.

Friday, June 29, 2007

தென் ஆப்ரிக்காவை வென்றது இந்தியா - சச்சின் சாதனை

பெல்ஃபாஸ்ட்டில் நடந்த இராண்டாவது ஒருநாள் போட்டியை இந்தியா 6 விக்கட் வித்தியாசத்தில் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவின் 226 இலக்கை இந்தியா 49.1 ஓவர்களில் எட்டியது.

சச்சின் டெண்டுல்கர் 93 ரன்களை ஏடுத்து உலகில் முதன் முதலில் ஒருநாள் போட்டிகலில் 15,000 ரன்களைக் குவித்து சாதனை செய்துள்ளார்.

Tendulkar becomes first player to score 15000 ODI runs The hindu
India beat South Africa by six wickets The Hindu

செயற்கை உயிரின மாற்றம் - அறிவியல் சாதனை

செயற்கையாக ஒரு பாக்டீரியாவின் உயிரணுக்களை இன்னொன்றில் செலுத்தி அதை முன்னதைப் போல செயல்படச் செய்து சாதனைஇ செய்துள்ளனர் விஞ்சானிகள். செயாற்கையாக செல்களை உருவாக்கும் முயற்சியில் இது முதல் படி என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்படி பாக்டீரியாக்களை தங்கள் விருப்பப்படி செயல்படச் செய்ய முடியும். ஒரு ஆப்பிள் மாக் கம்ப்யூட்டரை, மென்பொருள் உதவியுடன் ஒரு விண்டோஸ் கம்ப்யூட்டராக மாற்றுவதைப் போன்றது இது என்கிறார் க்ரெய்க் வென்றெர் எனும் உயிரணு சோதனையாளர்.

Scientists take step to making synthetic life - reuters

ஆப்பிள் ஐ போன் வாங்க நீண்ட வரிசைகள்

இன்று விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோனை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று இரவிலிருந்தே ஐபோன் கடைகளின் முன்பாக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

வரிசையில் நிறபவர் தரும் நேரடி செய்திதொகுப்புக்கள்
From the Front Lines of NY's iPhone Line ABC News
In the iPhone Line Detroit Free Press, United States

வீடியோக்க்கள்





40 பாக்கிஸ்தானியர்களை இந்தியா விடுவித்தது

பரஸ்பர உறவை வலர்க்கும் முகமாக இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த கைதிகள் 40பேரை விடுதலை செய்துள்ளது. நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்தச் செயல் நன்னம்பிக்கையை உருவாக்கும் முகமாக அமைந்திருக்கிறது.

மேலும் 48 கைதிகளின் சொந்த நாடு எது என அறியப்பட்டதும் அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்தக் கைதிகளில் அநேகம்பேர் மீனவர்கள்.

இந்திய பாக்கிஸ்தானிய உள்துறை அமைச்சகங்களுக்கிடையே புதுடில்லியில் ஜூலை 3, 4ல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

India to release 40 Pak prisoners NDTV

லவ் ஆல்? - விம்பிள்டனில் சானியா சர்ச்சைக்குள்ளாகிறார்

நடந்துவரும் விம்பிள்டன் போட்டிகளில் இஸ்ரேலைச் சேர்ந்த தன் முன்னாள் பார்ட்னர் ஷகர் பியரோடு சானியா கூட்டு சேர்ந்து ஆடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முஸ்லிமான சானியா யூதரான பியரோடு ஜப்பான் ஓப்பன் போட்டிகளில் முன்பு ஜோடி சேர்ந்து விளையாடியபோதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது இதன்காரணமாய்ிவர்கள் பிரிய நேர்ந்தது. விம்பிள்டனில் இருவரும் சேர்ந்து ஆட உள்ளனர்.

இதற்கு முன்பும் 2002ல் பாக்கிஸ்தான் வீரர் ஐசம்-அல்-ஹக் குரெஷி இஸ்ரேயேலின் அம்ர் கடாடோடு கூட்டு சேர்ந்ததற்கு பாக்கிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Sania faces Israeli Wimbledon doubles storm Sports Time

'சூழ்சியால் வெற்றி' - ஜெயலலிதா

மதுரை மேற்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி சூழ்சி செய்து வெற்றி வென்றுள்ளனர் என ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

முறையான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனக் கருதி தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைக்க முயன்றதாகவும் அதை திமுக, காங்கிரஸ் தலமை தடுத்ததாகவும் அழகிரியி வாக்காளர்களை மிரட்டி போலி வெற்றி பெற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

Congress' victory in by-poll a conspiracy by DMK: Jayalithaa Hindu

ஏய்ட்ஸ் அறிவின்மை: மீரட் மருத்துவர்களுக்கும் !

