.

Saturday, March 3, 2007

காவிரி:அதிமுக கோரிக்கைக்கு கருணாநிதி எதிர்ப்பு

நன்றி MSN தமிழ்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிழதில் வெளியிட வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கைக்கு முதலமைச்சர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அதிமுகவின் இந்தக் கோரிக்கை, நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு செய்ய வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம் 1956 விதி 6(1)ன் கீழ் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டால், அந்த முடிவு சம்பந்தப்பட்ட மாநிலங்களை கட்டுப்படுத்துவதாக அமைந்துவிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமனதான முடிவுக்கு எதிராக அதிமுகவின் கோரிக்கை அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பிரதமரிடம் மனு கொடுப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் பிரச்சனையில், மாநிலங்களுக்கு டையிலான நதிநீர் தாவா சட்டம் 1956ன்கீழ் உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் நடுவர் மன்றத்தில் விளக்கம் கோரியோ அல்லது மறு ஆய்வு செய்யக்கோரியோ மேல்முறையீடு செய்யலாம் என்றும், இதுகுறித்த மனுக்களை நடுவர் மன்ற பரிசீலித்து இறுதி முடிவு எடுத்த பிறகே அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

3 comments:

சிவபாலன் said...

Cyril,

Now I got it! (Reason behind)

Thanks.

Boston Bala said...

Dinamani.com - Headlines Page: நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் பிரச்சினை யார் சொல்வது சரி திமுக தலைவரா?, எம்.பி.யா?

ஏ. தங்கவேல்



புதுதில்லி, மார்ச் 8:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமா என்ற விவாதத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி சொல்வது சரியா அல்லது திமுக எம்.பி.யின் கோரிக்கை சரியா?

இப்படிப்பட்ட ஒரு குழப்பமான, ஆனால் நியாயமான கேள்வி எழுந்துள்ளது.

கடந்த வாரம், அதிமுக மற்றும் மதிமுக எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு முரணானது என்று கருத்துத் தெரிவித்த முதல்வர் கருணாநிதி, அறிவிக்கையை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டால், நடுவர் மன்றத்தின் முன்பு தமிழகம் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு பறிபோய்விடும் என்று கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இன்னொரு அறிக்கையில், பல்வேறு நடவடிக்கைகளை முடித்த பிறகே நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மக்களவையில் புதன்கிழமை பேசிய திமுக உறுப்பினர் சுகவனம், ""காவிரி நடுவர் மன்றம் உச்ச நீதிமன்றத்துக்கு ஒப்பானது. நடுவர் மன்றத் தீர்ப்பை அரசாணையாக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

அதாவது, அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பிரதமரிடம் வைத்த கோரிக்கையை மக்களவையில் வைத்தார் திமுக எம்.பி. அந்த நேரத்தில், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்பட திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் அவையில் அமர்ந்திருந்தனர். ஆனால், சுகவனம் கோரிக்கை குறித்து அவர்கள் எந்த சலனமும் காட்டவில்லை.

இப்போது, யார் சொல்வது சரி? அரசிதழில் இப்போது வெளியிட முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி சொல்வது சரியா அல்லது வெளியிட வேண்டும் என திமுக எம்.பி. மக்களவையில் கோரிக்கை வைத்தது சரியா? ஒருவேளை, கருணாநிதி சொல்வது தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், திமுக எம்.பி.யின் கோரிக்கை அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

VSK said...

அப்போ எதுக்கு இன்னிக்கு பாராளுமன்றத்தில், தி.மு.க. எம்.பி.க்கள் அந்தக் குதி குதித்திருக்கிறார்கள்?

கர்நாடக எம்.பி.க்கள் இதை அரசிதழில் வெளியிடக் கூடாது எனச் சொன்னதற்கு, அமைச்சர் டி.ஆர்.பாலு உட்பட பலர் எதிர்த்திருக்கிறார்களே!

அரசிதழில் வெளியிட்டால், இது இரு அரசையும் கட்டுப்படுத்தும்.

அப்போது கர்நாடகம் இந்த குறைந்த பட்ச அளவு நீரைக் கொடுக்க மறுக்க முடியாது.

தலைவனில்லாத கட்சியா தி.மு.க.?

ஜெ. சொல்வது போல், தமிழக நலனைக் கருத்தில் கொள்ளாமல்தான் இந்த அரசு நடக்கிறது என சந்தேகிக்க இடம் இருக்கிறது.

ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் குறியாய் இருக்கிறதோ?

சூரியனுக்கே வெளிச்சம்!
:))

பாராளுமன்றத்தில் ஒரு நிலை!
தமிழகத்தில் ஜெ. எதிர்ப்பு நிலை!
இதுதான் கலைஞர் நிலை!

-o❢o-

b r e a k i n g   n e w s...