யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நேற்று [ஞாயிற்றுக் கிழமை] மிகவும் விமர்சையாகவும் அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. காலை7.00 மணிக்கு இடம் பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு தேரில் பவனி வருவதற்காக அடியவர்களின் அரோகரா கோசத்துடன் அன்னை வெளியில் வந்தார்.
பகல் 9.15 மணிக்கு தேர் இருப்பிடத்தில் இருந்து வீதி ஊர்வலமாக ஆரம்பித்து பகல் 10.00 மணிக்கு இருப்பிடத்தை வந்தடைந்தது. யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான அடியவாகள் காலை முதல் ஆலயத்தில் கூடத் தொடங்கினார்கள்.
தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள், காவடிகள் எனப் பலவும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.
இடம் பெயர்ந்து பல்வேறு நெருக்கடிக்குள் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் எனக் கூறி அழுது புலம்பிய காட்சிகள் அனைவரின் மனத்தையும் தொடுவதாகக் காணப்பட்டது.
Source [தகவல் ஆதாரம்]: www.pathivu.com
No comments:
Post a Comment