.

Saturday, March 3, 2007

பூரி ஜெகந்நாதர் அமெரிக்கர் வரவால் பட்டினி!

மாற்றுமதத்தவர் வரவால் பல இலட்சங்கள் பெறுமான உணவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பூரியில் அரங்கேறியிருக்கிறது.

அமெரிக்க பொறியிலாளர் பால் ரோடிகர் தன் இரு இந்து நண்பர்களுடன் புகழ்பெற்ற பூரி ஜெகன்ந்நாதர் ஆலயத்திற்கு சென்றார். அங்கு உள்ளே நுழைய இருக்கும் விதிமுறைகளை அறியாத நிலையில் மூவரும் சென்றது கோவில் பாதுகாவலர்களின் ஆத்திரத்தைக் கிளறியது. அமெரிக்கரை காவலர் வெளியில் கொண்டு சென்றபோதிலும் கோவில் மாசுபட்டுவிட்டதாக அனைத்து பூசைகளும் நிறுத்தப் பட்டன. மதிய நேர உணவு படையலை(மகா போக்) கோவிலை அடுத்துள்ள பூங்காவனத்தில் குழிதோண்டி புதைத்தனர். பின்னர் கோவில் தூய்மை படுத்தப் பட்டு பூசைகள் தொடர்ந்தன.

மேலும் இது பற்றிய The Hindu செய்தி

6 comments:

மணியன் said...

It happens only in India என்ற இந்திப் பாட்டு(?) தான் நினைவிற்கு வருகிறது. மாற்றுமதத்தவர் உள்ளே வருவது பற்றிய சர்ச்சை ஒருபக்கம் என்றாலும் பல இலட்சம் பேர் ஒருவேளை உணவின்றி வருந்தியிருக்கும்போது இப்படி ஒரு சம்பிரதாயமா? புதைப்பதற்கு பதிலாக எழைகளுக்காவது வினியோகித்திருக்கலாமே ்:(

Hari said...

முட்டாள்தனமான செயல். மனிதாபிமானதற்றதும் கூட

அரவிந்தன் நீலகண்டன் said...

டத்தனம். ஆனால் இந்தியாவில் மட்டும் என்காதீர்கள் தேடினால் எல்லா இடங்களிலும் இத்தகைய மடத்தனங்களை பார்க்கமுடியும். ஆனால் கருணாநிதித்தனமாக அப்படி ஒரு பட்டியலைக் கொடுக்காமல் இது தவறு என சொல்லி இத்தகைய மடத்தனமான விசயங்களுக்கு எதிராக இந்து இயக்கங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என சொல்லுவதுதான் சரியாக இருக்கும்.

Hariharan # 26491540 said...

கலிங்கர்களுக்குக் கபாலத்தினுள் ஏதும் இல்லை போலிருக்கிறது.

மஹா போக் நைவேத்திய உணவை புதைத்து வீணாக்கியது என்பது மஹா முட்டாள்தனமான செயல்.

சாப்பாடு என்பதே மஹா(அன்ன)லஷ்மி தானே. அதை இப்படி வீணடிப்பது பாவம் என்று இந்த மடையர்கள் அறியவில்லையா?

Anonymous said...

It is barbaric act from Puri.(Buri)? check with today "www.malaimalar.com. the same news i noticed. He entered (American) with the permission (he gave money-TIPS) one of the temple Puuzari. The concerned Puzaari took american with him up to TEMPLE MUULASTHAANAM.

So who DID MISTAKE? American Gave tips. He done mistake first. The big mistake done by temple puzaari. Puzaari knows the assaaram in the temple. How he took bribe from american and allowed with him to Muulasthaanam? Third big mistake around 3lacks worth PIRASAATHAM thrown away (dumping)
Foolish people still in Puri temple or all puzaari's are still in poor.

Thamizhan said...

அவன் கண்டு பிடித்த அனைத்து வசதிகளும் வேண்டும் ஆனால் அவன் வேண்டாம்.உலகிற்குப் பறை சாற்றும் உன்னதம்.இதிலே கலைஞர் பெயரைச் சொல்லிக் காய்ந்து கொள்ளும் அற்பங்கள்.பிள்ளையார் மட்டும் கொளுக்கட்டைச் சாப்பிட ஆரம்பிக்கட்டும்,ஒரு பயல் பிள்ளையாரிடம் கொளுக்கட்டையேக் காண்பிக்க மாட்டான்.இது பெரியார் சொன்னது,வாருங்கள் வாழ்த்துப் பட்டாளமே வாழ்த்து சொல்லுங்கள்.பெரியார் உங்கள் வாழ்த்துக்களை மிகவும் ரசிப்பார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...