.

Thursday, August 30, 2007

சவால் தோழமை கட்சிகளுக்கில்லை - கருணாநிதி.

முதல்- அமைச்சர் கருணாநிதி அளித்துள்ள கேள்வி-பதில் ஒன்று மாலைமலரிலிருந்து..

கேள்வி:- சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 30 ஆம் நாள் நடைபெற்ற தங்களின் மைத்துனர் வீட்டுத் திருமணத்தில் தாங்கள் பேசும்போது, "கழக ஆட்சிக்கு சிலர் அறைகூவல் விடுக்கும் போதெல்லாம் உறுதியான வீர உள்ளம் படைத்த கழகத்தினர் இருக்க பயமேன்'' என்று குறிப்பிட்டதை தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளுக்கு விடுத்த மிரட்டல் என்பது போல சில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?

பதில்:- தோழமை கொண்டோருக்கு யாரும் "சவால்'' அல்லது "மிரட்டல்'' விட மாட்டார்கள்-துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் தான் அறை கூவலோ, சவாலோ விடுவார்கள். வேடிக்கை என்ன வென்றால் தி.மு.க. அணியை உடைக்க வேண்டுமெனப் "பகீரத'' முயற்சி செய்து வருகிற சில ஏடுகள், திருமணத் தில் நான் பொதுவாகப் பேசியதை, கழகத்தின் உறுதியை எடுத்துக் கூறியதை, திரித்து வெளி யிட்டுக்கலகம் செய்திடத் துடியாய்த் துடிக்கின்றனவே அது தான் பெரிய வேடிக்கை. இத்தகைய எத்தர்களின் விஷமப் பிரச்சாரத்தில் எல்லோரும் ஏமாந்து விடமாட்டார்கள்.

சென்னையில் எலிகாய்ச்சல் பரவல்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் எலிகாய்ச்சல் நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். `லெப்டோ ஸ்பைரோசஸ்'' என்று சொல்லக்கூடிய இந்த வகை காய்ச்சல் எலி, பூனை, நாய், ஆடு, மாடு ஆகியவற்றின் சிறுநீர், மலம் போன்றவற்றில் இருந்து நோய் கிருமி உருவாகிறது.

சிறுகாயங்கள், சிரங்கு, புண், கீறல்கள் உடலில் இருந்தால் கூட அதன் வழியாக பாதிக்க கூடும். அதனால் வீட்டு விலங்குகள் வளர்ப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சிரங்கு, புண் இருந்தால் அவற்றை சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் கிருமி தாக்கக்கூடும். இதனால் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி ஏற்படும். சிலருக்கு தோளில் தழும்பு கூட உண்டாகும்.

`எலி' காய்ச்சல் தொற்றக்கூடியது அல்ல. நாம் பாதுகாப்பாக இருந்தால் இந்நோய் வராமல் தடுக்கலாம். வீட்டு விலங்குகளின் சிறுநீரோ, மழை நீரோ, கழிவு நீரோ காயம் ஏற்பட்ட பகுதியில் பட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும் என்று மாநகராட்சி மருத்துவர் ஒருவர் கூறினார்.

மேலும் விபரங்களுக்கு மாலைமலர்

மூப்பனார் இருந்திருந்தால் என் அரசியல் மாறுபட்டு இருக்கும்: விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஆக. 30-

மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல முக்கிய பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மூப்பனார் சமாதியில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவதுë:-

மூப்பனார் என்னால் மறக்க முடியாத தலைவர். அவர் எனக்கு பல யோசனைகளைச் கூறினார். "தம்பி இப்போது சினிமாவில் இருக்கட்டும், தேவைப்படும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அவரது குடும்பத்தில் ஒருவனாகவே இருந்தேன். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தவறாமல் வாழ்த்துச் சொல்வேன்.

இன்னும் அவர் உயிரோடு இருப்பது போலவே உணருகி றேன். மரியாதை, நல்ல பண்புகளை மூப்பனாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அடிக்கடி அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாசல்படி வரை வந்து வழியனுப்பி வைப்பார். அவரது பண்பை இன்று ஜி.கே.வாசனும் பின்பற்றி வருகிறார். நான் தற்போது வேறு அரசி யலில் இருக்கிறேன்.

மூப்பனார் இப்போது இருந்திருந்தால் என் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கும். எளிமைக்கு மூப்பனார்தான் உதாரணம். மூப்பனார் காமராஜரை பின்பற்றினார். நான் அவரை பின்பற்றிதான் கதர் ஆடை அணிகிறேன்.

மேலும் செய்திக்கு மாலை மலர்

சென்னை: பிரிக்கப்படும் பேருந்து நிலையம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூன்றாகப் பிரித்து தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூரில் வெளியூர் பேருந்துகளுக்கான நிலையத்தை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில்குமார் மாநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் யோசனை தெரிவித்திருந்தார்.

இதுபற்றி மாநகர வளர்ச்சிக் குழுமத்தலைவரும் அமைச்சருமான பரிதி இளம்வழுதியிடம் கேட்டபோது,

கோயம்பேடு பஸ் நிலையத்தை பிரித்து சென்னை நகரின் எல்லையில் பேருந்து நிலையங்களை உருவாக்கினால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என்பது உண்மைதான்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கண்டிப்பாக மாற்று ஏற்பாடு செய்துதான் ஆக வேண்டும்.எனவே இதுகுறித்து கலந்தாய்வு கூட்டத்தில் எல்லோரும் சொன்ன யோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

என்று பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.

இறந்த பின்னும் 16 ஆண்டுகளாகச் சம்பளம்.

மணிப்பூர் மாநில மின்துறையில் மின்தடப்பணியாளர் (Lineman) ஒருவருக்கு அவர் இறந்த பின்னும் 16 ஆண்டுகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

L.நிங்தேம்ஜாவ் என்பது அந்தப் பணியாளரின் பெயர். 1985 ல் இறந்த அவருடைய பணி உரிமைகள் குறித்து வினவ அவரின் மகன் ரிஷிகாந்தாவுக்கு அப்போது போதிய வயதோ, மனைவிக்கு படிப்பறிவோ இருக்கவில்லை.

படிப்பறிவற்ற குடும்பத்தினரருக்கு நண்பர் ஒருவர் வழங்கிய அறிவுரையின் பேரில், ஓய்வூதியம் முதலிய பெறுமதிகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வினவிய போது, இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Man draws salary for 16 years after death.

நான்காவது ஒருநாள்: டென்டுல்கர் அரை சதம் அடித்தார்


மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், பூவா/தலையா-வை வென்ற இந்தியா, பந்தை இங்கிலாந்திடம் ஒப்படைத்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் அங்கம் வகித்த முன்னாஃப் படேலுக்கு பதில் அஜித் அகர்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

துவக்க ஆட்டக்காரர் கங்குலி, அணித்தலைவர் டிராவிட், கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மூன்று விக்கெட் இழப்புக்கு 32 ஓட்டங்களே எடுத்த நிலையில் டென்டுல்கரின் அரை சதம், இந்தியாவின் சரிவை தடுத்து நிறுத்தியது.

34 ஓவர் முடிவில் மூன்றரை ஓட்டம் வீதம் நான்கு பேரை இழந்து 123 ஓட்டங்களை இந்தியா எடுத்துள்ளது

நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் வானிலையால் போட்டியில் மழை குறுக்கிடுமோ என்ற சந்தேகமும் உள்ளது.

BBC SPORT | Cricket Scorecard
4th ODI: England v India at Manchester, Aug 30, 2007 - Cricinfo

ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் தற்கொலை

ஷார்ஜாவில் இந்தியர் தற்கொலை

ஷார்ஜாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அப்துல் ரஷீத் முஹம்மது கெளஸ் ( வயது 41 ) செவ்வாய்கிழமை இரவு தான் தங்கியிருந்த மூன்றாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஐந்தாயிரம் திர்ஹம் மாதச் சம்பளம் கொடுப்பதாக வாக்களிப்பட்டு குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இதனை அவர் பணியாற்றின நிறுவனத்தினர் மறுத்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட முஹம்மது கெளஸிற்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இருபது வருடங்களாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அவர் கடந்த ஜுலை 29 ஆம் தேதி ஷார்ஜா வருகை புரிந்தார்.

