.

Thursday, May 10, 2007

ச:டாக்டர் படிப்பின் ஒருபகுதியாக கிராமங்களில் கட்டாயப்பணி

மருத்துவப் படிப்பின் ஒரு பகுதியாக மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் கட்டாயப் பணியாற்ற வகை செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

டாக்டர் படிப்பின் ஒருபகுதியாக கிராமங்களில் கட்டாயப்பணி எம்.எஸ்.என் தமிழ்

ச:கடவுள்களின் ஆபாசப் படம் வரைந்த மாணவர் கைது

வதோதராவில் எம் எஸ் பல்கலைக்கழகத்தில் நுட்பக் கலை பயின்றுவரும் மாணவர் சந்திரமோகன் இந்து மற்றும் கிறீத்துவக் கடவுள்களின் படங்களை ஆபாசமாக வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜகவினர் பல்கலைக்கழக வளாக்கத்தில் புகுந்து காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்த படங்களை சேதப்படுத்தினர். மேலும் போலீசில் வழக்கு பதிவு செய்தனர்.

சர்ச்சைக்குரிய படங்கள் பொதுமக்களின் பார்வையில் வைக்கப்படவில்லை என்றும் ஆசிரியர்களின் பார்வைக்கே வைக்கப்பட்டிருந்தன என்றும் பல்கலையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Student held for painting gods in 'obscene postures'Times of India, India
Art college exhibition attacked by VHPNDTV.com, India
Hindu brigade damage paintings in VadodaraNDTV.com, India
Artist arrested for 'obscene' paintingsTimes Now.tv, India

''This was an internal assessment of the students. The teachers evaluate their works and are not open to the general public. We will inquire how the outsiders came in,'' said Shivji Panikar, Dean, Faculty of Fine Arts.

''They are playing with the sentiments of the Hindu community by showing such obscene paintings of our Gods and Goddesses,'' said Neeraj Jain, Leader, BJP.

ச:பெண்கள் இரவில் வேலை செய்யத் தடை - கர்நாடகா சட்டம்

பெண்களை இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்யச்சொல்வதை தடைசெய்ய கர்நாடகாவில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டில் இயற்றப்பட்ட கர்நாடக கடைகள் மற்றும் வியாபாரக்கூடங்கள் சட்டம் திருத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைசெய்யச் சொல்பவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 10,000 முதல் 20,000 வரை அபராதம் விதிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

பல மகளிர் அமைப்புக்கள் இந்த திருத்தம் பெண்களை பாகுபடுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கணினித் துறைக்கு(IT/BT) இந்த சட்ட திருத்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bangalore: Women barred from night shift in Karnataka Bellevision, India
Karnataka notifies law banning women in night shiftsHindu, India
Karnataka notifies law banning night shift for womenTimes of India, India

இதுகுறித்த விமர்சனக் கட்டுரை
Is there a dark side to the Night Work Ban? indiainteracts.com

பாப் உல்மர் கொலை: முஷ்டாக் அஹ்மத் விஷம் கலந்த மதுபோத்தல்களை கொடுத்தார் ?

பாப் உல்மர் கொலைவழக்கில் புதுத் திருப்பமாக பாக்கிஸ்தான் தொலைக்காட்சியொன்று தன்னிடம் கொடுக்கப்பட்ட நஞ்சு கலந்த இரண்டு சாம்பேன் மது போத்தல்களை அணியின் பௌலிங் கோச்சான முஷ்டாக் அஹ்மது உல்மருக்கு கைமாற்றியதாக கூறியது.

இதுபற்றிய செய்தி துணுக்கு: MSN INDIA - Champagne bottles passed on to Woolmer by Ahmed: TV channel

இந்தியா பங்களாதேசத்தை ஐந்து விக்கெட்டில் வென்றது

தோனியின் தேர்ந்த ஆட்டமும் தினேஷ் கார்த்திக்கின் துணையும் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேசத்தை வென்று கிரிக்கெட் உலகக்கோப்பையில் தோற்றதிற்கு பதிலடி கொடுப்பதாக அமைந்தது.
ஸ்கோர்:
பங்களாதேசம்: 250/7 47 ஓவர்களில்
( ஜாவேத் ஓமர்-80, சகிபுல் ஹாசன்-50 தினேஷ் மோங்கியா- 3/49 )
இந்தியா : 251/5 (46 ஓவர்களில்)
(தோனி: 91 N.O, தினேஷ் கார்த்திக் 58,சையத் ரசல் 2/66, சகிபுல் ஹாசன் 2/43)



MSN INDIA - Dhoni powers India to 5-wicket win against Bangladesh

ச:கருக்கலைப்பு - போப் கடுமை

உலகிலேயே பெரிய கத்தோலிக்க நாடான பிரேச்சிலில் சுர்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போப் பெனடிக்ட் கரூக்கலைப்பை ஆதரிக்கும் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் மதத்திலிருந்து விலக்கப்படுவார்கள் என கடுமையாக எச்சரித்துள்ளார்.

திருச்சபையின் சட்டங்கள் உயிர்களைக் கொல்வதற்கு எதிரானது என்றும் அப்படிச் செய்பவர்களால் இயேசுவை நற்கருணைமூலம் பெற இயலாது எனவும் அவர் தெரிவித்தார்.

சுயநலமும், பயமுமே கருக்கலைப்பை ஆதரிப்பதற்கு ஆதாரம் எனவும் திருச்சபை உயிர்களைக் காக்கப் போராடும் என்றும் தெரிவித்த அவர் வாழ்க்கை அழகானது என்றும் போராட்டங்களுக்கிடையே வாழ்வது ஒரு கொடை எனவும் கூறினார்.

Pope gives abortion warningITV.com
Pope Warns Politicians Over Abortion Sky News
Pope Benedict XVI stresses opposition to abortion in Brazil International Herald Tribune

தில்லியின் பால்தாக்கரே ?

பீஹாரிலிருந்தும் உத்தரப்பிரதேசத்திலிருந்தும் புலம் பெயர்ந்தவர்களாலேயே பிரச்சினைகள் உருவாவதாக தில்லி முதல்வர் ஷீலா தீக்சித் கூறியிருப்பது காங்கிரஸின் முதும் தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நேற்று தில்லியின் மக்கட்பெருக்கத்திற்கான காரணமாக இவ்வாறு அவர் பேசியது நாடாளுமன்றத்திலும்் எதிரொலித்தது.

இது பற்றி.....Sheila Dikshit hauled up by Congress- Hindustan Times

ச:டோனி ப்ளேர் பதவி விலகல்

10 வருடங்களாக இங்கிலாந்தின் பிரதமராக பணியாற்றிவந்த டோனி ப்ளேர் வரும் ஜூன் 27ம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்தார். ஈராக்கில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப்படைகளுடன் சேர்ந்தது முதல் டோனி ப்ளேருக்கு ஆதரவு குறைந்து வந்தது.

அறிவிப்பை வெளியிட்டு பேசிய ப்ளேர்,'நெஞ்சில் கையை வைத்துச் சொல்கிறேன் எது சரி என நம்பினேனோ அதையே செய்தேன்' எனக் கூறினார்.

கடந்த நூறு வருடங்களில் பிரதமராக 10 வருடம் பணிபுரிந்த இரண்டாம் நபர் டோனி ப்ளேர்.

Blair bows out after 10 years Reuters
Britain's Blair to step down on June 27 Los Angeles Times,
Blair in his own words Reuters
No jokes for Blair's likely heir CNN

ச:தினகரன் தாக்குதல் - சிபிஐ விசாரணை

தினகரன் தாக்குதல்குறித்த விசாரணையை சிபிஐ செய்ய முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுல்ளார். தன் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டுள்ளதால் இதை தமிழக போலீஸ் விசாரிப்பது போதுமானதாகாது என சட்டசபையில் தெரிவித்துள்ளார் முதல்வர்.

மேலும் அவர் கலவரநேரத்தில் போலீஸ் செயல்படவில்லை என்பது உண்மையல்ல என்றும் 17பேர் அடங்கிய போலீஸ் குழு ஒன்று கலவரப் பகுதிக்கு விரைந்தது என்றார். கருத்துக்கணிப்புகள் குழப்பத்தை உண்டுபண்ணுகின்றன என்பதை வெவ்வேறு மேற்கோள்களுடன் தெரிவித்த முதல்வர் தான் பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள் வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் 'நீங்கள் விரும்பினால் நான் மகிழ்ச்சியாக ஓய்வுபெறுகிறேன் (Retire) ஆனால் பதவி விலகமாட்டேன்' என்றார்.

முதல்வர் பதவி விலகக் கோரி எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மொத்தம் 12 பேர் இதுவரை கைசெய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் இரந்த தினகரன் ஊழியர்களின் குடூம்பத்திற்கு தலா ரூ 15 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு சன் குழுமத்தில் வேலையும் தரப்படும் என்று தயாநிதி மாறன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தினகரன் தாக்குதலை கண்டித்து பத்திரிகையாளர்கள் கண்டனக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்திவருகின்றனர்.

TN Govt. orders CBI probe into Madurai incidents The Hindu
12 held so far for attack on Dinakaran; Remanded to judicial custody The Hindu
Dikshit's remarks, TN violence derail Parliament The Hindu
DUJ deplores attack on media in Madurai The Hindu

ச: தினகரன் பத்திரிக்கை தாக்குதல்- சன் செய்திகள் வீடியோ

வீடியோவைக் காண "இங்கே கிள்க் செய்யவும்."

அடுத்த குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி: சோனியா, மன்மோகன் விருப்பம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி அடுத்த குடியரசுத் தலைவராக வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே 2004-ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கான போட்டியில் பின்தங்கிய பிரணப், இந்த முறை குடியரசுத் தலைவருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார். எனினும், இடதுசாரி கட்சிகள் சம்மதித்தால் மட்டுமே அவர் வெற்றிபெற முடியும். உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, எதையும் உறுதியாகக் கூற முடியும்.

"விசா' விண்ணப்பங்களை "வடிகட்ட' அமெரிக்கத் தூதரகம் முடிவு

வெளிநாடுகளுக்கு ஆள்களைக் கடத்துவது அதிகரித்துள்ளது; அதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூட பங்கு இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வரத் தொடங்கிவிட்டதால் அமெரிக்கத் தூதரகம் மட்டும் அல்ல எல்லா நாட்டுத் தூதரகங்களுமே கலவரம் அடைந்திருக்கின்றன. எனவே விசா கோரி விண்ணப்பிக்கிறவர்களின் ஆவணங்களைத் தீவிரமாகச் சரிபார்ப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கத் திணறும் அளவுக்கு விண்ணப்பங்கள் பலமடங்காகப் பெருகிவிட்டன. கடந்த மாதம் விசா கோரி விண்ணப்பித்துவிட்டு தில்லியிலேயே தங்கியவர்கள் செய்த செலவு மட்டும் ரூ.95 லட்சம் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதனால் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்துள்ளனர்.

Dinamani

ச:2007ல் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை

அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை இந்தியாவிலும் கால்பதிக்கவிருக்கிறது. 2007 முடிவுக்குள் டெல்லி அல்லத்து மும்பையில் முதல் இந்திய ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை துவங்கப்படும் என ஸ்டார்பக்ஸ் அறிவித்துள்ளது.


Starbucks to open first outlet in India by 2007-end

-o❢o-

b r e a k i n g   n e w s...