.

Thursday, May 10, 2007

ச:பெண்கள் இரவில் வேலை செய்யத் தடை - கர்நாடகா சட்டம்

பெண்களை இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்யச்சொல்வதை தடைசெய்ய கர்நாடகாவில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டில் இயற்றப்பட்ட கர்நாடக கடைகள் மற்றும் வியாபாரக்கூடங்கள் சட்டம் திருத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைசெய்யச் சொல்பவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 10,000 முதல் 20,000 வரை அபராதம் விதிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

பல மகளிர் அமைப்புக்கள் இந்த திருத்தம் பெண்களை பாகுபடுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கணினித் துறைக்கு(IT/BT) இந்த சட்ட திருத்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bangalore: Women barred from night shift in Karnataka Bellevision, India
Karnataka notifies law banning women in night shiftsHindu, India
Karnataka notifies law banning night shift for womenTimes of India, India

இதுகுறித்த விமர்சனக் கட்டுரை
Is there a dark side to the Night Work Ban? indiainteracts.com

3 comments:

G.Ragavan said...

IT/BT துறைகளுக்கு விலக்கு அளிக்க வில்லையென்றால் கம்பெனிகள் பக்கத்தூருக்குப் பொட்டி கட்டி விடுமே! ஆனாலும் இந்தச் சட்டம் முழுக்க முழுக்க சரியா என்று சொல்ல முடியவில்லை. மருத்துவத்துறையின் முதுகெலும்பே பெண்கள்தான். அந்தத் துறைக்கும் விலக்கு உண்டா?

சிறில் அலெக்ஸ் said...

Shops and Commercial Establishment Act 1961

இது மருத்துவமனைகலுக்குப் பொருந்தாது என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

மடையர்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...