.

Monday, July 16, 2007

விரைவில் இணைய வழி வழக்குப் பதிவு

சென்னை உயர்நீதிமன்றம் கணினி மயமாக்கப்படுவதை அடுத்து விரைவில் செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் துவங்கி இணையவழி வழக்கு் பதிக்கும் வசதிகள் செய்யப்படவிருக்கின்றன.

முதல் கட்டமாக ரூ. 451கோடி செலவில் சென்னை உயர்நீதிமன்றம் கணினிமயப்படுத்தப்படவிருக்கிறது. ஒவ்வொரு நீதியரசருக்கும் ஒரு மடிக்கணினியும் மூன்று ப்ரிண்டர்களும் 5 மேசைக் கணினிகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நீதிமன்றமும் குறைந்தபட்சம் இரு சர்வர்களோடு செயல்படும். வீடியோ கான்பெரன்சிங் மூலம் விசாரணைகள் எளிதில் சாத்தியமாகும். காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் கணினிவழி தொடர்புகள் ஏற்படுத்தப்படும். வழக்குகளின் நிலமைகளை இணையவழி கண்டுகொள்ளும் வசதிகளும் செய்யப்படவிருக்கின்றன.

e-filing of cases to begin soon in High Court - The Hindu

1 comment:

theevu said...

இணைய வழி அல்லாது அனானி வழி வழக்குப்போடுவதென்றால்தான் (மொட்டைக் கடுதாசு)நம்மவர் முன் நிற்பர்:)

-o❢o-

b r e a k i n g   n e w s...