காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, மத்திய அரசின் அரசிதழில உடனே வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை, அந்த தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக்கான ஒரே வழி, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதுதான்.
அவ்வாறு வெளியிட்டால், நமக்கென தீர்ப்பில் குறிப்பிட்ட குறைந்தபட்ச நீராவது கிடைக்கும். இதற்கும் தீர்ப்பில் உள்ள பாதகமான விஷயங்கள் குறித்து, ஆணையத்திடம் மனு செய்வதற்கும், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கும் தொடர்பில்லை.
இது சம்பந்தமான் முந்தைய இடுக்கைகள்
காவிரி:அதிமுக கோரிக்கைக்கு கருணாநிதி எதிர்ப்பு
நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெ. கோரிக்கை
தினகரன்
Tuesday, March 6, 2007
அரசிதழில் வெளியிட்டால் பாதிப்பு ஏற்படாது : ஜெ அறிக்கை
Posted by சிவபாலன் at 8:47 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment