உலகின் மிகப்பெரிய வைரம்
------------------------------------
தென் ஆப்பிரக்காவின் ஒரு சுரங்கத்தில் இருந்து உலகத்திலேயே மிகபெரிய வைரம் வெட்டிடுக்கப்பட்டிருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு சுரங்கத்தின் பங்குதாரர் BBC செய்தி நிறுவனத்திடன் தெரிவித்திருக்கிறார். அவரின் கூற்றை துறையின் வல்லுனர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
முழு செய்தி இங்கே
தெள்ளத்தெளிவான நிலாவின் புகைப்படங்கள்
-----------------------------------------------
1970-களில் அப்போல்லோ வானூர்தியில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் படங்கள் பலவற்றை அரிசோனா பல்கலைகழகம் ஸ்கேன் செய்து இணையத்தில் வெளியிட இருக்கிறது.
விரிவான செய்தி இதோ
கோப்புகளை சேமிக்க உலகம் முழுக்க ஒரே ஃபார்மேட்
------------------------------------------------------------------
கணிணியில் கோப்புகளை (documents) "சேமிக்க Open XML" எனும் ஃபார்மேட் (format) ஒன்றினை உலக நியதியாக்க மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் முயன்று வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தை நம்ப முடியாது,வருங்காலத்தில் எல்லோரும் அந்த நிறுவனத்தையே சார்ந்து இருக்கும் நிலையை இது ஏற்படுத்தி விடும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதை பற்றிய செய்தி இதோ
ஆதாரம்:
http://news.bbc.co.uk/1/hi/world/africa/6966540.stm
http://news.bbc.co.uk/1/hi/technology/6966655.stm
http://www.reuters.com/article/technologyNews/idUSL2824601520070828
Wednesday, August 29, 2007
அறிவியல் இன்று - 29/08/2007
Labels:
அறிவியல்
Posted by CVR at 7:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
6 comments:
Open XML stumbles in India
CVR,
அறிவியல் இன்று' பகுதியில் தினமும் கலக்கறீங்க, வாழ்த்துகள்
சிவிஆர்...
நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டியில்..
இந்த தகவல் இல்லை...
"அவரின் கூற்றை துறையின் வல்லுனர்கள் ஏற்க மறுக்கின்றனர்"...
இது நிருபிக்கப்பட்டால் அது ஒரு சரித்திர நிகழ்வாக இருக்கும் என்று தானே சொல்லியிருக்கிறது...
விளக்குங்கப்பா..
@பாஸ்டன் பாலா
இதை நானும் பார்த்தேன்!! கோர்த்துவிட்டத்ற்கு நன்றி!! :-)
@வாசகன்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வாசகன்!! :-)
@TBCD
//அவரின் கூற்றை துறையின் வல்லுனர்கள் ஏற்க மறுக்கின்றனர்.//
என்று நான் குறிப்பிட்டது
BBC பக்கத்தில் உள்ள
//But industry experts are sceptical about the unconfirmed claim.//
எனும் வாக்கியத்தை ஆதாரமாக கொண்டது.
நான் அறிந்தவரை அந்த வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு "ஆதாரபூர்வமற்ற இந்த செய்தியை வல்லுனர்கள் ஏற்க மறுக்கின்றனர்" என்று தோன்றியது!
sceptical என்பதற்கு சந்தேகப்படுகிறார்கள் என்று கூட பொருள் கூறலாம் ஆனால் அந்த வாக்கியத்தில் மறுக்கிறார்கள் என்ற பொருள் தான் வலுப்பெற்றிருந்ததாக எனக்கு தோன்றியது
// "ஆதாரபூர்வமற்ற இந்த செய்தியை வல்லுனர்கள் ஏற்க மறுக்கின்றனர்"///
இது 'டி பியர்ஸ்' செய்தித்தொடர்பாளர் கூறியிருப்பதாக அந்த கட்டுரையில் கூறியிருக்கிறார்கள்!!
நான் அந்த செய்தியை இந்த பதிவில் குறிப்பிடவில்லை. அதை பற்றி சொல்லுவதாக இருந்தால் அது 'டி பியர்ஸ்' செய்தித்தொடர்பாளர் கூறியதாக சொல்லியிருப்பேன்!! :-)
கருத்துக்களுக்கு மிக்க நன்றி! :-)
Post a Comment