ஷார்ஜாவில் இந்தியர் தற்கொலை
ஷார்ஜாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அப்துல் ரஷீத் முஹம்மது கெளஸ் ( வயது 41 ) செவ்வாய்கிழமை இரவு தான் தங்கியிருந்த மூன்றாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஐந்தாயிரம் திர்ஹம் மாதச் சம்பளம் கொடுப்பதாக வாக்களிப்பட்டு குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இதனை அவர் பணியாற்றின நிறுவனத்தினர் மறுத்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட முஹம்மது கெளஸிற்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இருபது வருடங்களாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அவர் கடந்த ஜுலை 29 ஆம் தேதி ஷார்ஜா வருகை புரிந்தார்.
சம்பளப் பிரச்சனை இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருந்த போதிலும் தற்கொலை செய்து கொண்டது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ( Consulate ) வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி 2002ல் 54 பேரும், 2003ல் 63 பேரும், 2004ல் 67 பேரும், 2005ல் 82 இந்தியர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்று நிகழும் தற்கொலைகளைத் தடுக்க இந்திய துணைத்தூதரகம் மனதளவில் பாதிக்கப்படுவோருக்கு ஆலோசனை வழங்க கடந்த மே மாதம் 18ம் தேதி முதல் ஆலோசகர்களை நியமித்துள்ளது. இவர்களை 050 9433111 எனும் அலைபேசி எண்ணில் வாரந்தோறும் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் அமீரகத்திற்கு வருவதால் அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் வழியுறுத்துகின்றனர்.
http://www.godubai.com/gulftoday/article.asp?AID=31&Section=Home
Indian jumps to death in Sharjah
Thursday, August 30, 2007
ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் தற்கொலை
Labels:
அமீரகம்
Posted by முதுவை ஹிதாயத் at 9:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment