.

Thursday, August 30, 2007

மூப்பனார் இருந்திருந்தால் என் அரசியல் மாறுபட்டு இருக்கும்: விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஆக. 30-

மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல முக்கிய பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மூப்பனார் சமாதியில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவதுë:-

மூப்பனார் என்னால் மறக்க முடியாத தலைவர். அவர் எனக்கு பல யோசனைகளைச் கூறினார். "தம்பி இப்போது சினிமாவில் இருக்கட்டும், தேவைப்படும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அவரது குடும்பத்தில் ஒருவனாகவே இருந்தேன். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தவறாமல் வாழ்த்துச் சொல்வேன்.

இன்னும் அவர் உயிரோடு இருப்பது போலவே உணருகி றேன். மரியாதை, நல்ல பண்புகளை மூப்பனாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அடிக்கடி அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாசல்படி வரை வந்து வழியனுப்பி வைப்பார். அவரது பண்பை இன்று ஜி.கே.வாசனும் பின்பற்றி வருகிறார். நான் தற்போது வேறு அரசி யலில் இருக்கிறேன்.

மூப்பனார் இப்போது இருந்திருந்தால் என் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கும். எளிமைக்கு மூப்பனார்தான் உதாரணம். மூப்பனார் காமராஜரை பின்பற்றினார். நான் அவரை பின்பற்றிதான் கதர் ஆடை அணிகிறேன்.

மேலும் செய்திக்கு மாலை மலர்

5 comments:

சிவபாலன் said...

விஜயகாந்த தமிழ்நாட்டில் மறுக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறார். வரும் தேர்தலில் அரசியல் சுவாரசியம், கணக்குகள் எல்லாம் கூடும்..

வாசகன் said...

'ஆலையில்லாத ஊர்...............' னு ஒரு பழமொழி சொல்வாய்ங்களே..

சிவபாலன் said...

வாசகன், கொஞ்சம் பழமொழியை முழுசா சொல்லிடீங்க.. என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.. :)

வாசகன் said...

இலுப்பைப்பூவை சர்க்கரையாகவும் தேவைக்குப் பயன்படுத்துவார்கள் என்று சொல்லவந்தேன் :-)))

சிவபாலன் said...

வாசகன்,

Wow! Excellent one!

Good!

-o❢o-

b r e a k i n g   n e w s...