.

Wednesday, August 29, 2007

பணம் கடத்த முயன்ற இரு இந்தியப் பிரஜைகள் கொழும்பில் கைது

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயத் தாள்களை எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு இந்தியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இன்று (ஓகஸ்ட் 29) பிற்பகல் இந்த இரண்டு இந்தியப் பிரஜைகளும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு செல்வதற்காக முயற்சித்த வேளையில், விமான நிலைய அதிகாரிகளினால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டுள்ளனர்.


இவ்வேளையில்,இவர்கள் நாணயத் தாள்களை விழுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இவர்கள் நாணயத் தாள்களை விழுங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு இவர்கள் இருவரும் விழுங்கியிருந்த வெளிநாட்டு நாணயத் தாள்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.



தகவல் : http://lankadissent.com

2 comments:

வெற்றி said...

இவர்கள் தமிழகத் தமிழர்களோ தெரியாது. தமிழர்கள் என்றால் சும்மா தமிழர்கள் என்ற காரணத்தினாலேயே சிங்களவர் கள்ளச் சாட்டுக்கள் சொல்லிக் கைது செய்திருப்பர்.

மேலதிக விபரங்கள் வந்தால்தான் உண்மை பொய் தெரியும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மேலதிக விபரம் கிடைத்தால் இடவும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...