.

Wednesday, August 29, 2007

ஷோலே பட உரிமை: ரூ400 கோடி

இந்தி திரைப்படமான ஷோலே இரமேஷ் சிப்பி இயக்கி ஜிபி சிப்பி தயாரிப்பில் வெளிவந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம். கப்பர்சிங்கின் வில்லத்தன சிரிப்பும் பசந்தியின் தொடர்ந்த வாயாடிப் பேச்சும் இன்னும் அதன் ஈர்ப்பை விடவில்லை. இந்தப் படத்தின் கதையை ஒட்டி தென்னக இராம்கோபால் வர்மா புதிய ஷோலே படத்தை எடுத்துவருகிறார். மோகன்லால், அமிதாப் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படம் சர்ச்சையை கிளப்பியது. உரிமை மீறல் வழக்கு காரணமாக முதலில் 'இராம்கோபால்வர்மாவின் ஷோலே' என்றும் பின்னர் இராம்கோபால்வர்மாவின் ஆக் 'என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் பிரிதீஷ் நந்தியின் தயாரிப்பு நிறுவனம் ஷோலே படத்தின் உரிமத்தை அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து ரூ400 கோடி($100 மில்லியன்)க்கு வாங்கியுள்லதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி இவர்களே இப்படத்தை மீண்டும் எடுக்கவோ படத்தை ஒட்டிய முன்கதையையோ பின்கதையையோ எடுக்கவும், சித்திரங்களாலான படமெடுக்கவோ உரிமை உள்ளது.

இது பற்றிய செய்தி துணுக்கு: It's official: Pritish Nandy ki Sholay-Entertainment-Media / Entertainment -News By Industry-News-The Economic Times

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...