்றன.

வெளிநாடு போகாதீர்கள்
மாணவ-மாணவிகள் படித்துமுடித்துவிட்டு இந்தியாவிலேயே பணியாற்ற வேண்டும். யாரும் வெளிநாடு போகாதீர்கள். 40 லட்சம் இந்திய விஞ்ஞானிகள் வெளிநாடு சென்று குடியேறிவிட்டனர். ஒரு லட்சத்திற்கும் குறைவான விஞ்ஞானிகளே இந்தியாவில் உள்ளனர். 25 லட்சம் விஞ்ஞானிகள் அமெரிக்கா சென்று அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். 15 லட்சம் பேர் பிற நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார். இந்த விழாவில் ஜெயின் கல்லூரி செயலாளர் கவுதம் பி.வைத், முதல்வர் எம்.கே.மாலதி உள்பட பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

கட்சிகளின் போராட்டத்தால் ஆம்புலன்ஸில் இறந்த குழந்தை

சிம்லா நகரில் காங்கிரஸ் கட்சியினரும் பிஜேபி கட்சியினரும் நடத்திய பேரணிகளால் போக்குவரத்து தடைபட்டு நான்கு வயது சிறுவன் டிங்கூ சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லமுடியாமல் வழியிலேயே இறந்தான். விதான்சபை( மக்களவை) எதிரில் இருகட்சிகளுமே பேரணி நடத்த முயன்ற கூட்டத்தில் அதிக சுரத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை கொண்டுசென்ற ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்டது. காவலர்கள் இலேசான தடியடி செய்தே மக்களவை அங்கத்தினர்களை கலைக்க முடிந்தது.

இது பற்றி:While Cong, BJP fight, boy dies in ambulance

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது

அனைத்து இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறு விலக்கிக் கொள்ளவில்லையெனின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. முன்னதாக தில்லி உயர்நீதிமன்றம் இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு காண அரசிற்கு கெடு விதித்தது. மருத்துவ பட்டச் சான்றிதழ்கள் வழங்கப் படாவிடில் நீதிமன்றம் தலையிடவேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தது. இதனை அடுத்து உலக உடல்நல நிறுவன சந்திப்பொன்றிற்கு பூடான் செல்லவிருந்து உடல்நல அமைச்சர் அன்புமணி தன் பயணத்தை தள்ளிப் போட வேண்டியதாயிற்று. சான்றிதழ்களில் கையொப்பமிட்டிருந்த தாளாலர் மரு.சந்தீப் அகர்வால் நியமனம் செல்லாது என்று அமைச்சர் முன்னதாக கையெழுத்திட மறுத்து வந்தார்.

AIIMS doctors end strike

கருணா குழு முக்கியஸ்தர் சுட்டுக் கொலை

கருணா குழுவின் பிராந்திய அரசியல் பிரிவின் தலைவரான முரளி என அழைக்கப்படும் நடராஜா குமரன் , வயது 24, இன்று புதன்கிழமை விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் [ pistol] குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக விரட்டி விட்டோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்து வரும் வேளையில் இச் சம்பவம் நடந்துள்ளது.


கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் 2003 ல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி வருகிறார்.ஆதாரம் : BBC சிங்கள சேவை.

இச் சம்பவம் பற்றிய பிந்திய செய்திகொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான Daily Mirror [வியாழக்கிழமை ஏடு] நடராஜா குமரன் விடுதலைப் புலிகளால் கொல்லப்படவில்லை எனச் செய்தி வெளியிட்டுள்ளது. கருணா குழுவில் இருந்து பிரிந்த குழுவான பிள்ளையன் குழுவைச் சேர்ந்தவரே இந்த நடராஜா குமரன் என்றும், இவர் கருணா குழுவினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் பற்றி விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

அறிவியல் இன்று - 30/08/2007

சிலந்தி மனிதனை போல் சுவற்றில் ஏறலாம்
--------------------------------------------
புகழ்பெற்ற கேலிச்சித்திர கதாபாத்திரமான ஸ்பைடர்மேனை (Spider man) போல வருங்காலத்தில் யார் வேண்டுமானாலும் செங்குத்தான சுவாற்றின் மேல் அனாயாசமாக ஏறலாம். அப்படி நடக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக இதை பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதை பற்றிய செய்தி இதோ
உங்கள் தூக்கம் பார்த்து ஏழுப்பி விடக்கூடிய அலாரம்
-----------
----------------------------------------------
நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது எழுப்பாமல் தூக்கம் கம்மியாக இருக்கும் நேரத்தில் எழுப்பி விடக்கூடிய அலாரம் பற்றி தெரிய வேண்டுமா??
இந்த செய்தியை படியுங்கள்.வயது வித்தியாசம் குழந்தை பெற முக்கியம்
-------------------------------------------------
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசம் அவர்கள் குழந்தை பெறுவதை பாதிக்கும் என இவற்றை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆஸ்த்திரிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்

சிவாஜி' (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார்

சென்னை, ஆக.29-

ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' படம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக, சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு, மேலும் 3 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதில், ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடிக்கிறார்.


மேலும் செய்திக்கு "தினதந்தி".

மரத்தில் `சாய் பாபா' உருவம் - பொது மக்கள் திரண்டு வந்து தரிசனம்

பாஸ்தி, ஆக.29-

உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி நகரத்தில் உள்ள ஒரு மரத்தில் சாய் பாபாவின் உருவம் தெரிவதாக செய்தி பரவியது. இதைக் கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு சென்று அந்த மரத்தில் தெரிந்ததாகக் கூறப்படும் சாய்பாபா உருவத்தை தரிசித்தனர். பைசபாத், கோரக்பூர், தேவிபடான் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வந்தனர். பெருந்திரளாக மக்கள் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட

மேலும் செய்திக்கு "தினதந்தி".

