.

Tuesday, March 6, 2007

இந்தியா 300/9

நெதர்லாந்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. திராவிட் 74 ரன்களும் சச்சின் 61 ரன்களும் அடித்துள்ளனர்.

முழு ஸ்கோர்கார்ட் இங்கே

2 மனித வெடிகுண்டுகள்: ஈராக்கில் 93பேர் பலி

ஈரரக்கில், கர்பாலா எனும் புனித நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்த யாத்ரிகர்கள்மீது 2 மனித வெடிகுண்டுகள் தாக்கியதில் 93பேர் இறந்தனர். பல செய்திகள் எண்ணிக்கை இதற்கும் மேல் இருக்கும் எனச் சொல்கின்றன.


Gulf News2 Suicide Bombers Kill 93 in Iraq
Attacks kill 112 Shia pilgrims in Iraq Financial Times
At least 121 dead as Shia pilgrims targeted in Iraq carnage Times Online
all 213 news articles » Google news

'ஸ்கூட்டர்' லிபி CIA Leak வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு

CIA ஏஜண்ட் பற்றிய ரகசிய செய்தியை வெளியிட்டதற்கான வழக்கில் அமெரிக்க துணை அதிபர் டிக் சேனியின் முன்னள் உதவியாளர் 'ஸ்கூட்டர்' லிபி குற்றவாளி என ஜூரி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால் 25 வருட சிறைத்தண்டனையும் $1 மில்லியன் அபதாரமும் விதிக்கப்படும்.

Jury finds ex-Cheney aide guilty in CIA leak case
Libby Found Guilty in CIA Leak Case
Cheney aide guilty in CIA leak case
CNN Breaking News

Former White House aide I. Lewis "Scooter" Libby has been found guilty on four of five counts in his perjury and obstruction of justice trial.

Libby was convicted of:
obstruction of justice when he intentionally deceived a grand jury investigating the outing of CIA operative Valerie Plame;

making a false statement by intentionally lying to FBI agents about a conversation with NBC newsman Tim Russert;

perjury when he lied in court about his conversation with Russert;

a second count of perjury when he lied in court about conversations with other reporters.

Jurors cleared him of a second count of making a false statement relating to a conversation he had with Matt Cooper of Time magazine.

Libby, 56, faces a maximum sentence of 25 years in prison and a fine of $1 million.
CNN senior legal analyst Jeffrey Toobin said, "He is virtually certain to go to prison if this conviction is upheld."

Libby, a former aide to Vice President Dick Cheney, was not accused of exposing Plame. He resigned in 2005 after the grand jury indicted him.

அரவாணிகளின் பாலின மாற்றுச் சிகிச்சை

மூன்றாம் பாலினமான அரவாணிகள், மருத்துவ ரீதியில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினால், தமிழகத் தலைநகர் சென்னையிலிருக்கும் அரசாங்க பொது மருத்துவமனையில், இலவசமாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில், தமிழக அரசு சமீபத்தில் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

BBCTamil.com

இராக் ஷியா யாத்திரிகர்கள் மீது தாக்குதல்- 90 பேர் பலி

இராக்கியத் தலைநகர் பாக்தாத்துக்கு தெற்கே ஷியா மதப் பிரிவைச் சேர்ந்த யாத்திரிகர்கள் மீது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என இராக்கிய பொலிஸார் கூறுகின்றனர். யாத்திரிகர்கள், புனித நகரமான கர்பாலாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, வழியில் ஹில்லா நகரில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

BBCTamil.com

கிரிக்கெட் ரசிகர்களுக்கான பிரத்தியேக பங்கு வணிகம் !

IIM-Ahmedabad மற்றும் IIT-Roorkee மாணவர்கள் இணைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கான பங்கு வர்த்தகத்தை www.cricketstock.com என்ற தளத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பெயரிலும் உள்ள (Virtual)பங்குகளை வாங்கி விற்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு

பிசிசிஐக்கு நிம்பஸ் மிரட்டல்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளை கட்டாயம் பிரசார்பாரதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவசர சட்டம் நிறைவேற்ற பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றிருக்கும் நிம்பஸ் நிறுவனம், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதாக பிசிசிஐக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. இதனையடுத்து பிசிசிஐயின் அவசரக்கூட்டம் அதன் தலைவர் சரத்பவார் தலைமையில் கூடவிருக்கிறது

மேலும்

மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்படும் - கார்னிக்

மென்பொருள் ஏற்றுமதியில் 2010ம் ஆண்டில் 60 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய முடியும் என்ற போதிலும், நீண்டகால அடிப்படையில் இதில் வீழ்ச்சி ஏற்படும் என்று நாஸ்காம் தலைவர் கார்னிக் கூறியுள்ளார்.

அரசிடம் இருந்து குறைந்த ஒத்துழைப்பு மற்றும் வரி விதிப்புகள் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

MSN - TAMIL

அரசு பள்ளிகளில் யோகா: தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக, தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய திட்டம் அமலுக்கு வரும் என்றார். வாழ்க்கைக் கல்வி என்ற அடிப்படையில் யோகா வகுப்புகள் மாணவர்களுக்கு போதிக்கப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

MSN - TAMIL

தமிழ்க்'குடி'மக்கள் அதிகரிக்கிறார்கள்?

தமிழ் நாட்டில் மதுபான விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ரூ. 7401 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. போன வருடம் முழுமைக்கும் மொத்த விற்பனை ரூ. 7315.

Record liquor sales in T. Nadu
The Corporation reported a turnover of Rs 7,401 crores for the first 10 months of the current fiscal compared to Rs.7,315 crores for the whole year during the last fiscal, official sources said.
The sales also helped the government earn record excise revenue, which stood at Rs 5,599 crores upto January against the Rs 4,922 crores for the last fiscal, the sources added.

Eight sugar mills with distilleries had been permitted to produce ethanol to the tune of 320 kilolitres per day. Of these, five were supplying ethanol to oil companies for manufacture of five per cent blended petrol, the sources said.

As many as 334 'notorious' prohibition offenders had been booked under several detention acts and 48.28 lakh litres of illicit arrack had been seized from them till January this year, the sources added.

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா: உலகின் மோசமான நாடுகள்?

பி.பி.சியின் உலகளாவிய ஆய்வு ஒன்றில் இஸ்ரேல், ஈரன், அமெரிக்கா ஆகிய நாடுகள் மோசமான பேரைப் பெற்றிருப்பதாக அறியப்பட்டுள்ளது. 28000க்கும் மேலானோர் உலகின் 12 நாடுகளைப் பற்றி மதிப்பிட்டனர். கனடா ஜப்பான் சிறநத நாடுகளாக வாக்களிக்கப்பட்டன. இந்தியா எதிர்மறை வாக்குகளைவிட ஆதரவு வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறது.

BBC survey: Iran, Israel, US have most negative image in world

இரண்டு விக்கெட்டுகளை இழந்தது இந்தியா

சற்றுமுன் நிலவரப்படி இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது (13 ஓவர்கள்). கங்கூலி 19 ரன்களுக்கும், ஷேவாக் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

முழு ஸ்கோர் விவரம்

இந்தியா 31/0

இன்று நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் பயிற்சி போட்டி நடந்து வருகிறது. டாஸில் ஜெயித்த நெதர்லாந்து இந்தியாவை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது.

மேல் விவரங்களுக்கு

சிகாகோவிற்கு கிடைக்குமா ஒலிம்பிக்ஸ்?


வரும 2016ல் ஒலிம்பிக்் போட்டியை நடத்த சிகாகோவும் (Chicago) விண்ணப்பித்துள்ளது. இதில் சான்பிரான்சிஸ்கோ (San Francisco) மற்றும் லாஸ்ஏன்ஜெல்ஸ் (Los Angeles). ்போன்ற நகரங்களும் விண்ணபித்துள்ளன.

இன்று ஒலிம்பிக் கமிட்டி சிகாகோவை மேற்பார்வை இடுகிறது.

இதில் புது தில்லியும் (New Delhi) கோதாவில் குதித்திருக்கிறது.

பார்ப்போம் யார் வெல்வார்கள் என..


பார்க்க சிகாகோ செய்தி



பார்க்க புது தில்லி செய்தி

பருத்தி வீரன், மொழி - சாதனை

'இந்த செய்திக் கூற்றின்படி முதல் ஐந்து தமிழ்படங்கள் வரிசையில் முதலிடத்தை 'பருத்திவீரன்' பிடித்து ஒரு அறிமுகநடிகர் தன் முதல்படத்திலேயே சாதனை நிகழ்த்திய பெருமையை நடிகர் கார்த்திக்கு கொடுத்திருக்கிறது.

முதல் ்முதல் ஐந்து இடங்கள்:
1.பருத்திவீரன்
2. மொழி
3.பச்சைக்கிளி முத்துச்சரம்
4. போக்கிரி
5. திருவிளையாடல் ஆரம்பம்

இந்தோனேசிய நிலநடுக்கம்: 30 பேர் பலி

நில அதிர்வுகளுக்கு மத்தி யில் அடிக்கடி அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தோனேசிய மக்களை இன்று காலை மீண்டும் ஒரு வலுவான நிலநடுக்கம் தாக்கியது. அந்த நில நடுக்கம் இந் தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள வடக்கு மாகாண தலைநகர் பதங் அருகில் மையம் கொண்டிருந்தது. அந்த நாட்டு நேரப்படி காலை 10.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற கணக்கில் அது பதிவாகி இருந்தது. மிக வலுவான இந்த நில நடுக்கத்தால் தலை நகர் பதங் குலுங்கியது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

சுமத்ரா தீவை புரட்டிப்போடும் வகையில் இந்த நிலநடுக்கம் இருந்ததாக உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்தும் அலுவலகங்களில் இருந்தும் அலறியடித்தப்படி வெளியில் ஓடி வந்தனர். தெருக்களில் திரண்ட மக்கள் பதட்டத்துடன் நடுங்கியபடி நின்றனர்.

