.

Thursday, May 3, 2007

ச:இலங்கை உதவி - இங்கிலாந்து தற்காலிகமாக ரத்து செய்கிறது

இலங்கைக்கான 1.5 மில்லியன் பவுண்ட் நிதி உதவியை இங்கிலாந்து அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இலங்கை அரசின் விடுதலைப் புலிகளுக்கெதிரான செயல்களில் மனித உரிமை மீறல் அதிகமாயிருப்பதால் நிலமை முன்னேறும்வரை இந்த நிதி உதவி வழங்கப்படாது என அறிவிப்பு சொல்கிறது.

நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட இலங்கைக்கான இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் விடுதலைப் புலிகளை கண்டித்து புலிகள் தொடர்ந்து ஐரோப்ப்பாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருக்கும் என்றார். மேலும் இலங்கையில் கலவர நிலைக்கு புலிகள் மட்டுமே காரணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

2004 சுனாமியை அடுத்து மொத்தம் 3 மில்லியன் பவுண்ட்களை இங்கிலாந்து வழங்க முன்வந்து ஏற்கனவே 1.5 மில்லியன்களை வழங்கியுள்ளது.
Britain suspends aid payments to Sri LankaTimes Online
“The LTTE [Tamil Tigers] is not the only source of violence in Sri Lanka,” said Mr Howells. “Civilians in government-controlled areas regularly fall victim to brutal attacks by paramilitary groups, often acting with apparent immunity.”

“We believe that that sent a clear message to the Sri Lankan Government about our concerns,” he told the Commons. “The outstanding payment will be made only when consultations have concluded with the Sri Lankan Government. Those consultations will, in particular, involve discussions about the human rights situation in Sri Lanka.”

Since the ceasefire broke down in 2005 more than 4,000 people have been killed and tens of thousands displaced.

Britian stops Lanka aid over rights abuses Zee News
Britain Suspends Aid Package to Sri Lanka Voice of America

ச:போலி என்கவுண்டர் வழக்கு - மேலும் சிலர் கைது

சொரபுதீன் சீக்கை போலி என்கவுண்டரில் கொன்ற வழக்கில் மேலும் சில போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கண்காளிப்பாளர், உதவி கண்பாணிப்பாளர் மர்றும் கான்ஸ்டபிள் பதவிகளில் இருப்பவர்கள்.

மேலும் இராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது. வழக்கை விசாரிக்கும் குஜராத் சி.ஐ.டி குழு ககது செய்யப்பட்ட சிலரிடமிருந்து வாக்குமூலங்களள வீடியோ படம் எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Few policemen detained in fake encounter, more arrests likely
"There was some intelligence inputs involved to track Sohrabuddin. The policemen knew specifically by which bus he, his wife Kausarbi and their friend Tulsiram Prajapati were travelling in and also the seat numbers," the sources said.

ச:இலங்கை விமான நிலையம் இரவில் மூடப்படுகிறது

விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலுக்கு எதிரொலியாய் இலங்கை தனது ஒரே பன்னாட்டு விமான நிலையமான பண்டார நாயக்கே விமான நிலையத்தை இரவில் 6 மணி நேரங்களுக்கு மூடி வைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி மே 10 முதல் விமானநிலையம் இரவு 10:30 மூடப்பட்டு காலை 4:30க்கு திறக்கப்படும்.

Lanka decides to shut airport at night after Tiger air raids
Airports shutting at night is common in other parts of the world, but given the fact that Sri Lanka has only one international airport and that flights from Europe get in at night, shutting the airport at nighttime is a challenge for airlines.

Officials said the night time shutdown goes into effect from May 10 to give more time for air lines to reschedule their flights.

The airport handles about 70 flights a day and the nighttime shut down would affect 40 percent of them.

ச:முன்னாள் முதல்வரின் மகன் கொலைவழக்கில் கைது

முன்னாள் சட்டிஸ்கர் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி தேசியவாதி காங்கிரஸ் தலைவரை 2003இல் கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். உச்சநீதிமன்றம்சட்டிஸ்கரின் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால ஜாமீனை இரத்து செய்ததை அடுத்து 30 வயதான அமீத் யோகி சரணடைதார்.
மேலும்..Amit Jogi sent to jail in political murder case

ச: ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை வெற்றி செல்லுமா ?

ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்டின் 149 ஓட்டங்களே வெற்றியின் முக்கிய பங்கு வகிக்கையில் அவரது ஆட்டத்தினையே நியதிகளுக்கு புறம்பானதாக சில பதிவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். முக்கியமாக சுர்முரி.கொம் .
அவர்களது கூற்றின்படி கில்கிறிஸ்ட் கையில் கிளௌஸின் உள்ளே ஒரு ஸ்குவாஷ் பந்தை மட்டையின் பிடிப்பிற்காக வைத்திருந்தார் என்றும் இது ஆட்ட விதிகளுக்கு விலக்கானதால் அவரது ஆட்டமே நிராகரிக்கப் பட வேண்டியது என்றும் எழுதுகிறார்கள்.

How legal was Adam Gilchrist's hidden ball?