குப்பை அகற்றும் பணி மந்தம் - கொலம்பியா நிறுவனத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை, ஆக. 30: மாநகராட்சியின் 3 மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தம் பெற்றுள்ள நீல்மெட்டல் பனால்கா நிறுவனம், உரிய முறையில் குப்பைகளை அகற்றாததால், அதனிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திக்கு "தினகரன்".

டில்லியில் தென்னக மீனவர்கள் போராட்டம்

கடல் அட்டை எனப்படும் மீன் வகையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடல் அட்டைகளைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பல்வேறு அண்டை நாடுகளில் கடல் அட்டைகளைப் பிடிக்க இவ்வாறு தடை விதிக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிபிசி

The Hindu : National : Fishermen seek lifting of the ban on sea cucumber (Holothurians)
Udayavani - National Fishworkers Forum appeals to PM

Wednesday, August 29, 2007

இலங்கையில் இன்று...இலங்கைக்கு வருகை தந்திருக்கும் மியான்மார் பதில் பிரதமர் லெப்டினட் ஜெனரல் தீன்சின் தமது பாரியார் சகிதம் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ திருமதி தீன்சினுக்கு கைலாகு கொடுத்து வரவேற்பதைக் காணலாம். ...தகவல் : தினக்குரல்
"இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை" - இலங்கைப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்காஇலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.தகவல் : தினக்குரல்
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் - விடுதலைப் புலிகள் சந்திப்புஇலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சோல்பர்க் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இன்று (ஓகஸ்ட் 29) பிற்பகல் வன்னியில் விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் புலித் தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரயன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள், போர் நிறுத்தம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்~ கடந்த ஞாயிறன்று தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக வன்னித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மதிப்பளித்து அதனை நடைமுறைப்படுத்துவது குறுpத்தும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரினால் இந்தப் பேச்சுவார்த்தையின் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.தகவல் : Lanka Dissent
தமிழ் இளைஞர்கள் இருவரை வாழைச்சேனையில் காணோம்வாழைச்சேனை, நாசிகன் பகுதியைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காண வில்லை என்று வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து சிவானந்தன் (வயது22) மற்றும் கைலாயபிள்ளை தயானந்தன் (வயது 18) ஆகியோரே காணாமல் போயிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த இளைஞர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கையடக்கத் தொலைபேசிக்கு "கிற்காட்' கொள்வனவு செய்வதற்காக ஓட்டமாவடிப் பகுதிக்குச் சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணையை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.தகவல் : உதயன்

தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர்.

பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக ஆகஸ்டு 31 அன்று சென்னை வருகிறார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நவீன கலை அரங்கத்தை அவர் திறந்து வைக்கிறார்.

இந்தக் கலையரங்கத்தை செப்டம்பர் ஒன்றாம் தேதி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் திறந்து வைக்கிறார். இதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி விமானப் படை விமானம் மூலம் அவர் சென்னை வருகிறார். அங்கிருந்து ராஜ்பவன் செல்லும் அவர் இரவில் அங்கு தங்குகிறார். மறுநாள், ஒன்றாம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார். அங்கு கலையரங்கத்தை திறந்து வைத்த பின்னர், ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

பணம் கடத்த முயன்ற இரு இந்தியப் பிரஜைகள் கொழும்பில் கைது

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு இந்தியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இன்று (ஓகஸ்ட் 29) பிற்பகல் இந்த இரண்டு இந்தியப் பிரஜைகளும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு செல்வதற்காக முயற்சித்த வேளையில், விமான நிலைய அதிகாரிகளினால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டுள்ளனர்.


இவ்வேளையில்,இவர்கள் நாணயத் தாள்களை விழுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இவர்கள் நாணயத் தாள்களை விழுங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு இவர்கள் இருவரும் விழுங்கியிருந்த வெளிநாட்டு நாணயத் தாள்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.தகவல் : http://lankadissent.com

'டாக்டர்கள்' விஜய், ஷங்கருக்கு எதிராகப் போராட்டம்

நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதைக் கண்டிக்கும் விதமாக கடலூரைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் தமிழரசன் கடலூரில் கழுதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

எத்தனையோ சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதுவும் செய்யாத கவர்ச்சி ஆட்டம் போடும் நடிகர் விஜய்க்கும், தமிழுக்கு எதிரான படம் எடுக்கும் இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தை வன்மையாக கண்டிக்கும் வகையில் தான் இப்போராட்டத்தை நடத்தினேன்
என்றார்.

மத்திய மெகா மின் திட்டம் செய்யூரில் வருகிறது.

மத்திய மின்சக்தி ஆணையம் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் அல்ட்ரா மெகா மின் திட்டங்களை அமைக்க ஒன்பது இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அவை தமிழ்நாட்டில் செய்யூர், மத்திய பிரதேசத்தில் சாசன், குஜராத்தில் முந்த்ரா, ஆந்திராவில் கிருஷ்ணபட்டினம், ஜார்கண்டில் திலையா, ஒரிசாவில் சுந்தர்கர், கர்நாடகாவில் தாத்ரி, சட்டீஸ்கரில் அகல்தரா, மகாராஷ்டிராவில் கிர்யி ஆகிய இடங்கள் ஆகும்.

இந்த 4000 மெகாவாட் திறன் கொண்ட அல்ட்ரா மெகா மின் திட்டங்கள் உருவாக்கி இயக்கும் திட்டத்தின் அடிப்படையில் யுனிட் விலை போட்டி ஏல முறையில் செயல்படுத்தப்படும்.

அனைவருக்கும் மின்சாரம் என்ற இலக்கை நோக்கிச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மின் அமைச்சகத்தை நாடாளுமன்ற ஆலோசனைக் குழு பாராட்டியதோடு திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் போது, பொது மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் ஒரே மாதிரியான நிவாரணக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.


தமிழ்சிஃபி யிலிருந்து..

விஜயகாந்தை காங்கிரஸ் பக்கம் இழுக்கும் ராஜா முகம்மது.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் ராஜா முகம்மது. ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டு அரசியலில் இருந்தே ஒதுங்கியிருந்தவர் சமீபகாலமாக
ஜெயலலிதாவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேர்க்கும் புதிய முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார்.

