.

Saturday, August 11, 2007

உபியில் தனியார்துறையில்் இட ஒதுக்கீடு : மாயாவதி அறிவிப்பு

தனது பகுஜன் கட்சியை சர்வஜன் கட்சியாக மாற்றி வெற்றிகண்ட உபி முதல்வர் மாயாவதி இட ஒதுக்கீட்டிலும் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். மன்மோகன்சிங் தனியார்துறைக்கு வேண்டுகோள் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மாயாவதி தனியார் நிறுவனக்களில் 30% இட ஒதுக்கீட்டை அமலாக்க திட்டமிட்டுள்ளார். பிரதம செயலர் சைலேஷ் கிருஸ்ஹ்ணாவின் கூற்றுப்படி 10% அட்டவணைவகுப்பினருக்கும் 10% இதர பிற்பட்ட வகுப்பினருக்கும் 10% முன்னேறிய வகுப்பினரின் பொருளாதார நலிவடைந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு கட்டாயமாகப்படும். இதற்கு மாறாக இந்த நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளும் அரசு மானியமும் வழங்கப்படும்.


IBNLive.com > UP govt orders 30 per cent quota in private sector jobs : Uttar Pradesh, reservations, mayawati, private sector

அசோம்: இந்தி பேசுவோர்மீது மீண்டும் வன்முறை: 14 பேர் மரணம்

வெள்ளி இரவு கர்பி அங்லோங் மலைமாவட்டத்தில் டோலோராமா ரங்க் டெரொன் கிராமத்தில் ஆறு குழந்தைகள் உட்பட 14 இந்தி பேசும் மக்கள் மீது சரமாறியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் 14 பேர் மரணமடைந்தனர்;மேலும் மூவர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் திலீப் சாஹூவின் வீட்டிலிருந்த அரிசி மில்லிற்கும் தீ வைத்தனர். குடும்பத்தலைவரான தில்லி சாஹூ தனது பிகார் கிராமத்திற்கு சென்றிருந்த நேரம் இது நடந்துள்ளது. இவர் வீட்டை அடுத்துள்ள ராம்குமார் சிங், ராம் நரேஷ் சிங் மற்றும் தினநாத் சர்மா ஆகியோர் வீடுகளிலும் உள்ளே நுழைந்து குடும்பத்தினரை சுட்டுக் கொன்றனர்.

மேலும்.Assam: 14 Hindi-speaking people slain

டென்னிஸ்: பூபதி/விஸ்னர் ஜோடி பெயஸ்/தாம் ஜோடியை வென்றது

மகேஷ் பூபதியும் செக் நாட்டு கூட்டாளி பவெல் விஸ்னரும் கனடாவின் மொன் டிரியலில் நடக்கும் $2.2 மிலியன் டாலர் பரிசுள்ல ரோஜெர்ஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தின் கால் இறுதிப் போட்டியில் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் லியண்டர் பெயஸ் மார்டின் தாம் ஜோடியை 7-6(7), 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வென்றனர்.

Bhupathi-Vizener beat Paes-Damm

ஜம்மு காஷ்மீரில் இராணுவ கிடங்கில் தீ:மக்கள் ஓட்டம்

தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருட்கள் கிடங்கில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தினால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதிகாரிகள்அடுத்துள்ள கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர். காவல்துறையினர் இதுவரை இராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் முப்பதுபேர்வரை கயமடிந்திருப்பதாகக் கூறினர். தீயினால் எழுந்த தொடர்ந்த குண்டு வெடிப்புகளால் அருகேயிருந்த மக்கள் இங்குமங்கும் ஓடினர். மிகப் பெரிய புகைமூட்டம் எழுந்துள்ளது.

மேலும்...Fire in JK arms depot; villagers flee area

பிஹார்: மதிய உணவு சமைக்க தலித் தடுக்கப் பட்டார்

ஊரக இந்தியாவில் பரவியுள்ள தீண்டாமையின் கோர முகத்தைக் காட்டுமாறு பிகாரில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உனவு சமைப்பதற்கு தலித் பெண்ணொருவர் தடுக்கப் பட்ட நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ரோக்டாஸ் மாவட்டத்தில் பிப்ரி என்ற கிராமத்தில் பெரும்பான்மையான பிராமணர்கள் இவ்வாறு செய்திருக்கின்றனர்.கடந்த இரண்டு மாதங்களாக இப்பள்ளியில் மதிய உணவு தயாரிக்கப் படுவதில்லை.

முழு விவரங்களுக்கு...Bihar: Dalit barred from cooking mid-day meal

-o❢o-

b r e a k i n g   n e w s...