.

Monday, July 16, 2007

இந்தியாவில் மின்னணு விமானச்சீட்டுகள் அதிவளர்ச்சி.

கணினியும் இணையமும் ஒப்பீட்டளவில் குறைவாகப் புழக்கத்தில் இருந்தாலும் இந்தியாவில் கடந்த ஓராண்டில் விமானப்பயணச்சீட்டுகள் மின்னணு முறையில் பெறப்படுவது பெருவளர்ச்சி அடைந்துள்ளது.

இதுபற்றி தினமலரின் இச்செய்தியில்,

விமான நிறுவனங்கள் இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நேரில் சென்று டிக்கெட் வாங்குவதைத் தவிர்த்து, இணையதளத்தின் மூலம் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து, பிரின்ட் அவுட் டிக்கெட் மூலம் விமானங்களில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது.கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் மட்டும் எல்லா விமான நிறுவனங்களின் விமானங்களில் 81 சதவீத டிக்கெட்கள் முறைப்படி பெறப் பட்ட டிக்கெட்கள். 27 சதவீத டிக்கெட்கள் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட இ-டிக் கெட்கள்.இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து, முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விமான நிறுவன டிராவல் ஏஜென்சிகளில் விமான டிக்கெட் பெறுவோரில், பலரும் முறைப்படியான டிக்கெட்டுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கப் பட்டால் வியப்படைவது இல்லை.

சாதாரண முறையில் வழங்கப்படும் டிக்கெட்களுக்கு ரூ.320 வசூலிக்கப் பட்டால், இ-டிக்கெட்களுக்கு ரூ.80 வசூலிக்கப்படுகிறது. இரண்டாவதாக, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் அல்லது விமான நிறுவன அலுவலகங்களை தேடிச் சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே, அல்லது அருகில் உள்ள பிரவுசிங் மையத்தில் இருந்தபடி விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து இ-டிக்கெட்டின் பிரின்ட் அவுட்டை பெறுவது எளிது.மொபைல் போனில் கூட இ-டிக்கெட் பெற முடிகிறது.

வெறும் பி.என்.ஆர்., எண்கள் மற்றும் புகைப்பட அடையாள அட்டை மட்டும் இருந்தால் போதும். விமான நிலையத்தில் உள்ள விமான நிறுவனங்களின் அலுவலகத்துக்கு சென்று இ-டிக்கெட்டின் பிரின்ட் அவுட் பெற்று விமானத்தில் பறக்கலாம்.ஏர்-டெக்கான் விமான நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2003ம் ஆண்டு நூறு சதவீத இ-டிக்கெட் முறையை அமலுக்கு கொண்டு வந்தது. இ-டிக்கெட் பெறுவது, மற்ற எதையும் விட மிக எளிதானது.முன்பெல்லாம் வெளிநாட்டில் இருந்து ஒருவர் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், அதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கும். இப்போது இ-டிக்கெட் முறை வந்து விட்டதால், அந்த தேவை ஏற்படுவது இல்லை.

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம்: பா.ஜனதா வேட்பாளராக நஜ்மா ஹெப்துல்லா?

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன. பா.ஜனதா சார்பில் நஜ்மா ஹெப்துல்லா வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மேல் சபை முன்னாள் துணை தலைவரான நஜ்மா ஹெப்துல்லா பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நஜ்மா, கடந்த 2004-ம் ஆண்டில் பா.ஜனதாவில் இணைந்தவர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி அணியின் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் நிறுத்தப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பெண் வேட்பாளர் பற்றிய காங்கிரசின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் நஜ்மா பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

என்றாலும், கூட்டணி கட்சியினரை கலந்து பேசிய பிறகுதான் அதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பா.ஜனதா தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை, துணை ஜனாதிபதி பதவி இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த வேட்பாளர் எந்த கட்சியை சேர்ந்தவர், அரசியல்வாதியா? என்பதுபோன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் தேர்வு செய்யும் முஸ்லிம் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு: துணை ஜனாதிபதி தேர்தலில் புதிய முடிவு

கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தில் உள்ளனர். கல்வித் துறையில் புகழ்மிக்க ஒருவரை இந்த பதவிக்கு கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் ஜாமியா பிலியா பல்கலைக் கழக துணை வேந்தர் முசிருல் ஹசன், வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் ஆகியோர் பெயரை முன் வைத்து உள்ளனர்.