டெல்லி சென்றுள்ள ராஜா முகம்மது அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஜெயலலிதாவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது. மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவராக ஜெயலலிதா உள்ளார். அவரை 3வது அணிக் கட்சிகள் நிராகரிக்க வேண்டும். அவரை மூன்றாவது அணித் தலைவராக நியமித்தால் அந்தக் கூட்டணிக்கே எதிர்காலம் இருக்காது.

விஜயகாந்த்துக்கு பெரும் மக்கள் செல்வாக்கு உள்ளது. கிராமப் புறங்களில் அவருக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. எனவே அவரை காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளேன்
என்றார் ராஜா முகம்மது.

சென்னை: குப்பையால் திணறும் மாநகராட்சி

சென்னையில் குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட சிங்கப்பூர் ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தக் காலம் முடிந்து தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம், நகர் முழுவதும் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் நகரமே நாறிப் போய்க் கிடக்கிறது.

தற்போது நீல் மெட்டல் என்கிற தென் ஆப்பிரிக்க நிறுவனத்திடம் இந்தப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. ஓனிக்ஸ் நிறுவனம் தனது ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது.

இதனால் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் நகர் முழுவதும் பெருகிப் போய் விட்டன. தெரு முனைகள், சாலை ஓரங்கள் உள்பட கிடைக்கும் இடத்தில் எல்லாம் மக்கள் குப்பையை கொட்டி வைத்துள்ளதால் நகரமே நாறிப் போயுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீல் மெட்டல் நிறுவனம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாததால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஓனிக்ஸ் நிறுவனம் மக்கள் வசதிக்காக பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தது.

போதிய ஊழியர்களோ, வசதிகளோ இல்லாத பெருகிக் கிடைக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் நீல் மெட்டல் திணறி வருகிறது. அந்த நிறுவனத்திடம் குப்பையை அள்ள போதிய வாகனங்களும் இல்லை.

செனனை நகரின் முக்கியப் பகுதிகளான அடையாறு, தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை என நகரில் எங்கு பார்த்தாலும் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கடந்த நான்கு நாட்களாக இந்தக் குப்பைகள் அகற்றப்படாததால் பெரும் துர்நாற்றம் வீசுகிறது.

இன்னும் 10 நாட்களில் நிலைமை சீராகும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சரும், முன்னாள் மேயருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் குப்பை அள்ளும் பணி முழுவதும் பாதித்து வீச்சத்தை அதிகரிக்கச்செய்தது.

குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி முனைப்புடன் செயற்பட்டாலும் போதிய ஊழியர்கள் இல்லாததால் மாநகராட்சியால் சமாளிக்க முடியவில்லை. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த சென்னை மாநகராட்சி, யார் வேண்டுமானாலும் குப்பைகளை அள்ளலாம், ஒரு லாரிக்கு ரூ. 500 வாடைகயாக தரப்படும் என திடீரென்று அறிவித்துள்ளது.

மழை பெய்ததால் தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

துணைநகரம் திட்டம்: திரும்பவும் எதிர்க்கும் பா.ம.க

திருப்போரூர் அருகே துணைநகரம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ம.க. மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செங்கல்பட்டு எம்பி ஏ.கே.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், து.மூர்த்தி ஆகியோர் திருப்போரூரில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த புதிதில் 44 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி துணை நகரம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மக்களிடம் சென்று குறைகளை கேட்டறியுங்கள் என எங்களிடம் கூறினார்.

அதன்பின் ஊரப்பாக்கத்தில் அவர் தலைமையில் கருத்தறியும் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு துணை நகர திட்டத்தை கைவிட்டது.

இந்நிலையில், தற்போது திராவிடர் கழக பொதுச் செயலர் வீரமணி துணைநகரத் திட்டம் வேண்டும் என பேசி வருகிறார். அதை மாநில மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் ஆமோதித்துள்ளார்.

முதல்வரும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பேண துணை நகரம் அமைக்க வேண்டும் என்றும், இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

பா.ம.கவும் துணை நகரம் அமைப்பதை எதிர்க்கவில்லை. சென்னையில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள காஞ்சிபுரத்தில், திருவள்ளூரில் துணை நகரங்கள் அமைக்கலாம். மதுராந்தகம் வட்டத்திலும் அமைக்க லாம்.

ஆனால் திருப்போரூர் ஒன்றியத்தில் மட்டும் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம், செங்கல்பட்டு மட்டுமே இருந்தன. தற்போது கூடுவாஞ்சேரி, வண்டலூர், கேளம்பாக்கம் என விரிவடைந்துள்ளன.

கருத்தறியும் கூட்டம்: துணைநகர திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்தறிய வரும் செப். 5-ம் தேதி டாக்டர் ராமதாஸ் கேளம்பாக்கம் வருகிறார்.


துணைநகரம் திட்டத்துக்காக திருப்போரூர் பகுதியில் 25,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தம் நிலை ஏற்படும். இதனால் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அடிப்படை போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி

கிரிக்கெட்: 2007ன் சிறந்த வீரர் பரிந்துரைப் பட்டியல்

2007-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை ஐசிசி மும்பையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சுழல்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே இந்தியாவிலிருந்து அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கேப்டன் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், செüரவ் கங்குலி ஆகியோருக்கு அதில் இடமில்லை.

ஜாகீரும், கும்ப்ளேவும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும், யுவராஜ் சிங் சிறந்த ஒருதின கிரிக்கெட் வீரர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ருமேலி தார், ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கேப்டன் ஜயவர்தனே, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் ஆகியோர் 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சுனில்காவஸ்கர் தலைமையிலான 5 பேர் ஐசிசி குழு இத் தகவலை வெளியிட்டுள்ளது.

