கும்பகோணம், ஆக. 25-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட போட்டி அமைப்பு இந்திய கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.) ஆகும். இதன் செயல் தலைவராக கபில்தேவ் நியமிக்கப்பட்டார்.
ஐ.சி.எல். அமைப்புடன் தொடர்பு வைத்ததற்காக பெங்களூரில் இயங்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ.) தலைவர் பதவியில் இருந்து கபில்தேவை பி.சி.சி.ஐ. நீக்கியது. கபில்தேவ் நீக்கத்துக்கு முன்னாள் வீரர்கள் பிரசன்னா, சபாகரீம் கண்டனம் தெரிவித் திருந்தனர்.
கபில்தேவ் மீதான நடவடிக்கை சரியானதுதான் என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட்லீக் அமைப்பு முற்றிலும் விளம்பரத்திற்காகவும், வியாபார நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் கபில்தேவ் மீது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது சரியானதுதான் இதில் எவ்வித தவறும் இல்லை.
மேலும் செய்திக்கு மாலை மலர்
Tuesday, August 28, 2007
கபில்தேவை நீக்கியது சரி - ஸ்ரீகாந்த்
Labels:
இந்தியா,
கிரிக்கெட்
Posted by சிவபாலன் at 9:38 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
சர்வாதிகரத்தை எதிர்க்கும் வகையிலும் அமைந்து உள்ளது என்றும் சேர்த்து இருக்கலாம்...
கபில் இருந்த பதவி ஸ்ரீகாந்த் க்கு கிடைக்குமா?
நாகை சிவா
அவ்வளவு சீக்கிரம் மெதராஸிக்கு அந்தப் பதவிக் கிடைக்குமா என தெரியவில்லை..:)
கிடைக்கலாம்....
கபில் தேவை நீக்க bcci க்கு அதிகாரம் இருக்கு தவறும் எதுவும் இல்லை, ஒரே நேரத்தில் எப்படி ஒருவரால் இரு வேறு எதிரான அமைப்புகளுக்கு உண்மையாக உழைக்க முடியும், நியாயமா பார்த்தா கபில் முதலில் அவராகவே பதவி விலகிட்டு ,icl இல் சேர்ந்து இருக்க வேண்டும்.
சர்வதிகாரத்தை எதிர்க்கவென்றால் இத்தனை நாளாக என்ன செய்தாராம் கபில், இதற்கு முன்னரும் சரியான செலக்ஷன் நடக்கவில்லை என்ற போது அதனை சரி என்று சொன்னவர் தானே!
மேலும் கிரன் மோரே வாய்ப்பு அளிப்பதற்கு பணம் வாங்கினார் என குற்றம் சாட்டப்பட்ட ஒரு தேர்வாளர்.
அவரெல்லம் icl இல் சேர்ந்து தூய்மையான கிரிக்கெட் வளர்க்கப்போறாரா?
தூய்மையான கிரிகெட்..Ha Ha Ha..
நீங்க வேற..
கிரிகெட்டில் எல்லாரும் பண முதலைகள்.. பாவம் மக்கள்!
Post a Comment