.

Sunday, March 25, 2007

அஸ்த்ரா வெற்றிகரமாக சோதனை

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட வான் வெளியிலிருந்து வானில் உள்ள இலக்குகளை சென்று தாக்கவல்ல அஸ்த்ரா ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.

ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து முற்பகல் 11.56 மணிக்கு இந்த சோதனை நடைபெற்றதாக பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஏவுகணையின் செலுத்து தூரம் 80 கி.மீ. வேகத்தில் சென்று தாக்கக்கூடியது என்றும், செலுத்து வேகம் 0.6 முதல் 2.2 மேக் வரை இருக்கக்கூடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் 3,750 மிமீ நீளமும், 178 மி.மீ குறுக்களவையும் கொண்ட ஏவுகணை அஸ்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்

சற்றுமுன்: நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம் : பெர்முடா கேப்டன்.

இலங்கை அணியிடம் தோல்வி கண்டு உலக்க்கோப்பையில் இருந்து வெளியேறும் நிலைக்கு வந்து விட்ட இந்திய அணி வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இன்றைய நாளை எதிர் நோக்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெர்முடா அணி வங்க தேசத்தை வெற்றி கொண்டால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு போகமுடியுமாம். இந்த குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி இந்தியா...!

இதில் பெர்முடா கேப்டன் வேறு நூறு கோடி இந்தியர்களின் பிரார்த்தனையோடு களமிறங்குகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

சற்றுமுன்: ஜப்பானில் கடும் நில நடுக்கம்

மத்திய ஜப்பான் கடலில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். நூற்றுக்கும் கூடுதலானோர் காயமுற்றனர்.

மேலும் அறிய -
வாஷிங்டன் போஸ்ட்
தட்ஸ்தமிழ்

சற்றுமுன்: ஜல்லிக்கட்டில் காளை முட்டி வாலிபர் பலி.

புதுக்கோட்டை மார்ச் 25,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள விராலிமலை உள்ள விராலுரில் ஜல்லிக்கட்டு நடைப்பெற்றது இதில் சுற்று வட்டாரம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள்முட்டி கல்குத்தாப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன்(35) உட்பட 20 பேர் காயமடைந்தனர் இதில் சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி இறந்தார்.

சற்றுமுன்: ராமேஸ்வரம் கடலில் 12 மீனவர்களை காணவில்லை.

குளச்சலில் இருந்து ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்களை காணவில்லை அவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...