தினமணி

"ICL அமைப்புடன் தொடர்பில்லை" - I C C

இந்தியாவில் பிசிசிஐ-தான் எங்களது அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பு. இந்தியாவில் அவர்கள்தான் யாரையாவது உறுப்பினராக சேர்க்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்ய முடியும். நாங்கள் உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தினாலும் பிசிசிஐ- ஐசிஎல் விவகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமையில்லை.

தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று ஐசிஎல் அமைப்பிடமிருந்து இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை. இருந்தாலும் இம்மாதிரியான பிரச்னைகளை சமாளிக்க நாங்கள் ஏற்கெனவே 4 கட்ட விதிமுறைகளை அடிப்படையாக வைத்துள்ளோம். அதில், நான்காவது விதிமுறை: அந்நாட்டில் எங்களிடம் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றுள்ள அமைப்பு அங்கீகாரம் தந்துள்ளதா என்பது. அதற்கு இல்லை என பதில் வந்தால் நாங்கள் அங்கீகாரம் அளிக்க முடியாது.

இம் மாதிரி கடந்த ஆண்டு அமெரிக்கா ஒரு போட்டியை நடத்த அனுமதி கேட்டபோது, நாங்கள் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டோம் என உதாரணம் காட்டினார் ஸ்பீடு.

தினமணி

கிரிக்கெட்: திராவிட்டுக்கு தரவரிசையில் 5-ம் இடம்.

ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசையில் டிராவிட் 5வது இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் டிராவிட் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் 8வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறினார்.

தோனி 5வது இடத்தில் இருந்து 15வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் இவர் சோபிக்காததே இதற்கு காரணமாகும்.

பட்டங்கள் கொடு: AIIMS மருத்துவர்கள் போராட்டம்

அனைத்து இந்திய மருத்துவகல்வி கழகத்தில் (AIIMS) இல் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு மருத்துவ இளங்கலை,முதுகலை மற்றூம் பட்டமேற்படிப்பு் பட்டங்களை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்காமல் இருப்பதாக குற்றம் சாஅட்டி செவ்வாய் இரவிலிருந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். தாங்கள் பிற வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ வெளிநாட்டில் மேற்படிப்பு தொடரவோ ஒரிஜினல் சான்றிதழ்கள் இல்லாமல் துன்புறுவதாக கூறினர். இந்த வேலைநிறுத்தத்தால் மருத்துவமனை செயல்கள் முழுவதும் பாதிக்கப் பட்டுள்ளது. அவசர சிகிட்சைப் பிரிவும் தீவிர சிகிட்சைப் பிரிவும் மட்டும் இயங்குவதாக போராடும் மருத்துவர்கள் கூறினர். இன்று மாலை ஐந்து மணிக்குள் தங்கள் பட்டங்கள் கிடைகாவிட்டால் போராட்டம் தொடரும் என எச்சரித்துள்ளனர்.

AIIMS resident doctors strike continues-India-The Times of India

ஆப்கான்: பணயக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தென் கொரியாவை சேர்ந்த 23சேவை நிறுவன ஊழியர்களை தலிபான் தீவிரவாதிகள் பணயக கைதிகளாக பிடித்துச் சென்றனர். இவர்களில் 2பேரை தீவிரவாதிகள் சுட் டுக்கொன்றனர். 2 பெண் ஊழியர்களை தீவிரவாதிகள் விடுதலை செய்தனர்.

மீதி உள்ள 19 பணயக் கைதிகளை மீட்க தீவிரவாதிகளுடன் தென் கொரிய அதிகாரிகள் பேச்சு நடத்தினார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து தென்கொரிய ராணுவத்தினரையும் வாபஸ் பெற அந்த அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதை தீவிரவாதிகள் ஏற்றுக் கொண்டனர். 1 மாதமாக தங்கள் பிடியில் சிக்கி இருக்கும் 19 பணய கைதிகளையும் விடுவிக்க அவர்கள் முன் வந்துள்ளனர்.

மாலைமலர்

ஷோலே பட உரிமை: ரூ400 கோடி

இந்தி திரைப்படமான ஷோலே இரமேஷ் சிப்பி இயக்கி ஜிபி சிப்பி தயாரிப்பில் வெளிவந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம். கப்பர்சிங்கின் வில்லத்தன சிரிப்பும் பசந்தியின் தொடர்ந்த வாயாடிப் பேச்சும் இன்னும் அதன் ஈர்ப்பை விடவில்லை. இந்தப் படத்தின் கதையை ஒட்டி தென்னக இராம்கோபால் வர்மா புதிய ஷோலே படத்தை எடுத்துவருகிறார். மோகன்லால், அமிதாப் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படம் சர்ச்சையை கிளப்பியது. உரிமை மீறல் வழக்கு காரணமாக முதலில் 'இராம்கோபால்வர்மாவின் ஷோலே' என்றும் பின்னர் இராம்கோபால்வர்மாவின் ஆக் 'என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் பிரிதீஷ் நந்தியின் தயாரிப்பு நிறுவனம் ஷோலே படத்தின் உரிமத்தை அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து ரூ400 கோடி($100 மில்லியன்)க்கு வாங்கியுள்லதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி இவர்களே இப்படத்தை மீண்டும் எடுக்கவோ படத்தை ஒட்டிய முன்கதையையோ பின்கதையையோ எடுக்கவும், சித்திரங்களாலான படமெடுக்கவோ உரிமை உள்ளது.

