சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரி வணிகவியல் விழா நேற்று நடைபெற்றது. கல்லூரிகளுக்கு இடையேயான இந்த விழாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை அமைத்து வருகின்றன. நம் நாட்டில் உள்ள தங்கம், நிலக்கரி, வெள்ளி உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுத்துச் செல்லவா வருகின்றன? இல்லை இந்தியாவில் இருக்கிற திறமைசாலிகளை, கடினமாக உழைக்கக்கூடிய இளைஞர்களை நம்பிதான் அவரை வந்த வண்ணம் உள்ளன.
25 லட்சம் பேருக்கு வேலை
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வருடத்திற்கு 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நாஸ்காம் அறிக்கை கூறுகிறது. அதோடு படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களில் 50 சதவீதம்பேர் வேலைகொடுப்பதற்கான தகுதி இல்லாமல் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது. இந்த நிலை இருந்தால் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உள்ள நாடு சீனாதான். ஆனால் சீனர்களுக்கு நம் அளவுக்கு ஆங்கிலப்புலமை இல்லை. எனவே, இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று பெண்கள் அதிகளவு படிக்கிறார்கள். பெண் கல்விக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் 45 சதவீதம்பேர் பெண்கள். பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டியது மாணவிகளின் கடமை. படிக்கிற மாணவ-மாணவிகளுக்கு செல்போன் தேவையில்லை. செல்போன் இருப்பதால் படிப்புக்கு பலவகையிலும் இடைïறுகள் ஏற்படுகின்றன.
வெளிநாடு போகாதீர்கள்
மாணவ-மாணவிகள் படித்துமுடித்துவிட்டு இந்தியாவிலேயே பணியாற்ற வேண்டும். யாரும் வெளிநாடு போகாதீர்கள். 40 லட்சம் இந்திய விஞ்ஞானிகள் வெளிநாடு சென்று குடியேறிவிட்டனர். ஒரு லட்சத்திற்கும் குறைவான விஞ்ஞானிகளே இந்தியாவில் உள்ளனர். 25 லட்சம் விஞ்ஞானிகள் அமெரிக்கா சென்று அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். 15 லட்சம் பேர் பிற நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார். இந்த விழாவில் ஜெயின் கல்லூரி செயலாளர் கவுதம் பி.வைத், முதல்வர் எம்.கே.மாலதி உள்பட பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி
Thursday, August 30, 2007
வெளிநாடு போகாதீர்கள்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள்
Labels:
இந்தியா,
உலகம்,
கல்வி,
சமூகம்,
வேலைவாய்ப்பு
Posted by Boston Bala at 7:29 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விபரங்கள் கவலை அளிக்கிறது. வெறு ஒரு லட்சம் பேர் தான் இருக்கிறார்களா? .. இவர்களை தக்க வைக்க அரசாங்கம் முதல் அடி எடுக்க வேண்டும்.. நாமும் தான்..ம்ம்ம்ம்
துணை வேந்தர் அவர்களே!!!
இந்தியர்கள் வேலையுடன் புதிதாக மேலும் கற்றுக்கொள்கின்றார்கள்.!!
அவர்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் இந்திய அரசு சிந்திக்க வேண்டும். இதுதான் நடைமுறையில் சாத்தியமானது.
ஒரு ஈழத் தமிழன்
Post a Comment