இதில் முசிருல் ஹசனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். அவருக்கு காங்கிரஸ் கட்சிகாரர்களிடமும் நல்ல செல்வாக்கு உண்டு. சமீபத்தில் கூட அவர் காந்தி, நேரு பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன், தான் துணை ஜனாதிபதி வேட்பாளர் என்று வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தார்.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பரதன் பெயர் பரிசீலிக்கப்பட்டபோதிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

"துணை ஜனாதிபதி வேட்பாளர் அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்பது அல்ல. வரலாற்று அறிஞராகவோ, கல்வி மேதையாகவோ, அல்லது பொருளாதார வல்லுனராகவோ இருக்கலாம் என்று பிரகாஷ் கரத் டெலிவிஷன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

மாலைமலர்

ரூபாயின் மதிப்பு மேலும் உயரலாம்

பிரதமரின் பொருளாதார அறிவுறுத்தல் கமிட்டி இன்று புதுடெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் GDP வளர்ச்சி அடுத்த ஆண்டு 9% இருக்கும் எனவும் ரூபாயின் மதிப்பு மேலும் உயரலாம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திக்கு " THE HINDU.."

இந்தியாவில் ரூ.121 கோடி வயாகரா மாத்திரை விற்பனை

வயாகரா மாத்திரை இந்தியாவில் 2003ம் ஆண்டு முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. அந்த ஆண்டு ரூ.57 கோடிக்கு விற் பனை ஆனது.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.115 கோடிக்கு விற்பனை ஆனது. கடந்த மே மாதம் வரையில் 12 மாதத்தில் ரூ.121 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.

மாலைமலர்

விரைவில் இணைய வழி வழக்குப் பதிவு

சென்னை உயர்நீதிமன்றம் கணினி மயமாக்கப்படுவதை அடுத்து விரைவில் செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் துவங்கி இணையவழி வழக்கு் பதிக்கும் வசதிகள் செய்யப்படவிருக்கின்றன.

முதல் கட்டமாக ரூ. 451கோடி செலவில் சென்னை உயர்நீதிமன்றம் கணினிமயப்படுத்தப்படவிருக்கிறது. ஒவ்வொரு நீதியரசருக்கும் ஒரு மடிக்கணினியும் மூன்று ப்ரிண்டர்களும் 5 மேசைக் கணினிகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நீதிமன்றமும் குறைந்தபட்சம் இரு சர்வர்களோடு செயல்படும். வீடியோ கான்பெரன்சிங் மூலம் விசாரணைகள் எளிதில் சாத்தியமாகும். காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் கணினிவழி தொடர்புகள் ஏற்படுத்தப்படும். வழக்குகளின் நிலமைகளை இணையவழி கண்டுகொள்ளும் வசதிகளும் செய்யப்படவிருக்கின்றன.

e-filing of cases to begin soon in High Court - The Hindu

இடஒதுக்கீடு: இடைக்காலத் தடையை நீக்க நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

உயர்கல்வி நிறுவனக்களில் 27% இடஒதுக்கீடு வழங்குவதை நிறுத்திவைத்த இடைக்கால தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு மனு கொடுத்துள்ளது. தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்து நாளை விவாதங்களை கேட்க முடிவெடுத்துள்ளது.