இதற்கிடையே நிலநடுக் கத்தால் சுனாமி பேரலைகள் தாக்ககூடும் என்ற பீதி பர வியது. இதனால் மக்கள் உயரமான பகுதிகளுக்கு படை யெடுத்தனர். மக்கள் குடும்பம், குடும்பமாக பதங் நகரை விட்டு வெளியேறியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு பக்கம் மக்கள் ஓட்டம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு பக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி நடந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் மீட்கப் பட்டனர்.

மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 1 மணி நேரம் கழித்து பதங் நகர் அருகே மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமத்ரா தீவு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கமும் பதங் நகர் அருகே மையம் கொண்டிருந்ததால் பதங் நகரம் மிக கடுமையாக பாதிக் கப்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் முழுமையாக நொறுங்கி விட்டன. அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் செத்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பதங் நகர் அருகில் உள்ள பதுசங்கர்நகரில்தான் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்தது. அந்த நகரில் நில நடுக்கத்துக்கு 30 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. உயிரிழப்புமேலும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பதங், பதுசங்கர் நகர இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பதங் நகர மருத்துவமனைகளுக்கு மற்ற பகுதிகளில் இருந்து டாக்டர்கள் விரைந்துள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுனாமி தாக்காது என்று இந்தோனேசியா அறிவித்த பிறகே சுமத்ரா தீவு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சுமத்ரா தீவில் உருவான நிலநடுக்கம் 420 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் உண ரப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள உயரமான கட்டிடங்கள் பலதடவை குலுங்கின. சில கட்டிடங்கள் அங்கும் இங்கு மாக தொட்டில் போல ஆடின.

இதனால் சிங்கப்பூர், மலேசியாவில் மக்களிடம் பதட்டம் ஏற்பட்டது. வீடு, கட்டி டங்களில் இருந்து வெளியேறி தெருக்களில் நின்றனர்.

இந்த நில அதிர்வு காரணமாக சிங்கப்பூர், மலேசியாவில் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. சுமார் 10 நிமிடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

source மாலைமலர்

சுமத்ரா நிலநடுக்கத்தில் 11பேர் மரணம்

இந்தோனேஷியா வின் மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பாடங் நகரருகே நிகழ்ந்த அடுத்தடுத்த இரு நிலநடுக்கங்களில் குறைந்தது 11 பேர் மரணித்திருப்பார்கள் என ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது. இந்த நிலநடுக்கங்கங்கள் அடுத்துள்ள மலேசியா, சிங்கப்பூர் வரை உணரப்பட்டதாக மேலும் அந்த செய்தி சொல்கிறது. CNN 30 பேர் வரை இறந்திருக்கலாம் என வெளியிட்டுள்ளது.

உடனடியாக சுனாமி அறிவிப்பு எதுவும் வெளியிடப் படவில்லை.

சிங்கப்பூரில் பூகம்பம்.

5 நிமிடங்களுக்கு முன் சிங்கையில் பூகம்பம்.

பதிவர் கோவி. கண்ணன்
இன்னும் பதட்டமாக இருக்கு 1 1/2 டன் எடையுள்ள server rack ஆடிய ஆட்டம்...உடனே தெரிந்து கொண்டேன்... எல்லோரும் வெளியில் ஓடிவிட்டார்கள்...நிகழ்வு 15 செகண்ட் வரை நீடித்தது... விளைவுகளும் அதிர்வு அளவு பற்றிய செய்திகள் இன்னும் முழுதும் வரவில்லை.

நக்கீரன் தனிமடலில் இதே செய்தியை தந்துள்ளார்.


சிங்கை பகல் 1 மணி செய்திவழியாக வந்த தகவல் என்று பதிவர் கோவி.கண்ணன்
சற்று முன் கிடைத்த சிங்கை தமிழ் செய்தியில் படி சிங்கப்பூரில் பூகம்பம் உணரப்பட்டதை பொதுமக்களும் அரசாங்க அமைப்புகளும் உறுதி செய்துள்ளதாக அறிவித்தது.

இந்தோனேசியாவில் பாடாங் என்ற இடம் பூகம்பம் ஏற்பட்ட மையமாக தெரிய வந்திருக்கிறது. அங்கு உயிர்சேதம் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை. இந்தோனேசியா பாடாங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிய வந்திருக்கிறது.

