.

Tuesday, August 28, 2007

வீரபாண்டி ஆறுமுகத்தை நீக்க ஜெ. கோரிக்கை.

ஒரு மாநில அமைச்சர் இதுபோல் மத்திய அரசை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எங்கும் கண்டிராத ஒன்று. இதற்கிடையே சேலம் ரயில்வே கோட்டம் கண்டிப்பாக அமையும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ளார். தங்களுக்கு வேண்டிய இலாகாக்கள் தரப்படவில்லை என்றால் மத்திய அரசில் பங்கேற்க மாட்டோம் என்று மத்திய அரசை மிரட்டிய கருணாநிதி, சேலம் ரயில்வே கோட்டம் பிரச்சினையில் மட்டும் ரயில் மறியல் போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஏன்? போராட்டம் நடத்தாமலேயே லாலு பிரசாத்திடம் பேசி இப்போது பெற்ற அதே உறுதிமொழியை பெற்றிருக்கலாமே?

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு சேலம் ரயில்வே கோட்டம் விரைவில் அமைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கு அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கும்.

ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, அரசியல் சட்டத்தின்முன் செய்த பதவி பிரமாணத்துக்கு விரோதமாக, சட்டத்துக்கு புறம்பாக வன்முறை செயலில் ஈடுபட்டதை அதிமுக கண்டிக்கிறது. மேலும் அமைச்சரவையில் இருக்க வீரபாண்டி ஆறுமுகம் தகுதியற்றவர். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

(தினமணியிலிருந்து)

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...