இது பற்றிய செய்தி துணுக்கு: It's official: Pritish Nandy ki Sholay-Entertainment-Media / Entertainment -News By Industry-News-The Economic Times

ஆக்ராவில் வன்முறை: ஊரடங்கு சட்டம் அமல்


ஆக்ராநகரில் ஷப்-இ- பாராத் ஊர்வலம் சென்று கொண்டிருந்த ஒரு கும்பலின் மீது லாரி ஒன்று மோதி நான்குபேர் பலியானதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கூட்டம் நடத்திய வன்முறையில் இருபது லாரிகள் வரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவை நாய்கி மண்டி மற்றும் மன்டோலா பகுதிகளில் அமல்படுத்தியுள்ளது. நகர பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


Voilence in Agra, curfew imposed

அறிவியல் இன்று - 29/08/2007

உலகின் மிகப்பெரிய வைரம்
------------------------------------

தென் ஆப்பிரக்காவின் ஒரு சுரங்கத்தில் இருந்து உலகத்திலேயே மிகபெரிய வைரம் வெட்டிடுக்கப்பட்டிருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு சுரங்கத்தின் பங்குதாரர் BBC செய்தி நிறுவனத்திடன் தெரிவித்திருக்கிறார். அவரின் கூற்றை துறையின் வல்லுனர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
முழு செய்தி இங்கேதெள்ளத்தெளிவான நிலாவின் புகைப்படங்கள்

-----------------------------------------------
1970-களில் அப்போல்லோ வானூர்தியில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் படங்கள் பலவற்றை அரிசோனா பல்கலைகழகம் ஸ்கேன் செய்து இணையத்தில் வெளியிட இருக்கிறது.
விரிவான செய்தி இதோகோப்புகளை சேமிக்க உலகம் முழுக்க ஒரே ஃபார்மேட்
------------------------------------------------------------------

கணிணியில் கோப்புகளை (documents) "சேமிக்க Open XML" எனும் ஃபார்மேட் (format) ஒன்றினை உலக நியதியாக்க மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தை நம்ப முடியாது,வருங்காலத்தில் எல்லோரும் அந்த நிறுவனத்தையே சார்ந்து இருக்கும் நிலையை இது ஏற்படுத்தி விடும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதை பற்றிய செய்தி இதோ

ஆதாரம்:
http://news.bbc.co.uk/1/hi/world/africa/6966540.stm
http://news.bbc.co.uk/1/hi/technology/6966655.stm
http://www.reuters.com/article/technologyNews/idUSL2824601520070828

அமெரிக்க ஓப்பன் - இரண்டாம் சுற்றில் சானியா

எஸ்டோனியாவின் கயியா கனெப்பியை 6-2 6-7 6-1 எனும் செட் கணக்கில் தோற்கடித்து சானியா அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தார்.

மகளிர் டென்னிஸ் தர வரிசையில் 26ஆம் இஅட்த்தில் இருக்கும் சானியா 60ஆம் இடத்தில் இருக்கும் அமரிக்கர் லாரா கிரான்வில்லோடு இரண்டாம் சுற்றில் விளையாடவிருக்கிறார்.


US Open: Sania moves to second round NDTV.com, India - 2 hours ago
Sania Mirza advances at US Open Times of India
Sania Mirza stumbles into second round Tennisuniverse.com
Sania Enters Second Round Of US Open NEWSPost India

பிழையான ஆணுறைகள் திரும்ப அழைக்கப்பட்டது

தென்னாப்பிரிக்காவின் உடல்நலத்துறை தாங்கள் விநியோகித்த இருபது மில்லியன் ஆணுறைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. அரசு ஊழியர்களிடமிருந்து தரக்கட்டுப்பாடு பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தார்கள் என்று சலாடெக்ஸ் (Zalatex) மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஐந்து மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

BBC NEWS | Africa | S Africa recalls faulty condoms

Tuesday, August 28, 2007

நாரீகாவை நாடுகடத்த நீதிபதி ஒப்புதல்

பனாமாவின் முன்னாள் தலைவர் மானுவல் நாரீகா (Manuel Noriega)வை ஃபிரான்சுக்கு நாடுகடத்த அமெரிக்க நீதிமன்றம் சம்மதித்திருக்கிறது. அடுத்த மாதத்துடன் தன்னுடைய ஃப்ளோரிடா சிறைவாசத்தை 73 வயதாகும் நாரீகா நிறைவு செய்கிறார்.

பணமாற்றுதலில் (money-laundering) மோசடி செய்ததற்காக பத்தாண்டு வரை ஃபிரான்சில் தண்டனை கிடைக்கலாம். போதைப்பொருள் கடத்தியதற்காக 1992 முதல் அமெரிக்காவின் மியாமி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

BBC NEWS | Americas | Judge agrees Noriega extradition
America's tyrant | Special reports | Guardian Unlimited: "Manuel Noriega ruled Panama as a favourite of Washington until his dictatorial excesses and green light for cocaine trafficking became too much"

கள்ள வாக்குப் போட்டவருக்கு கடும் சிறைவாசம், சனநாயக உரிமைகள் பறிப்பு

இலங்கையில் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அத் தேர்தலில் கள்ள வாக்குப் போட்டிருந்தார் என P.A. அஜித் குமார எனபவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.அவ் வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அஜித் குமார குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது. அவருக்கு ஒரு வருட கடும் காவல் சிறைத் தண்டனையும்[rigorous imprisonment], ஏழு வருடங்களுக்கு அவரின் சனநாயக உரிமைகளைப் [civic rights] பறிப்பதென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.சனநாயக உரிமைகள் [civic rights ] பறிக்கப்பட்ட திரு. அஜித் குமார அவர்கள் இனி ஏழு வருடங்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கவோ அல்லது தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது.
தகவல் [Source] : lankadissent.com

"சொந்த நாட்டில் வேலை செய்யுங்கள்"- நடிகர் டாக்டர் விஜய் அறிவுரை.

நடிகர் விஜய், டைரக்டர் ஷங்கர் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கான விழா மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல் கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலையில் நடந்தது.