கேரள பள்ளியில் தான் என்றில்லாமல் மீரட்டில் மருத்துவர்களுக்கும் ஏய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று பறைசாற்றும் விதமாக ஹெச் ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிரசவத்தை பார்க்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மறுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் தச்சுத்தொழில் புரியும் கணவனையே மருத்துவர்கள் வழிமுறை சொல்லி க் கொடுத்து தொடாமலே அக்கணவன் மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். தொப்புள்கொடியை தன் கணவனே அறுத்ததாக அந்தப் பெண்மணி கூறினார். இது எழுப்பிய சர்ச்சையின் பின்னால் உ பி அரசு ஆய்வு மகப்பேறு மருத்துவதுறை தலைவரையும் வேலைநேரத்தில் இருந்த மருத்துவரையும் குறை கண்டிருக்கிறது.

The Hindu News Update Service

இஸ்ரேல் அதிபர்் பதவி விலகினார்: சர்ச்சை தொடர்கிறது

பாலியல் வன்புணர்வு மற்றும் பிற பாலியல் குற்றங்கள் சாட்டப்பட்டு சிறை செல்லவேண்டிய நிலையில் தனது ஏழு வருட பதவிகாலத்தில் இரு வாரங்களே பாக்கியுள்ள நிலையில், பலரும் விமரிசிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலிய அதிபர்மோஷே காட்சவ் தனது பதவியை துறந்தார். இதன் காரணமாக தனது முன்னாள் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டது, அவர்களை பெண் என்பதால் அலுவலகத்தில் துன்புறுத்தியது போன்ற சிறு குற்றங்களுக்கே விசாரிக்கப் படுவார். தவிர அவரது சிறை தண்டனை இடைநீக்கம் செய்யப்படும். அட்டார்னி ஜெனரலின் இந்த தாராள மனதிற்கு பெண்ணீயவாதிகளும் அரசியல் நோக்கர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

முழு விவரங்களுக்கு...The Hindu News Update Service

சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி: இந்தியா அர்ஜென்டீனாவிடம் தோல்வி

பெல்ஜியத்தில் நடந்துவரும் சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் டசன்கணக்கான பெனால்டி கார்னர்களை மாற்ற முடியாது இந்தியா அர்ஜெ டீனாவிடம் ஒன்றுகு இரண்டு என்ர கோல் கணக்கில் தோல்வியுற்றது. பயிற்சியாளர் ஜோக்கிம் கார்வலொ பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றமுடியாது போனால் ஒன்றும் செய்யமுடியாது என்று வருந்தினார். நான்கு ஆட்டங்களில் இரண்டாவதான இந்த தோல்வியால் இந்தியா இந்த ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இறுதியாட்டத்திற்கு தன்னிடத்தை உறுதி செய்துள்ள நியூ சிலாந்து சனிக்கிழமை ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை தோற்கடித்தால் இந்தியா விளையாட வாய்ப்பு கிட்டும்.

DNA - Sport - India grapple with the question on penalty - Daily News & Analysis

இலண்டனில் பெரும் குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது

இலண்டனின் வெஸ்ட் எண்ட் பகுதியில் டைகர்டைகர் இரவுவிடுதியருகே பெட் ரொல், ஆணிகள், சிறு காஸ் சிலிண்டர்கள் ஆகியவைகளை திணித்த கார் குண்டு ஒன்றை திறனிழக்கச் செய்திருக்கின்றனர். ஸ்காட்லாந்து காவலின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவரும் துணை உதவி கமிஷனரும் ஆன ் பீட்டர் கிளார்க் இந்த கருவி மட்டும் வெடித்திருந்தால் பெரும் பொருட்சேதமும் உயிர்ச் சேதமும் நிகழ்ந்திருக்கும் எனக் கூறினார்.

Massive car bomb defused in London | UK Latest | Guardian Unlimited

இந்தியா அணிசேரா நாடுகள் குழுமத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்

உலகில் இரு அணிகள் இல்லாத, மறைமுக யுத்தம் (Cold war) இல்லாத நிலையில் அணிசேரா நாடுகள் குழுமத்தின் அவசியம் என்னவென்றும் இந்தியா இந்த குழுமத்தை கைவிட வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு செயலர் காண்டெலசா ரைஸ் கூறியதற்கு எதிர்வினையாக இந்திய வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில் இந்தியா ஒருபோதும் அணிசேரா நாடுகள் இயக்கத்திற்கு கொடுக்கும் ஆதரவு உறுதியானதும் நிலையானதுமாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இனவெறி காலனியாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மிகவும் உதவிய இந்த இயக்கம் இன்றும் உலகளாவிய ஜனநாயகம் தழைக்க அவசியமானது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

NDTV.com: India firm on NAM commitment

மதுரை இடைதேர்தல்:காங்கிரஸ் வெற்றி.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் கொண்டாட்டம்.

மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் காங்., வேட்பாளர் 31,115 ஓட்டுகள் வித்தியாசத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அனு சக்தி கப்பல் வருகைக்கு தடை விதிக்க இயலாது.

சென்னை ஐகோர்ட் மறுப்பு.

