.

Saturday, March 3, 2007

சோமாலியாவில் குண்டு வெடிப்பு

ஆப்ரிக்க ஒன்றிய அமைதிப் படைகளின் ஒரு பகுதியாக செல்லும் உகாண்டா நாட்டின் 1700 பேரைக் கொண்ட குழு சோமாலிய அரசுக்கு உதவி செய்வதற்காக நேற்றுக் கிளம்பியது. அங்குள்ள சோமாலிய ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களை களையும் முயற்சியில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள்.

இதைத் தொடர்ந்து சோமாலியாவில் ஆறு இடங்களில் குண்டு வெடித்தது. ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டின் பின் பகுதியில் எத்தியோப்பியாவின் ஆதரவுடன், சோமாலியாவில் இருந்து இஸ்லாமியப் படைகளை அரசு விரட்டியடித்தது. அங்கு தங்கியிருந்த எத்தியோப்பிய படையினருக்கு மாற்றாக இந்த அமைதி காக்கும் படை அங்கு செல்கிறது.

கடந்த இரு வாரங்களில் மட்டும், பத்தாயிரக் கணக்கானோர், தலைநகரை விட்டு தப்பியோடியதாக ஐநா சொல்கிறது.

சமாதான வீரர்கள் எண்ணிக்கை
உகாண்டா: 1,700
நைஜீரியா: 850
புருண்டி: 1,700
கானா: முடிவு செய்யப்படவில்லை

BBC

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...