சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் உண்டியலில் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர்.
சென்னை கிளையில் கண்கானிப்பு கேமாராக்கள் பொருத்துவதாக முடிவு செய்து முதல் கட்டமாக 15 கேமராக்கள் பொருத்தப்பட்டுல்ளன.
மேலும் -
Saturday, March 3, 2007
திருமலை தேவஸ்தான கிளையில் கண்காணிப்பு கேமராக்கள்
Labels:
சென்னை
Posted by கவிதா | Kavitha at 9:49 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
5 comments:
அதுலே ஒரு கேமெராவை, பட்டர்கள் மேலே திருப்பி வைக்கணும். அவுங்க மாலைகளை
வீசீ எறியறதையும், காசு வாங்கிக்கிட்டு ஒரு சிலரை மரத்தடுப்புக்கு உள்ளில்
கொண்டுபோய் கடவுள் திருவுருமுன் (கைநீட்டுனா தொடமுடியும் )நிக்க வச்சு
மாலை மரியாதை செய்யறதையும் கண்டு அதிசயிக்கலாம்:-)
துளசிஜி, சரியாத்தான் சொல்றீங்க.. சூப்பர் ஐடியா.........:)))
எப்படி இப்படி எல்லாம் ஐடியா குடுத்து கலக்கறீங்க..
துளசி மேடம், உங்களோட ஆதங்கம் எனக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனா எனக்கு இந்த விஷயத்தில வெறுப்பே உண்டு இந்த மாதிரியான ஆட்கள் மேல. கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு ஒருத்தர் ஒரு தப்பு பண்ணினாக்கூட என்னால புரிஞ்சுக்க முடியுது. அவனுக்கு சட்டரீதியான தண்டனைகள் பத்தி மட்டுமே அதிகபட்ச பயமிருக்கும். அதை சமாளிக்க முடியும்ன்றபோது துணிஞ்சு செய்யறாங்கன்னு நினைச்சுப்பேன். ஆனா கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்ன்னு சொல்ற இவங்க எல்லாம் எப்படி தங்களோட இந்த செய்கைகள் அவரோட கண்ணுலேர்ந்து தப்பிக்கும்ன்னு நினைக்கறாங்க. ஒருவேளை அந்த 40 - 50 லட்சத்துல சில பல ஆயிரங்களை தங்களோட பங்குக்கு சேர்த்து பண்ற தப்புக்கு பிராயசித்தம் செய்துடலாம்ன்ற நம்பிக்கையா? கடவுள் இல்லைன்னு சொல்றவங்களை விட இவங்கதான் கடவுளை ரொம்பவே சிறுமைப்படுத்துகிறார்கள் - அவருக்கு இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுக்கறது மூலமா அல்லது மாமூல் வாங்கிக்கிட்டு தப்புக்களை கண்டுக்காம விட்டுடற ஒரு போலிஸ்காரர் அளவுக்கு அவரை எடை போடறது மூலமா.
நீ எதைப் பார்க்கிறாயோ அதுதான் கிட்டும்!
அங்கொரு கண்ணும், இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை.
:))
கடவுள் திருவுருமுன் கண்ணைத் திறந்து பார்த்தவுடனே தெரியற சமாச்சாரங்கள்
இதுதாங்க எஸ்.கே.
சாமி பெரியவர். அவர் கண்ணை மறைச்சு நாமத்தைப் போட்டுக்கி(வி)ட்டாலும்
நம்மைப் பார்க்க அவராலே முடியும். ஆனால் நமக்கு? கண்ணைத் திறந்து
வச்சுக்க வேண்டிய அவசியம் இருக்குங்களே:-)))))))))
Post a Comment