Centre approaches SC for vacating quota stay -Education-Services-News By Industry-News-The Economic Times

பொய் கடவுச்சீட்டு: மோனிகா விடுதலை

போபால் நீதிமன்றம் இன்று மும்பை தாதா அப்துல் சலேமின் தோழி மோனிகா பேடிமீது போடப்பட்டிருந்த போலி கடவுச்சீட்டு வழக்கில் அவரையும் அவரது கூட்டாளியையும் விடுதலை செய்தது. அரசுத்தரப்பு தகுந்த ஆதாரங்களை தரத் தவறியது என்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி அஜய் சிரிவஸ்தா கூறினார். இந்த தீர்ப்பு மோனிகாவிற்கு அதிர்ச்சிகலந்த மகிழ்ச்சியை தந்ததாக அவர் வக்கீல் கூறினார். மோனிகா ஹைதராபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போலி கடவுச்சீட்டு வழக்கில் தண்டனை வழங்கப் பட்டிருக்கிறார்.

Fake passport: Monica aquitted by Bhopal court

அமெரிக்க நிறுவனத்தை ரூ1200 கோடிக்கு வாங்கினார் அனில் அம்பானி

அமெரிக்காவில் ஈதெர்னெட் தீர்வுகளை வழங்கி இயக்கும் யீப்ப்ஸ் (Yipes) நிறுவனத்தை அனில் அம்பானியின் ஃபிளாக் (FLAG) நிறுவனம் 300 மி. டாலர்களுக்கு (1200 கோடி இந்திய ரூபாய்கள்) நேரடி பணம் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் வெரிசோன், நிப்பான் டெலிகாம் (NTT) ஆகியவற்றின் சேவைகளை பராமரித்து 55% வரை இலாபம் ஈட்டிவருகிறது. அமெரிக்க சந்தையில் தனது நிறுவனம் காலூன்ற இது வழி கோலும் என அனில் அம்பானி கூறினார்.


IBNLive.com > Yipes! Anil buys US firm, pays $300 mn in cash deal :

ஹஜ்ஜூப்பயணம்: தமிழ்நாட்டிலிருந்து 3,384 பேர்

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆறாயிரத்து 766 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தமிழகத்துக்கு மூன்றாயிரத்து 384 இடங்களே ஒதுக்கப்பட்டு இருந்தன. எனவே, இவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாநில ஹஜ் கமிட்டி முடிவு செய்தது.

இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் சென்னை புதுக்கல்லூரியில் நடந்தது. இதில், 75 வயதுக்கு மேற்பட்ட 77 பேர் பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர மீதம் மூன்றாயிரத்து 307 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். நூறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கமிட்டியின் தலைவர் ஹாரூண் எம்.பி., கூறும்போது,

"தமிழகத்துக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு பெற மத்திய அரசிடம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் பயணம் செய்வது உறுதி செய்யப்படும்.

கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்து மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இடம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் விரும்பினால் அவர்கள் அன்னிய செலாவணிக்கு முன்பணமாக செலுத்திய தொகை உடனே திருப்பித் தரப்படும்,''
என்றார்

இது அரசு சார் விண்ணப்பம் வாயிலாகச் செல்வதன் எண்ணிக்கை ஆகும்

குஜராத்: போலி என்கவுண்ட்டர் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை

குஜராத்தில், தனக்கு வேண்டாதவர்களாகப் பார்த்து சுட்டுத்தள்ளிய போலி என்கவுண்ட்டர் (தமிழ்ச்சொல் சொல்லுங்க..) வழக்கில் 13 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த வழக்கை விசாரித்து வந்த குஜராத் மாநில புலனாய்வு அதிகாரிகள் இதனை இன்று பதிவு செய்துள்ளனர். விசாரணை என்ற நிலையில் இருந்த இவ்வழக்கு இதன் மூலம் சற்றே முன்நகர்ந்துள்ளது

NLC: ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இன்று 13,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையறையில்லா வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணி நிரந்தரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுபடி சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வேலை நிறுத்தம் என்று NLC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசம்: ஷேக் ஹசீனா கைது

வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா வாஜித் அவரது டாக்கா இல்லத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

ஹசீனா மீது தொழிலதிபர்களை மிரட்டியது, ஊழலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் வெளிநாடு சென்று விட்டார். அவர் வங்கதேசம் திரும்பினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரை ஒரு மாத காலம் காவல்துறை காவலில் வைத்திருக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அவரின் குற்றவிபரம் தெரிவிக்கப்படவில்லை.