அந்தப் பதிவு

சற்றுமுன்: பிரதமர் இல்லத்தின் அருகே துப்பாக்கிச் சூடு

பிரதமர் மன்மோகன்சிங் வசிக்கும் 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் அவரது இல்லத்திலிருந்து 200 மீ தொலைவிற்குள் கிஷோர்லால் என்பவர் சுடப் பட்டு ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் செல்லப் பட்டுள்ளார். இதனையொட்டி பிரதமரின் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. இரு நபர்களுக்கிடையேயான பகையே இந்த துப்பாக்கிசூட்டிற்கு காரணம் எனக் கூறப் பட்டுள்ளது. தில்லி காவல் மேலும் புலனாய்வு செய்து வருகிறது.

Firing near PM's house- News-Sections-TIMES NOW.tv

ச: பாகிஸ்தானில் கைகலப்பில் எதிர்ப்பாளர்கள் காயம்

பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தின் முன் முன்னாள் தலைமை நீதிபதியின் பணிநீக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட தள்ளுதலிலும் கைகலப்பிலும் பெரும்பாலானவர்கள் காயமடந்தனர்.

இதுபற்றிய IOL: Several injured in Pakistan protest செய்தி.

ச:மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு பிரிட்டன் உதவி மறுப்பு

மனித உரிமை மீறல்களை காரணமாக்கி அரசினை நிர்பந்திக்குமாறு பிரிட்டன் அரசு ஸ்ரீலங்கா அரசிற்கு உறுதியளித்திருந்த 5.9 மிலியன் டாலர் உதவியில் பட்டுவாடா செய்யப் படாத மிகுதி பாதியை இன்று இரத்து செய்துள்ளது.

மேல் விவரங்களுக்கு ...

ச:மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி

ஐரோப்பிய கோப்பைக்கான அரையிறுதியில் நேற்று நடந்த இரண்டாம் சுர்று ஆட்டத்தில் ஏசி மிலன் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் குழுவை 3-0 என்ற ஆட்டக் கணக்கில் வென்று இரண்டு சுற்றிலுமாக 5-3 என்ற கணக்கில் ஆட்ட இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக லிவெர்பூல் அணி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும்...

ச:இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரநிலையில் தரையிறக்கம்

மும்பையிலிருந்து தில்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் திரவகட்டுப்பாட்டு தடங்கலால் இன்று காலை அவசரநிலையில் தரையிறக்கப் பட்டது. பயணித்த 100 பேரும் பத்திரமாக இறங்கினர்.

Indian Airlines flight makes emergency landing-Airlines / Aviation-Transportation-News By Industry-News-The Economic Times

ச:தமிழக காவல்துறை புது முயற்சி

மனித உரிமைகளை மதித்து நடக்க தமிழக காவல்துறையை ஊக்குவிக்க பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 'போலிஸ் இமேஜ் ப்ராஜெக்ட்' எனும் முயற்சி மக்கள் மத்தியில் காவல் துறையினர்பற்றி நன்மதிப்பை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு பகுதியாக 85 போலிஸ் தலமை கான்ஸ்டபிள்கள் அவர்கள் பணி செய்யாத வேறு காவல் நிலையங்களுக்குச் சென்று சாதாரண மக்கள்போல குறறகளை பதிவு செய்யச் சென்றனர். இதில் பலர் மோசமாக நடத்தப்பட்டுள்ளதும் சிலர் தாக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.

தேசிய மனித உரிமை கவுன்சிலோடு சேர்ந்து தமிழகப் போலீஸ் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

When police personnel posed as complainants
Mr. Mukherjee said the Inspector-General assembled 85 head constables throughout his zone and, after briefing them, sent them to police stations where they had not served, with complaints. After three days, they reassembled to speak about their experiences. "The results were shocking," the DGP said. The police personnel then took a vow that they would not indulge in similar acts.

ஜப்பானின் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு

சென்னை, மே 3: ஜப்பானின் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதற்கு சென்னையிலுள்ள "கார்ப்பரேட் அக்கவுண்டபிலிட்டி டெஸ்க்' என்ற தன்னார்வ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது:

இந்தியாவிற்கு கடந்த 2003 முதல் 2006 வரை 2 ஆயிரம் டன் குப்பைகளை ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது. இதைத் தவிர 70 கப்பல்களை "ஆலங்க்' கப்பல் உடைக்கும் தலத்துக்கு அனுப்பியுள்ளது.

ஜப்பான் நாடு ஏற்றுமதி செய்துள்ள கழிவுகளில் தடைசெய்யப்பட்ட துத்தநாகம், ஈயம் உள்பட 270 டன் நச்சுக் கழிவையும் அந்நாடு ஏற்றுமதி செய்துள்ளது.

இது பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகளைவிட இந்தியாவுக்கு குறைந்த அளவு நச்சுக் கழிவுகளையே ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது இந்தியா -ஜப்பான் இடையே ரகசியமாக நடைபெற்று வரும் பொருளாதார ஒப்பந்தத்தின் மூலம் மருத்துவக் கழிவுகள், நச்சுக்கழிவுகள் கொட்டும் இடமாக இந்தியா மாற வாய்ப்புள்ளது.

Global Anti-Incinerator Alliance (GAIA): Groups Slam Japan's Waste Colonialism

ச:இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 'கொழுப்பு' குறைப்பு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொழுப்பு சத்துள்ள ஆகாரங்களை உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய உணவு அட்டவணை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. உடல் திறனை அதிகரிக்கவேண்டி புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

வறுத்த உணவுகள், மட்டன், ஐஸ்க்ரீம், வெண்ணை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமலர்:

-o❢o-

b r e a k i n g   n e w s...