மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், பூவா/தலையா-வை வென்ற இந்தியா, பந்தை இங்கிலாந்திடம் ஒப்படைத்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் அங்கம் வகித்த முன்னாஃப் படேலுக்கு பதில் அஜித் அகர்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
துவக்க ஆட்டக்காரர் கங்குலி, அணித்தலைவர் டிராவிட், கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மூன்று விக்கெட் இழப்புக்கு 32 ஓட்டங்களே எடுத்த நிலையில் டென்டுல்கரின் அரை சதம், இந்தியாவின் சரிவை தடுத்து நிறுத்தியது.
34 ஓவர் முடிவில் மூன்றரை ஓட்டம் வீதம் நான்கு பேரை இழந்து 123 ஓட்டங்களை இந்தியா எடுத்துள்ளது
நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் வானிலையால் போட்டியில் மழை குறுக்கிடுமோ என்ற சந்தேகமும் உள்ளது.
BBC SPORT | Cricket Scorecard
4th ODI: England v India at Manchester, Aug 30, 2007 - Cricinfo
Thursday, August 30, 2007
நான்காவது ஒருநாள்: டென்டுல்கர் அரை சதம் அடித்தார்
Labels:
இந்தியா,
கிரிக்கெட்,
விளையாட்டு
Posted by Boston Bala at 9:20 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
7 comments:
இந்தியாவை மழையாவது கைவிடாமல் காப்பாற்றுமா?
கிழவர்கள் கிரிகெட்டை பார்க்கும் பழக்கம் இந்தியாவில் இன்னும் எத்தனை நாளைக்கு..
துரத்திவிடுங்கப்பா.. கிழவர்களை..
ஒரு போட்டியில் ஆட வேண்டியது.. நூறு போட்டியில் ஓசியில் விளையாடவேண்டியது.. இது பல காலம் நடக்கிறது..
என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..
தோனி 13 ஓட்டமெடுத்து ஆட்டமிழந்தார்
140/5 (37.4 ov)
அதிரடி அகர்கர் களமிறங்கி உள்ளார்.
இனி செய்திகள் இப்படி வரலாம்: "டெண்டுல்கர் இருபது ஓட்டங்களை கடந்தார்" :))
who is that small standinng in the picture (while tossing)?.
இங்கிலாந்து வெற்றி பெற 213 ஓட்டங்களை 4.26 வீதம் அடிக்க வேண்டும்.
இந்தியா எத்தனை விக்கெட்களை வீழ்த்தும்?
England - 101/5 (18.0 ov)
---who is that small standinng in the picture---
தெரியவில்லை :(
Post a Comment