அரசிதழில் வெளியிட்டால் பாதிப்பு ஏற்படாது : ஜெ அறிக்கை

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசின் அரசிதழில உடனே வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை, அந்த தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக்கான ஒரே வழி, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதுதான்.

அவ்வாறு வெளியிட்டால், நமக்கென தீர்ப்பில் குறிப்பிட்ட குறைந்தபட்ச நீராவது கிடைக்கும். இதற்கும் தீர்ப்பில் உள்ள பாதகமான விஷயங்கள் குறித்து, ஆணையத்திடம் மனு செய்வதற்கும், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கும் தொடர்பில்லை.

இது சம்பந்தமான் முந்தைய இடுக்கைகள்


காவிரி:அதிமுக கோரிக்கைக்கு கருணாநிதி எதிர்ப்பு

நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெ. கோரிக்கை


தினகரன்

தெருநாய்களைக் கொல்வதால் வணிகம் பாதிக்கும்

கர்நாடகாவின், தெருநாய்களைக் கொல்லும் முயற்சியால் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்படலாம் என விலங்குப் பிரியகளின் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்தக் கொடூரச் செயலை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது' என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Karnataka act against stray dogs may hit trade: animal lovers

"The world is watching us; it might stop trading with Karnataka, boycott its coffee and adversely affect our economy," the Animal Lovers Association (ALA) warned in a statement here.

அசாம் இந்தியன் ஆயில் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

அசாமில் IOCன் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

The Hindu
A major fire broke out in the Indian Oil Corporartion's Guwahati refinery's crude distilling unit on Monday night, IOC refinery sources here said.
The fire, caused due to a leakage in unit 1 of the refinery, was spotted at around 9 p.m.
Fire tenders of the refinery and of the State doused the blaze in over two hours, the sources said.

The quantam of damage could not be immediately ascertained. No casualty or injury was reported, sources said.

35 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

அயர்லாந்துக்கு எதிராக இன்று நடந்த பயிற்சி போட்டியில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா. 7 விக்கெட்ட் இழப்பிற்கு 66 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்து சுதாரித்து 192 ரன்களை அடைந்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. பின் அனைத்து விக்கெட்களையும் மடமடவென இழந்து 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேல் விவரங்களுக்கு

இன்று நடந்த மற்ற போட்டிகளில் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் பெர்முடாவையும், இலங்கை 172 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தன. கென்யாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 5 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் அடித்துள்ளது.

மேல் விவரங்களுக்கு

Lenovo Laptops பேட்டரிகளை திரும்பப் பெறுகிறது

சீனாவின் முன்னணி கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனமான லெனோவா தனது லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பேட்டரிகளை திரும்ப் பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் சான்யோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த பேட்டரிகள் அதிக வெப்பத்தை ஏற்படுத்தி தீ பிடிக்கும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெற லெனோவா முடிவு செய்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் லெனோவா தனது பேட்டரிகளை திரும்பக் கோருவது இது இரண்டாவது முறையாகும். தற்போது வெளியிடப்பட்டுள்ள திரும்பப் பெறும் அறிவிப்பில் அமெரிக்காவில் உள்ள ஒரு லட்சம் பேட்டரிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பேட்டரிகளும் அடங்கும் என்று லெனோவா செய்தித் தொடர்பாளர் பாப் பேஜ் கூறியுள்ளார்.


MSN - TAMIL்

இந்தியா, பாக்: தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு முயற்சி

இந்தியா பாக்கிஸ்தான் கூட்டாக தீவிரவாதத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கான ஒரு குழுவை இரூ நாடுகளும் ஒன்றிணைத்துள்ளன.

India, Pakistan to launch joint terrorism panel

The Pakistani and Indian leaders agreed to set up the panel when they met on the sidelines of a conference in September, when they also agreed to resume their stuttering peace process, frozen after bombings in the Mumbai in July.

Pakistan asked to take part in the investigation of the bombing but India declined. Pakistan expects to hear the results of India's investigation at the two-day meeting in Islamabad, said Foreign Ministry spokeswoman Tasnim Aslam.

"This is a mechanism which has been established to help the two countries prevent terrorism acts on either side," Aslam told a briefing on Monday, referring to the panel.

நாட்குறிப்பைக் கொல்லும் வலைப்பதிவுகள்

Reutersன் ஆய்வு வலைப்பதிவுகள் நாட்குறிப்பெழுதும் பழக்கத்தை மாற்றிவிட்டன எனச் சொல்கிறது.

Blogging sounds death knell for diarists - survey

A survey released on Monday of 1,000 British teenagers shows that fewer than one in 10 young people take the time to write a traditional diary, compared with 47 percent who share their innermost thoughts by blogging online.

-o❢o-

b r e a k i n g   n e w s...