பட்டம் பெற்ற நடிகர் விஜய் நன்றி தெரிவித்து பேசிய தாவது:-

இந்த நேரத்தில் மாண வர்களுக்கு ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். உபதேசம் செய்யப் போகிறேன் என்று பயந்து விட வேண்டாம். உலக அரங்கில் இந்தியா 2020-ல் முதல் இடத்தில் இருக்கும் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். டாக்டர்கள், என்ஜினீயர்களாகிய நீங்கள் நினைத்தால் 2010-ம் ஆண் டிலேயே இந்தியா அந்த நிலையை அடைந்து விடும். அந்த சாதனையை உங்களால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

மாணவர்கள் படித்து முடித்ததும் வெளிநாடு செல் கிறார்கள். வெளி நாட்டுக்கு போவதை ஒரு பேஷ னாகவே கருதுகிறார்கள். அறிவை கொடுப்பது நம்நாடு அறுவடை செய்வது அன்னிய நாடா. இங்கு படித்து பட்டம் பெறும் ஒவ்வொரு தமிழ் மாணவ னும் தமிழ்நாட்டில்தான் வேலை செய்ய வேண்டும்.இந்தியர்களுக்கு வெளி நாடுகளில் உள்ள மரியாதை உங்களுக்கு தெரியும். நம் அறிவை பயன்படுத்திக் கொண்டு விரட்டி விடுவார்கள். அந்த அறிவை நம் நாட்டுக்கு கொடுக்க வேண்டும். உங்கள் சக்தியும் வியர்வையும் நம்நாட்டில் தமிழ் மண்ணுக்கு பயன்பட வேண்டும்.


மேலும் செய்திக்கு மாலை மலர்

கபில்தேவை நீக்கியது சரி - ஸ்ரீகாந்த்

கும்பகோணம், ஆக. 25-

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட போட்டி அமைப்பு இந்திய கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.) ஆகும். இதன் செயல் தலைவராக கபில்தேவ் நியமிக்கப்பட்டார்.

ஐ.சி.எல். அமைப்புடன் தொடர்பு வைத்ததற்காக பெங்களூரில் இயங்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ.) தலைவர் பதவியில் இருந்து கபில்தேவை பி.சி.சி.ஐ. நீக்கியது. கபில்தேவ் நீக்கத்துக்கு முன்னாள் வீரர்கள் பிரசன்னா, சபாகரீம் கண்டனம் தெரிவித் திருந்தனர்.

கபில்தேவ் மீதான நடவடிக்கை சரியானதுதான் என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட்லீக் அமைப்பு முற்றிலும் விளம்பரத்திற்காகவும், வியாபார நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் கபில்தேவ் மீது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது சரியானதுதான் இதில் எவ்வித தவறும் இல்லை.

மேலும் செய்திக்கு மாலை மலர்

துருக்கியின் அதிபர் தேர்தலில் அப்துல்லா குல் வெற்றி

துருக்கியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்துல்லா குல், அந்நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றியடைந்தார்.

தேர்தலின் முதலிரண்டு சுற்றுகளில், எவருமே மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் வாங்க முடியாததால், பெரும்பான்மை மட்டுமே தேவைப்பட்ட இறுதிச் சுற்று தேர்தல் அவசியமாகியது. 550 உறுப்பினர்களிடையே 339 பேரிடம் ஆதரவு பெற்று வாகை சூடினார்.

மே மாதம் அதிபர் தேர்தலில் குல் போட்டியிட்டபோது, இராணுவத்தின் அழுத்தம் காரணமாக அவரது வேட்பு மனு தடுக்கப்பட்டது. முன்னாள் இஸ்லாமியவாதியான குல், துருக்கியின் மதசார்பற்ற அரசியல் சட்டட்திற்கு ஆபத்தாக இருப்பார் என்னும் அச்சம் பரவலாகக் காணப்படுகிறது.

Gul elected as Turkish president | Special reports | Guardian Unlimited
Bloomberg.com: Gul Is Elected Turkey's President, Risking Army Wrath

வீரபாண்டி ஆறுமுகத்தை நீக்க ஜெ. கோரிக்கை.

ஒரு மாநில அமைச்சர் இதுபோல் மத்திய அரசை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எங்கும் கண்டிராத ஒன்று. இதற்கிடையே சேலம் ரயில்வே கோட்டம் கண்டிப்பாக அமையும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ளார். தங்களுக்கு வேண்டிய இலாகாக்கள் தரப்படவில்லை என்றால் மத்திய அரசில் பங்கேற்க மாட்டோம் என்று மத்திய அரசை மிரட்டிய கருணாநிதி, சேலம் ரயில்வே கோட்டம் பிரச்சினையில் மட்டும் ரயில் மறியல் போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஏன்? போராட்டம் நடத்தாமலேயே லாலு பிரசாத்திடம் பேசி இப்போது பெற்ற அதே உறுதிமொழியை பெற்றிருக்கலாமே?

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு சேலம் ரயில்வே கோட்டம் விரைவில் அமைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கு அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கும்.

ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, அரசியல் சட்டத்தின்முன் செய்த பதவி பிரமாணத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பாக வன்முறை செயலில் ஈடுபட்டதை அதிமுக கண்டிக்கிறது. மேலும் அமைச்சரவையில் இருக்க வீரபாண்டி ஆறுமுகம் தகுதியற்றவர். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

(தினமணியிலிருந்து)

குஜராத்: கட்சி தாவும் சட்டமன்ற உறுப்பினர்கள்

இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து காங்கிரசுக்கு தாவும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல், முன்னாள் மத்திய அமைச்சர் காசிராம் ராணா, மூத்த தலைவர் சுரேஷ் மேதா ஆகியோர், மோடியின் செயல்பாடு பிடிக்காமல் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பது காங்கிரசுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள், தற்போது வெளிப்படையாகவே பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நரேந்திர மோடியின் ஆட்சியை அகற்ற எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வான திரு கஜிராவையும், அவரது சகோதரர் வசந்த் கஜிராவையும், அவர்களது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார் காங்., தலைவர் சங்கர்சிங் வக்கேலா.இவர்கள் தவிர, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., சித்தார் பரமரும், காங்.,குக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களை தன்வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களான மனிஷ் கில்லட்டுவாலா, அக்சாரியா ஆகியோர் பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளனர். இவர்களில், அக்சாரியா காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.கட்சித் தாவும் எம்.எல்.ஏ.,க்கள், இரு கட்சிகளிலும் அதிகரித்து வருவதால், குஜராத் அரசியலில் விரைவில் பெரும் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

நன்றி: தினமலர்

அதிமுக பொருளாளர் டிடிவி தினகரன் நீக்கம்

அதிமுக வின் உட்கட்சி மாற்றங்களில்.....