சம்பளப் பிரச்சனை இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருந்த போதிலும் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ( Consulate ) வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி 2002ல் 54 பேரும், 2003ல் 63 பேரும், 2004ல் 67 பேரும், 2005ல் 82 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று நிகழும் தற்கொலைகளைத் தடுக்க இந்திய துணைத்தூதரகம் மனதளவில் பாதிக்கப்படுவோருக்கு ஆலோசனை வழங்க கடந்த மே மாதம் 18ம் தேதி முதல் ஆலோசகர்களை நியமித்துள்ளது. இவர்களை 050 9433111 எனும் அலைபேசி எண்ணில் வாரந்தோறும் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் அமீரகத்திற்கு வருவதால் அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் வழியுறுத்துகின்றனர்.

http://www.godubai.com/gulftoday/article.asp?AID=31&Section=Home
Indian jumps to death in Sharjah

நாளிதழ் வாசிக்கும் மூன்றே வயது குழந்தை.

2004 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி பிறந்தா அர்ஜயா நிஸ்காம் என்ற மூன்று வயது குழந்தை நாளிதழ்களையும், பாடபுத்தகங்களையும் தெளிவான உச்சரிப்புடன் சரளமாக வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

இச்சிறுவன் இன்னமும் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்பது இதில் இன்னும் வியப்பு. மாவட்ட கூடுதல் நடுவர் நிதின் பானுதாஸ் ஜாவலே என்பார் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

எஃகு நகரமான ரூர்கேலாவில் வசிக்கும் இந்த பிறவி மேதையின் தந்தை அம்ரேந்திர பெஹரா, அங்குள்ள எஃகாலையின் ஊழியர்களுள் ஒருவராவார்.

மேலும் படிக்க... பி/டி/ஐ செய்தி..

Three-year-old reads newspapers and text books

அணுசக்தி ஒப்பந்தம்: 6 வினாக்கள் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இதுபற்றி ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவை இப்போது வாபஸ் பெறுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளனர்.

இருந்தாலும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசிடம் 6 விளக்கங்களை கேட்க இந்திய கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளது.

1. அணுசக்தி 123 ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு என்ன பயன்கள் ஏற்படும் இதன் விளைவு என்ன?

2. அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?

3. ஒப்பந்தத்தில் இந்தியாவில் சொந்த அணுசக்தி திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? குறிப்பாக அணு ஆயுதம் தொடர்பாக என்ன விளைவு ஏற்படும்?

4. இதனால் இந்தியா- மேற்கு ஆசியா, 3-ம் உலக நாடுகள் இடையே பாதிப்பு ஏற்படுமாப அணி சேரா கொள்கை என்ன ஆகும்?

5. இந்த ஒப்பந்தத்தால் நமது மின்சார தேவை எந்த அளவுக்கு பூர்த்தியாகும். இது பொருளாதார ரீதியில் லாபம் தரக்கூடியதா?

6. இது பாதுகாப்பான ஒப்பந்தம்தானா?

மாலைமலர்

Cong likely to freeze nuke deal temporarily - Newindpress.com
Govt bows to Left, will go slow on nuclear deal

நரேந்திர மோடி காரின் குறுக்கே பாய்ந்ததால் கால்சென்டர் ஊழியரை நடுரோட்டில் உதைத்த போலீசார்

அகமதாபாத் நகரில் நரேந்திரமோடி ஒரு விழாவில் கலந்து கொண்டு ஆஸ்ரம் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று ரோட்டை கடந்தார். இதனால் நரேந்திரமோடியின் பாதுகாப்புக்கு சென்ற காரும் மற்ற கார்களும் வரிசையாக திடீர் என்று நின்றன.

உடனே போலீசார் இறங்கி அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் தனது பெயர் உசேன், தாகிர் மார்க்கெட் வாலா என்றும் கால்சென்டரில் வேலை பார்ப்பதாகவும் சொன்னார். அவர் அகமதாபாத்தில் பொற்றோருடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நரேந்திரமோடி கார் சென்ற பின்பு பின்னால் வந்த காரில் இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, முதல்-மந்திரி காரின் குறுக்கே பாய்பவர்களை எச்சரிக்கவே இது போன்ற விசாரணையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

போலீசாரால் தாக்கப்பட்ட வாலிபர் உசேன் கூறுகையில் "ஆஸ்ரம் ரோட்டில் முதல்-மந்திரி கார் வருவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. போக்குவரத்து மூடப்படவில்லை. இதனால் சாலையை கடந்தேன்'' என்றார். அவரது பெற்றோர் கூறுகையில் "நாங்கள் நரேந்திரமோடியை நேசிப்பவர்கள் அவரது அபிமாணிகள்'' என்றனர்.

