.

Friday, June 29, 2007

பெரு நாட்டிடம் நடிகை கேமரான் டயஸ் மன்னிப்பு கோரினார்

'ஷ்ரெக்' படத்தில் நாயகிக்காக குரல் கொடுத்த கேமரான் டயஸ் சமீபத்தில் பெரு நாட்டின் 'மாச்சு பிச்சு'வுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது 'மக்களுக்கு சேவை' (Serve the People) என்னும் வாக்கியத்தை சீன மொழியில் எழுதியிருந்த கைப்பையை தாங்கியிருந்தார்.

'Serve the People' என்பது சீனாவின் கம்யூனிசத் தலைவர் மாசேதுங்கின் புகழ்பெற்ற அரசியல் கோஷம். ஆனால், பெருவிலோ எழுபதாயிரம் மக்களை கொன்று குவித்த மாவோயிஸ புரட்சியை நினைவுபடுத்துவதாக இந்த முழக்கம் அமைந்துள்ளது.

சீனாவுக்கு பயணித்த போது வாங்கிய கைப்பை வாசகத்தின் காயப்படுத்தும் தன்மை அறியாமல், பெரு மக்களை புண்படுத்தியதற்காக டயஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

Diaz is sorry for the slogan on her bag - The Times of India

6 comments:

பூனைக்குட்டி said...

நான் ஒருமுறை சிறிலிடம், சற்றுமுன் ஏங்க சற்று லேட்டாயிருக்குன்னு கேட்டேன். அவரு கோச்சிக்கிட்டாரு.

Grrrrrr. இப்ப ரொம்ப லேட்டாய்டுச்சுடுச்சு போலிருக்கே. Beyonce உடைய ஷோ பார்த்தீங்களா! தலை சுத்திப் போய் உட்கார்ந்திருக்கேன் ;)

சிறில் அலெக்ஸ் said...

தல மோகந்தாஸ்
இதுல கோபப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. ஒரு ஆதங்கந்தான்.

செய்திகளை நாங்க வாசிக்கும்போதுதான் போடுறோம். பொதுவா லேட்டான செய்திகள தவிர்க்கிறோம் ஆனா சில செய்திகள் எல்லாருக்கும் போனா நல்லாயிருக்கும்ணு தெரியும்போது போடாம விடமுடியாது.

இந்த செய்திய லேட்டா படிச்சா போதுமே!!
:))

பூனைக்குட்டி said...

கோவித்துக் கொள்ளாமல் சரியான முறையில் எடுத்துக் கொண்ட சிறிலுக்கு ஒரு ஜே!

MSATHIA said...

சிறில்,
இத இப்போ தான் சற்றுமுன்னில் படிக்கறேன். கொஞ்சம் தாமதமா படிக்கற என்ன போல இருக்கறவங்களுக்கும் சற்றுமுன் உதவுகிறது.;-)
-சத்தியா.

Boston Bala said...

---இப்ப ரொம்ப லேட்டாய்டுச்சுடுச்சு போலிருக்கே.---

Cold news... ஓல்ட் இஸ் கோல்ட் :)

சிறில் அலெக்ஸ் said...

//Cold news... ஓல்ட் இஸ் கோல்ட் :)//

Baba is alive and kicking.

:)

-o❢o-

b r e a k i n g   n e w s...