பொருளாளர் பதவியிலிருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எம்.தம்பித்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் மீனவர் பிரிவு செயலாளர் டி.ஜெயகுமார், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராகவும் சிறுபான்மை பிரிவு செயலாளர் பி.எச்.பாண்டியன், அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மை பிரிவு செயலாளராக ஜஸ்டின் செல்வராஜ், மீனவர் பிரிவு செயலாளராக கே.கே.கலைமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஸ்ட்ரோ குறித்து அமெரிக்காவில் 'வதந்தி'!

கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டதாக அமெரிக்காவில் மீண்டும் வதந்தி பரவியுள்ளது.

ஆனால் இது வெறும் வதந்திதான், காஸ்ட்ரோ நல்ல உடல் நலகத்துடன் உள்ளார் என்று கியூப அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கீழே, கரீபியன் கடலில், கரிவேப்பிலை அளவுக்கு உள்ள குட்டித் தீவுதான் கியூபா. அமெரிக்காவின் நீண்ட கால எரிச்சல். கியூபாவின் தலைவராக, அதிபராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் காஸ்ட்ரோ. புரட்சி வீரனானா காஸ்ட்ரோவை பதவியிலிருந்து நீக்க துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அவரை அகற்றவும், கொலை செய்யவும் கூட பலமுறை முயற்சிள் நடந்தன. ஆனால் அத்தனையையும் மீறி மக்கள் ஆதரவுடன் கியூபாவை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ. பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய உடல் நலக்குறைவு காரணமாக ஆட்சி அதிகார பொறுப்பை தன்னுடைய தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி டிவியில் பேட்டி கொடுத்தார். அதன்பின்பு கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியன்று அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படம் டிவியிலோ அல்லது பத்திரிக்கையிலோ வரவில்லை. இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்று கியூபா நாட்டினர் அதிகம் வசித்து வரும் அமெரிக்காவின் மியாமி நகரில் செய்தி பரவியது. இதனால் கியூபாவிலும் கூட கவலை பரவியது. ஆனால் இது வெறும் வதந்திதான் என்று கியூப அமைச்சர் ஒருவர் மறுத்துள்ளார். காஸ்ட்ரோ நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வழக்கம் போல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி சிலரால் கிளப்பப்பட்ட வதந்தி. காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்று கூறுபவர்கள் நிச்சயம் நல்ல மன நிலையுடன் கூடியவர்களா இருக்க முடியாது. இவ்ரகள் இறந்து விட்டார் என்று சொல்லச் சொல்ல அவர் இன்னும் பல காலம் உயிரோடு இருந்து எங்களை வழி நடத்திச் செல்வார் என்றார்.

யுபிஏ-இடது கூட்டுக்குழு அமைக்கப்பட்டது

அணுசக்தி உடன்படிக்கையின் கூறாக அமெரிக்க ஹைட் சட்டத்தின் தாக்கம் இந்திய வெளியுறவு கொள்கைகளை பாதிப்பதைப் பற்றி ஆராய யுபிஏ- இடதுசாரிகட்சிகளின் கூட்டுக்குழு அமைக்கப்படவிருக்கிறது. இன்று இந்திய கம்யூனிஸ்ட்களிடமும் பின்னர் மார்க்சிய கம்யூனிஸ்ட்களிடமும் காங்கிரஸ் நடத்திய மராத்தன் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழுவின் அதிகாரம், எல்லைகள், அமைப்பு போன்றவை அடுத்த இருநாட்களில் முடிவாகும். இக்குழுவின் ஆய்வறிக்கை வரும்வரை காங்கிரஸ் 123 உடன்பாட்டை மேற்கொண்டு எடுத்துச் செல்லாமல் இருக்க சம்மதித்துள்ளது என சீதாராம் யெச்சூரி கூறினார்.

Left-UPA peace panel this week- Hindustan Times

மனித உரிமைகள்: எங்கே செல்கிறோம்?

பிஹாரின் பகால்பூர் மாவட்டத்தில் நாத்நகரில் கோவில் அருகே சாமி கும்பிட வந்த சாந்திதேவி என்பவரிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற முகமது ஔரங்கசீப் என்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததும் இல்லாமல் காவல் துணை ஆய்வாளரே தனது மோட்டார்சைக்கிளில் கட்டி தரையில் இழுத்துச் சென்ற நிகழ்ச்சி நடந்தேறியிருக்கிறது. இந்த சம்பவத்தை தொலைக்காட்சி ஊடகங்கள் வெளிக்கொணர்ந்தபோது பகால்பூரின் டிஐஜி சர்மா காவலர்கள் பொதுமக்களிடமிருந்து திருடனைக் காப்பாற்றியிருப்பதை ஊடகங்கள் எதிர்மறையாகவே காட்டுகின்றன என்றார். மோட்டார் சைக்கிளில் தப்பியோடாமல் இருப்பதற்காக கட்டப்பட்டிருந்த ஔரங்கசீப் சாலை மேடுபள்ளத்தினால் தடுமாறி கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான் என்றார்.

