.

Monday, July 16, 2007

ஹஜ்ஜூப்பயணம்: தமிழ்நாட்டிலிருந்து 3,384 பேர்

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆறாயிரத்து 766 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தமிழகத்துக்கு மூன்றாயிரத்து 384 இடங்களே ஒதுக்கப்பட்டு இருந்தன. எனவே, இவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மாநில ஹஜ் கமிட்டி முடிவு செய்தது.

இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் சென்னை புதுக்கல்லூரியில் நடந்தது. இதில், 75 வயதுக்கு மேற்பட்ட 77 பேர் பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர மீதம் மூன்றாயிரத்து 307 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். நூறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கமிட்டியின் தலைவர் ஹாரூண் எம்.பி., கூறும்போது,

"தமிழகத்துக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு பெற மத்திய அரசிடம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் பயணம் செய்வது உறுதி செய்யப்படும்.

கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்து மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இடம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் விரும்பினால் அவர்கள் அன்னிய செலாவணிக்கு முன்பணமாக செலுத்திய தொகை உடனே திருப்பித் தரப்படும்,''
என்றார்

இது அரசு சார் விண்ணப்பம் வாயிலாகச் செல்வதன் எண்ணிக்கை ஆகும்

1 comment:

இஸ்லாமிய செய்திகள் said...

இந்திய அரசுக்கு இதனால் ஏகப்பட்ட வருமானம் கிடைக்கும் பொழுது எதற்க்கு குலுக்கல் போன்ற முரைகளை இந்த அரசு கையாளுகிறது? BJP ஆட்சிக்காலத்தில் விண்னப்பித்த அனைவருக்கும் வாய்பலிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

-o❢o-

b r e a k i n g   n e w s...