.

Tuesday, August 28, 2007

காஸ்ட்ரோ குறித்து அமெரிக்காவில் 'வதந்தி'!

கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டதாக அமெரிக்காவில் மீண்டும் வதந்தி பரவியுள்ளது.

ஆனால் இது வெறும் வதந்திதான், காஸ்ட்ரோ நல்ல உடல் நலகத்துடன் உள்ளார் என்று கியூப அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கீழே, கரீபியன் கடலில், கரிவேப்பிலை அளவுக்கு உள்ள குட்டித் தீவுதான் கியூபா. அமெரிக்காவின் நீண்ட கால எரிச்சல். கியூபாவின் தலைவராக, அதிபராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார் காஸ்ட்ரோ. புரட்சி வீரனானா காஸ்ட்ரோவை பதவியிலிருந்து நீக்க துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அவரை அகற்றவும், கொலை செய்யவும் கூட பலமுறை முயற்சிள் நடந்தன. ஆனால் அத்தனையையும் மீறி மக்கள் ஆதரவுடன் கியூபாவை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ. பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய உடல் நலக்குறைவு காரணமாக ஆட்சி அதிகார பொறுப்பை தன்னுடைய தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி டிவியில் பேட்டி கொடுத்தார். அதன்பின்பு கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியன்று அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படம் டிவியிலோ அல்லது பத்திரிக்கையிலோ வரவில்லை. இந்நிலையில் பிடல் காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்று கியூபா நாட்டினர் அதிகம் வசித்து வரும் அமெரிக்காவின் மியாமி நகரில் செய்தி பரவியது. இதனால் கியூபாவிலும் கூட கவலை பரவியது. ஆனால் இது வெறும் வதந்திதான் என்று கியூப அமைச்சர் ஒருவர் மறுத்துள்ளார். காஸ்ட்ரோ நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வழக்கம் போல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி சிலரால் கிளப்பப்பட்ட வதந்தி. காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்று கூறுபவர்கள் நிச்சயம் நல்ல மன நிலையுடன் கூடியவர்களா இருக்க முடியாது. இவ்ரகள் இறந்து விட்டார் என்று சொல்லச் சொல்ல அவர் இன்னும் பல காலம் உயிரோடு இருந்து எங்களை வழி நடத்திச் செல்வார் என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...