DNA - India - Man brutally thrashed by crowd for petty theft - Daily News & Analysis

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது

இந்திய உளவுத்துறை ஐந்து மாதங்கள் முன்னரே எட்டு கிலோ இராணுவதர வெடிமருந்துகள் ஹைதராபாத்தில் நடத்தத் திட்டமிட்ட சம்பவங்களுக்காக ஹர்கத் உல் ஜிஹாதி யெ இஸ்லாமி தீவிரவாதகுழுவிற்கு கடத்தப்பட்டதை அறிந்திருந்தது. மார்ச் 2007இல் இந்தோ-பங்களா எல்லையில் கைது செய்யப்பட்ட ஹர்கத் குழுவினரிடமிருந்து இதை அறிந்தபோதே எச்சரிக்கை மணி அடிக்க தொடங்கியது. ஔரங்காபாத் நகர கணிப்பொறியாளர் ஷேக் நைமிடமிருந்து ஹைதராபாத்தில் திட்டமிட்டிருந்த செயல்களைப் பற்றி அறிந்தனர். அவர்மூலம் தெரிந்த ஒரு வங்கி ஊழியரை காவலர்கள் வளைத்துப் பிடிக்கும்போது அவரிடமிருந்து வெடிபொருட்கள் கைமாறிவிட்டன. சங்கேதங்கள் மூலமே அறிந்த அவர்களைப் பற்றி காவலர்களால் மேலே தொடரமுடியவில்லை.
The Hindu : Front Page : Intelligence had warned of strikes

ராகிங் கொடுமை... (பெண்களும் சளைத்தவர்கள் இல்லை )

ராகிங்: மாணவியை நிர்வாணமாக்கிய மாணவிகள்

ஆகஸ்ட் 28, 2007

டேராடூன்: முதலாமாண்டு மாணவியை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து கொடுமைபடுத்தியுள்ளனர் சீனியர் மாணவிகள்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய மாணவர் படை பயிற்சி (என்.சி.சி) முகாம் சமீபத்தில் நடைபெற்றது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த முகாமில், டேராடூனில் உள்ள கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் பங்கேற்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த மாணவி ரிக்ஷா தொழிலாளியின் மகள். இந்த மாணவியை பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சீனியர் மாணவிகள் சிலர் சேர்ந்து ராக்கிங் செய்துள்ளனர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவிகள் ஒன்று சேர்ந்து அவரை கடுமையாக திட்டியதோடு வலுக்கட்டாயமாக நிர்வாண நிலையில் நிற்க வைத்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு இந்த சம்பவத்தை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

எனது மகள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக தான் இதுவரை புகார் கொடுக்கவில்லை என்று அந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து என்.சி.சி முகாம் நிர்வாகிகள் கூறுகையில்,

என்.சி.சி பயிற்சியின் போது அந்த மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ராக்கிங் நடந்திருக்கலாம். அதனை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தட்ஸ்தமிழ்

தெல்லிப்பளைத் துர்க்கையம்மன் ஆலயத் தேர்த் திருவிழா

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நேற்று [ஞாயிற்றுக் கிழமை] மிகவும் விமர்சையாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. காலை7.00 மணிக்கு இடம் பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு தேரில் பவனி வருவதற்காக அடியவர்களின் அரோகரா கோசத்துடன் அன்னை வெளியில் வந்தார்.

பகல் 9.15 மணிக்கு தேர் இருப்பிடத்தில் இருந்து வீதி ஊர்வலமாக ஆரம்பித்து பகல் 10.00 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்தது. யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான அடியவாகள் காலை முதல் ஆலயத்தில் கூடத் தொடங்கினார்கள்.

தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள், காவடிகள் எனப் பலவும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இடம் பெயர்ந்து பல்வேறு நெருக்கடிக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் எனக் கூறி அழுது புலம்பிய காட்சிகள் அனைவரின் மனத்தையும் தொடுவதாகக் காணப்பட்டது.

Source [தகவல் ஆதாரம்]: www.pathivu.com

விடுதலைப் புலிகள் - இலங்கை இராணுவம் மோதல்


இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா - மன்னார் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்குமிடையே கடும் சண்டை மூண்டது.

திங்கட் கிழமை பிற்பகல் 4 மணியளவில் மன்னார் - வவுனியா மாவட்ட எல்லைப் பகுதிகளை அண்டிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவத்தினர் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடாத்தினர்.

இரு மணி நேரமாக இரு தரப்புக்குமிடையில் கடும் சண்டை மூண்டது. இச் சமரில் 3 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இச் சமரில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்பும் ஏற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

source[தகவல் ஆதாரம்] : http://www.tamilnet.com/

அமீரகத்தின் அப்துல் கலாமாக துணை அதிபர் ஷேக் முஹம்மது


அமீரகத்தின் அப்துல் கலாமாக துணை அதிபர் ஷேக் முஹம்மது

இந்தியத் திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமைப் போல் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் ( Vice President ), பிரதமர் மற்றும் துபாய் மன்னர் ஆகியவற்றை ஒருசேர வகிக்கும் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

புதிய கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று ( 26 ஆகஸ்ட் 2007 ) ஷேக் முஹம்மது துபாயில் உள்ள சில பள்ளிகளுக்கும், அஜ்மானில் உள்ள சில பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து உற்சாக மூட்டினார்.

மேலும் அவர் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வழங்கிட கல்வி அமைச்சர் டாக்டர் ஹனீப் ஹஸனிற்கு உத்தரவிட்டார். சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உடல்நலக்கல்வி ஆகியவை குறித்த விளக்கங்கள் மாணவர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

www.gulfnews.com
http://www.gulfnews.com/nation/Education/10149348.html

Monday, August 27, 2007

எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதாகச் செய்தி

பசிபிக் பெருங்கடலிலுள்ள பாப்புவா நியூகினியாத் தீவுகளில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, அவர்களது உறவினர்கள் உயிருடன் புதைப்பதை தாம் கண்டுள்ளதாக சுகாதாரச் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார். தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவிவிடும் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை புதைத்து விடுகிறார்கள் என்று மார்கிரெட் மராபே என்னும் அந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் மூன்று பேர் புதைக்கப்படுவதை தாம் நேரில் கண்டதாகவும், அங்கு இவ்வாறு செய்யப்படுவது சாதாரண வழக்கம் என்று தம்மிடம் அங்குள்ளவர்கள் கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தெற்கு பசபிக் பகுதியில் பாப்புவா நியூகினியாவில்தான் அதிகபட்சமாக எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள வயதுவந்த மக்களில் இரண்டு சதவீதம் பேர் இந்தத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ் பிபிசி

BBC NEWS | Asia-Pacific | PNG Aids victims 'buried alive'

-o❢o-

b r e a k i n g   n e w s...