.

Thursday, August 30, 2007

நரேந்திர மோடி காரின் குறுக்கே பாய்ந்ததால் கால்சென்டர் ஊழியரை நடுரோட்டில் உதைத்த போலீசார்

அகமதாபாத் நகரில் நரேந்திரமோடி ஒரு விழாவில் கலந்து கொண்டு ஆஸ்ரம் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று ரோட்டை கடந்தார். இதனால் நரேந்திரமோடியின் பாதுகாப்புக்கு சென்ற காரும் மற்ற கார்களும் வரிசையாக திடீர் என்று நின்றன.

உடனே போலீசார் இறங்கி அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் தனது பெயர் உசேன், தாகிர் மார்க்கெட் வாலா என்றும் கால்சென்டரில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். அவர் அகமதாபாத்தில் பொற்றோருடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நரேந்திரமோடி கார் சென்ற பின்பு பின்னால் வந்த காரில் இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, முதல்-மந்திரி காரின் குறுக்கே பாய்பவர்களை எச்சரிக்கவே இது போன்ற விசாரணையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

போலீசாரால் தாக்கப்பட்ட வாலிபர் உசேன் கூறுகையில் "ஆஸ்ரம் ரோட்டில் முதல்-மந்திரி கார் வருவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. போக்குவரத்து மூடப்படவில்லை. இதனால் சாலையை கடந்தேன்'' என்றார். அவரது பெற்றோர் கூறுகையில் "நாங்கள் நரேந்திரமோடியை நேசிப்பவர்கள் அவரது அபிமாணிகள்'' என்றனர்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...