.

Monday, July 16, 2007

ஹனீஃப்பிற்கு ஜாமீன் கிடைத்தது:மனைவி மகிழ்ச்சி

பிரிஸ்பேனில் உள்ல நீதிமன்றமொன்று டாக்டர் முகமது ஹனீஃப்பிற்கு ஜாமீன் வழங்கியது. பிணைத்தொகையாக $10,000 கட்டவேண்டும் என்றும் வாரத்திற்கு மூன்றுமுறை காவல்நிலையத்தில் வந்துசெல்ல வேண்டுமெனவும் ஆனையிட்டார். அரசுத்தரப்பில் அவர் விமானமேறி தப்பிவிடும் வாய்ப்பிருப்பதாகக் கூறியதை, அவருக்கும் எந்த ஒரு தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பில்லை என்பதை சுட்டிக்காட்டி ஏற்க மறுத்தார்.அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் அவர் பொறுப்பின்றி தனது சிம் அட்டையை தனது உறவுமுறை உடன்பிறப்பிறப்பான சபீல் அஹமதிற்கு கொடுத்ததே ஆகும்.

பிணைவிதிகளை நிறைவேற்றும் வரை ஹனீஃப் இரண்டொருநாள் காவலிலேயே இருப்பார் எனவும் இந்த இடைவெளியில் அரசு மேல்முறையீடு செய்யுமா என தான் அறியவில்லை என அவரது வக்கீல் பீட்டர் ரூஸ்ஸோ கூறினார். அங்கு சென்றுள்ள ஹனீஃபின் மனைவி பிர்துஸ் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதில் தலையிட்ட பிரதமருக்கும் தனது கணவருக்காக பிரார்த்தித்த இந்திய மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

NDTV.com: Haneef granted bail

1 comment:

மணியன் said...

ஜாமீன் கொடுத்த சில மணித்துளிகளிலேயே அவரது விசா மறுக்கப்பட்டு குடியுரிமை சட்டங்களின் கீழ் காவலில் வைக்கப் பட்டுள்ளார்: Immigration laws invoked to keep Haneef in jail

-o❢o-

b r e a k i n g   n e w s...