ஜப்பானில் இன்று நிலநடுக்கம்.

ஜப்பானில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள நீகேட்டா பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக 2 பேர் பலியாகி இருப்பதாகவும், 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நிலநடுக்கத்தை தொடர்ந்து வடமேற்கு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதைத்தொடர்ந்து அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.

கும்பகோணம் தீ விபத்து: நீதி கேட்கும் தந்தை

கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தில் 94 சிறுவர்கள் பலியாகி மூன்றுவருடங்களாகின்றன. இந்த கோரவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் பதவி பெற்றிருக்கிறார்கள், வழக்கு விசாரணை ஆரம்பநிலையிலேயே இருக்கிறது, இந்த வழக்கை விரைவுநீதிமன்றத்திற்கோ சிறப்பு நீதிமன்ரத்திற்கோ மாற்றி தண்டனை வழங்கினால் தான் இதில் இறந்த சிறுவர் சிறுமியருக்கு ஆன்மா சாந்தியடையும் என இந்த விபத்தில் தனது மகனை பறிகொடுத்த இன்பராஜ் கூறுகிறார்.

இது பற்றி NDTV.com: Kumbakonam tragedy: Victims' kin seek justice

கோபா அமெரிக்கா: பிரேசில் வெற்றி

ஞாயிறன்று நடந்த இறுதி கால்பந்து போட்டியில் தங்கள் முழுத்திறமையுடன் ஆடிய பிரேசில் அர்ஜென்டீனாவை 3-0 என்ற கோல்கணக்கில் வென்று அமெரிக்கா கோப்பையை வென்றது. நான்காவது நிமிடத்தில் ஜூலியோ பாபிஸ்டாவும், காப்டன் ரோபர்டோ அயாலா அரையாட்ட முடிவிற்கு சற்று முன்னரும் தானியல் அல்வேஸ் மூன்றாவது கோலையும் போட்டனர்.

Brazil win Copa America

ஹனீஃப்பிற்கு ஜாமீன் கிடைத்தது:மனைவி மகிழ்ச்சி

பிரிஸ்பேனில் உள்ல நீதிமன்றமொன்று டாக்டர் முகமது ஹனீஃப்பிற்கு ஜாமீன் வழங்கியது. பிணைத்தொகையாக $10,000 கட்டவேண்டும் என்றும் வாரத்திற்கு மூன்றுமுறை காவல்நிலையத்தில் வந்துசெல்ல வேண்டுமெனவும் ஆனையிட்டார். அரசுத்தரப்பில் அவர் விமானமேறி தப்பிவிடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியதை, அவருக்கும் எந்த ஒரு தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பில்லை என்பதை சுட்டிக்காட்டி ஏற்க மறுத்தார்.அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் அவர் பொறுப்பின்றி தனது சிம் அட்டையை தனது உறவுமுறை உடன்பிறப்பிறப்பான சபீல் அஹமதிற்கு கொடுத்ததே ஆகும்.

பிணைவிதிகளை நிறைவேற்றும் வரை ஹனீஃப் இரண்டொருநாள் காவலிலேயே இருப்பார் எனவும் இந்த இடைவெளியில் அரசு மேல்முறையீடு செய்யுமா என தான் அறியவில்லை என அவரது வக்கீல் பீட்டர் ரூஸ்ஸோ கூறினார். அங்கு சென்றுள்ள ஹனீஃபின் மனைவி பிர்துஸ் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதில் தலையிட்ட பிரதமருக்கும் தனது கணவருக்காக பிரார்த்தித்த இந்திய மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

NDTV.com: Haneef granted bail

-o❢o-

b r e a k i n g   n e w s...