மாலைமலர்

வெளிநாடு போகாதீர்கள்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள்

சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரி வணிகவியல் விழா நேற்று நடைபெற்றது. கல்லூரிகளுக்கு இடையேயான இந்த விழாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை அமைத்து வருகின்றன. நம் நாட்டில் உள்ள தங்கம், நிலக்கரி, வெள்ளி உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுத்துச் செல்லவா வருகின்றன? இல்லை இந்தியாவில் இருக்கிற திறமைசாலிகளை, கடினமாக உழைக்கக்கூடிய இளைஞர்களை நம்பிதான் அவரை வந்த வண்ணம் உள்ளன.

25 லட்சம் பேருக்கு வேலை
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வருடத்திற்கு 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நாஸ்காம் அறிக்கை கூறுகிறது. அதோடு படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களில் 50 சதவீதம்பேர் வேலைகொடுப்பதற்கான தகுதி இல்லாமல் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது. இந்த நிலை இருந்தால் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உள்ள நாடு சீனாதான். ஆனால் சீனர்களுக்கு நம் அளவுக்கு ஆங்கிலப்புலமை இல்லை. எனவே, இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று பெண்கள் அதிகளவு படிக்கிறார்கள். பெண் கல்விக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் 45 சதவீதம்பேர் பெண்கள். பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டியது மாணவிகளின் கடமை. படிக்கிற மாணவ-மாணவிகளுக்கு செல்போன் தேவையில்லை. செல்போன் இருப்பதால் படிப்புக்கு பலவகையிலும் இடைïறுகள் ஏற்படுகின்றன.

வெளிநாடு போகாதீர்கள்
மாணவ-மாணவிகள் படித்துமுடித்துவிட்டு இந்தியாவிலேயே பணியாற்ற வேண்டும். யாரும் வெளிநாடு போகாதீர்கள். 40 லட்சம் இந்திய விஞ்ஞானிகள் வெளிநாடு சென்று குடியேறிவிட்டனர். ஒரு லட்சத்திற்கும் குறைவான விஞ்ஞானிகளே இந்தியாவில் உள்ளனர். 25 லட்சம் விஞ்ஞானிகள் அமெரிக்கா சென்று அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். 15 லட்சம் பேர் பிற நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார். இந்த விழாவில் ஜெயின் கல்லூரி செயலாளர் கவுதம் பி.வைத், முதல்வர் எம்.கே.மாலதி உள்பட பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

கட்சிகளின் போராட்டத்தால் ஆம்புலன்ஸில் இறந்த குழந்தை

சிம்லா நகரில் காங்கிரஸ் கட்சியினரும் பிஜேபி கட்சியினரும் நடத்திய பேரணிகளால் போக்குவரத்து தடைபட்டு நான்கு வயது சிறுவன் டிங்கூ சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லமுடியாமல் வழியிலேயே இறந்தான். விதான்சபை( மக்களவை) எதிரில் இருகட்சிகளுமே பேரணி நடத்த முயன்ற கூட்டத்தில் அதிக சுரத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை கொண்டுசென்ற ஆம்புலன்ஸ் மாட்டிக்கொண்டது. காவலர்கள் இலேசான தடியடி செய்தே மக்களவை அங்கத்தினர்களை கலைக்க முடிந்தது.

இது பற்றி:While Cong, BJP fight, boy dies in ambulance

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது

அனைத்து இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறு விலக்கிக் கொள்ளவில்லையெனின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. முன்னதாக தில்லி உயர்நீதிமன்றம் இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு காண அரசிற்கு கெடு விதித்தது. மருத்துவ பட்டச் சான்றிதழ்கள் வழங்கப் படாவிடில் நீதிமன்றம் தலையிடவேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தது. இதனை அடுத்து உலக உடல்நல நிறுவன சந்திப்பொன்றிற்கு பூடான் செல்லவிருந்து உடல்நல அமைச்சர் அன்புமணி தன் பயணத்தை தள்ளிப் போட வேண்டியதாயிற்று. சான்றிதழ்களில் கையொப்பமிட்டிருந்த தாளாலர் மரு.சந்தீப் அகர்வால் நியமனம் செல்லாது என்று அமைச்சர் முன்னதாக கையெழுத்திட மறுத்து வந்தார்.

