.

Thursday, May 3, 2007

ஜப்பானின் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு

சென்னை, மே 3: ஜப்பானின் நச்சுக் கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதற்கு சென்னையிலுள்ள "கார்ப்பரேட் அக்கவுண்டபிலிட்டி டெஸ்க்' என்ற தன்னார்வ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது:

இந்தியாவிற்கு கடந்த 2003 முதல் 2006 வரை 2 ஆயிரம் டன் குப்பைகளை ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது. இதைத் தவிர 70 கப்பல்களை "ஆலங்க்' கப்பல் உடைக்கும் தலத்துக்கு அனுப்பியுள்ளது.

ஜப்பான் நாடு ஏற்றுமதி செய்துள்ள கழிவுகளில் தடைசெய்யப்பட்ட துத்தநாகம், ஈயம் உள்பட 270 டன் நச்சுக் கழிவையும் அந்நாடு ஏற்றுமதி செய்துள்ளது.

இது பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகளைவிட இந்தியாவுக்கு குறைந்த அளவு நச்சுக் கழிவுகளையே ஜப்பான் ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது இந்தியா -ஜப்பான் இடையே ரகசியமாக நடைபெற்று வரும் பொருளாதார ஒப்பந்தத்தின் மூலம் மருத்துவக் கழிவுகள், நச்சுக்கழிவுகள் கொட்டும் இடமாக இந்தியா மாற வாய்ப்புள்ளது.

Global Anti-Incinerator Alliance (GAIA): Groups Slam Japan's Waste Colonialism

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...