அமெரிக்காவின் அணுசக்தி கப்பலான நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு வருவதால் அணு கதிர் வீச்சு ஆபத்து உள்ளது. எனவே கப்பல் வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேல்முருகன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஷா தலையிலான பெஞ்ச் அமெரிக்க கப்பல் வருகைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாதெமி விருதுகள்

2006-ம் ஆண்டுக்கான சாகித்ய கலா அகாதெமியின் 'பஷா சம்மான்' விருதுக்கு வெட்டூரி சுந்தரமூர்த்தியும், எச்.பி. நாகராஜய்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளுக்கு அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதத்தில் தெலுங்கு எழுத்தாளரான வெட்டூரி சுந்தரமூர்த்திக்கு விருது வழங்கப்படவுள்ளது.

கன்னட மொழி எழுத்தாளர் எச்.பி. நாகராஜய்யா இதுவரை 60 புத்தகங்களையும், பத்திரிகைகளுக்கு 300-க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி

நவம்பரில் லாஸ்வேகாஸ் வலைபதிவர் காண்காட்சி

நவம்பர், 2007ல் லாஸ் வேகாஸில் வலைஇப்பதிவர் கண்காட்சி நடைபெற உள்ளது Blogworld & new media expo என அழைக்கப்படௌம் இந்த கண்காட்சி வரும் நவம்பர் 8-9 ஆகிய தேட்திகளில்ல் நடைபெறும்.


Register Now at Blog World

செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

டில்லியில் உள்ள செங்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக (World Heritage Monument) யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல வரலாற்று சிறப்புமிக்க தலங்களுக்கும் யுனெஸ்கோ இந்த அங்கீகாரத்தை தருவது வழக்கம். இவற்றில் பலவற்றிற்கும் யுனெஸ்கோ நிதி உதவியும் வழங்குகிறது.

இதுகுறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

PM delighted at Red Fort getting world heritage status Hindu
Red Fort joins UNESCO's World Hegitage Sites list Hindu
Red Fort is now a world heritage site Business Standard

பெரு நாட்டிடம் நடிகை கேமரான் டயஸ் மன்னிப்பு கோரினார்

'ஷ்ரெக்' படத்தில் நாயகிக்காக குரல் கொடுத்த கேமரான் டயஸ் சமீபத்தில் பெரு நாட்டின் 'மாச்சு பிச்சு'வுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது 'மக்களுக்கு சேவை' (Serve the People) என்னும் வாக்கியத்தை சீன மொழியில் எழுதியிருந்த கைப்பையை தாங்கியிருந்தார்.

'Serve the People' என்பது சீனாவின் கம்யூனிசத் தலைவர் மாசேதுங்கின் புகழ்பெற்ற அரசியல் கோஷம். ஆனால், பெருவிலோ எழுபதாயிரம் மக்களை கொன்று குவித்த மாவோயிஸ புரட்சியை நினைவுபடுத்துவதாக இந்த முழக்கம் அமைந்துள்ளது.

சீனாவுக்கு பயணித்த போது வாங்கிய கைப்பை வாசகத்தின் காயப்படுத்தும் தன்மை அறியாமல், பெரு மக்களை புண்படுத்தியதற்காக டயஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

Diaz is sorry for the slogan on her bag - The Times of India

சீன நிலக்கரி சுரங்க அதிபர் கைது

சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கம் வைத்திருந்ததை ஆராய்ந்ததற்காக லான் (Lan Chengzhang) அடித்துக் கொல்லப்பட்டார். நிருபரை கொலை செய்த வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை தீர்ப்பாகியுள்ளது.

செய்தியாளர் சுரங்க திபரை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இந்த முறைகேடுகளை ஆராய்ந்தார் என்னும் குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் எழுந்தது.

அரசின் கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும் சீனாவின் சுரங்கங்களில் ஆண்டுதோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் விபத்துகளில் இறக்கிறார்கள்.

BBC NEWS | Asia-Pacific | China mine boss jailed over death

இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: இலங்கை அமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது:

ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும்.

தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்கரவாத இயக்கத்தின் உத்தியோகப்பூர்வமான தளமாக நாம் அதனைக் கருதவில்லை.

விடுதலைப் புலிகள் இரு உத்தியோகபூர்வமான தளங்களை இயக்கி வருகின்றனர்.

தமிழ்நெட் இணையத்தளம் குறித்து அரசாங்கம் கவலை கொண்டிருக்குமேயானால் ஏன் அந்த இரண்டு இணையத்தளங்களை ஏதும் செய்யாதிருக்கிறோம்? தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தி தொடர்பில் கவலை கொண்டிருந்தோமேயானால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக இணையத்தளத்தில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன- அது குறித்து நாம் கவலை கொள்ளாதிருப்போமா? என்றார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.

Puthinam Tamil Daily News Page

-o❢o-

b r e a k i n g   n e w s...