AIIMS doctors end strike

கருணா குழு முக்கியஸ்தர் சுட்டுக் கொலை

கருணா குழுவின் பிராந்திய அரசியல் பிரிவின் தலைவரான முரளி என அழைக்கப்படும் நடராஜா குமரன் , வயது 24, இன்று புதன்கிழமை விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் [ pistol] குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக விரட்டி விட்டோம் என இலங்கை அரசு பிரச்சாரம் செய்து வரும் வேளையில் இச் சம்பவம் நடந்துள்ளது.


கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் 2003 ல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி வருகிறார்.



ஆதாரம் : BBC சிங்கள சேவை.

இச் சம்பவம் பற்றிய பிந்திய செய்தி



கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான Daily Mirror [வியாழக்கிழமை ஏடு] நடராஜா குமரன் விடுதலைப் புலிகளால் கொல்லப்படவில்லை எனச் செய்தி வெளியிட்டுள்ளது. கருணா குழுவில் இருந்து பிரிந்த குழுவான பிள்ளையன் குழுவைச் சேர்ந்தவரே இந்த நடராஜா குமரன் என்றும், இவர் கருணா குழுவினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச் சம்பவம் பற்றி விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

அறிவியல் இன்று - 30/08/2007

சிலந்தி மனிதனை போல் சுவற்றில் ஏறலாம்
--------------------------------------------
புகழ்பெற்ற கேலிச்சித்திர கதாபாத்திரமான ஸ்பைடர்மேனை (Spider man) போல வருங்காலத்தில் யார் வேண்டுமானாலும் செங்குத்தான சுவாற்றின் மேல் அனாயாசமாக ஏறலாம். அப்படி நடக்கும் சாத்தியக்கூறு இருப்பதாக இதை பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதை பற்றிய செய்தி இதோ




உங்கள் தூக்கம் பார்த்து ஏழுப்பி விடக்கூடிய அலாரம்
-----------
----------------------------------------------
நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது எழுப்பாமல் தூக்கம் கம்மியாக இருக்கும் நேரத்தில் எழுப்பி விடக்கூடிய அலாரம் பற்றி தெரிய வேண்டுமா??
இந்த செய்தியை படியுங்கள்.



வயது வித்தியாசம் குழந்தை பெற முக்கியம்
-------------------------------------------------
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் வயது வித்தியாசம் அவர்கள் குழந்தை பெறுவதை பாதிக்கும் என இவற்றை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆஸ்த்திரிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்

சிவாஜி' (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார்

சென்னை, ஆக.29-

ரஜினிகாந்த் நடித்த `சிவாஜி' படம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக, சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு, மேலும் 3 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதில், ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடிக்கிறார்.


மேலும் செய்திக்கு "தினதந்தி".

மரத்தில் `சாய் பாபா' உருவம் - பொது மக்கள் திரண்டு வந்து தரிசனம்

பாஸ்தி, ஆக.29-

உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி நகரத்தில் உள்ள ஒரு மரத்தில் சாய் பாபாவின் உருவம் தெரிவதாக செய்தி பரவியது. இதைக் கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு சென்று அந்த மரத்தில் தெரிந்ததாகக் கூறப்படும் சாய்பாபா உருவத்தை தரிசித்தனர். பைசபாத், கோரக்பூர், தேவிபடான் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வந்தனர். பெருந்திரளாக மக்கள் திரண்டதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட

மேலும் செய்திக்கு "தினதந்தி".

குப்பை அகற்றும் பணி மந்தம் - கொலம்பியா நிறுவனத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை, ஆக. 30: மாநகராட்சியின் 3 மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தம் பெற்றுள்ள நீல்மெட்டல் பனால்கா நிறுவனம், உரிய முறையில் குப்பைகளை அகற்றாததால், அதனிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திக்கு "தினகரன்".

டில்லியில் தென்னக மீனவர்கள் போராட்டம்

கடல் அட்டை எனப்படும் மீன் வகையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடல் அட்டைகளைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பல்வேறு அண்டை நாடுகளில் கடல் அட்டைகளைப் பிடிக்க இவ்வாறு தடை விதிக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிபிசி

The Hindu : National : Fishermen seek lifting of the ban on sea cucumber (Holothurians)
Udayavani - National Fishworkers Forum appeals to PM

-o❢o-

b r e a k i n g   n e w s...